உண்மை சரிபார்ப்பு: லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் ஷாருக்கான் நிறுத்தப்பட்டார் என்கிற பழைய செய்தி புதிய செய்தியைப் போல் பகிரப்பட்டு வருகிறது.

விஷ்வாஸ் நியூஸ் நடத்திய புலனாய்வில் இந்த வைரல் க்ளைம் தவறானது என்பது தெரியவந்தது. உண்மையில் இந்த வீடியோ 2016 ஆண்டைச் சேர்ந்தது. உண்மையில், சமீபத்தில் ஷாருக்கான் எந்த அமெரிக்க விமானநிலையத்திலும் தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி எதுவும் இல்லை.

புதுதில்லி (விஷ்வாஸ் நியூஸ்). பாலிவுட் நடிகர் ஷாருக் கான் லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோ பல்வேறு சமூக தளங்களில் வைரலாக பரவிவருகிறது. இப்போது இந்த வீடியோவை பகிர்வதன் மூலம் இந்தச் செய்தி சமீபத்தியது என்பதாக காட்டுவதற்கான ஒரு முயற்சி செய்யப்படுகிறது. விஷ்வாஸ் நியூஸ் தன்னுடைய புலனாய்வில் இந்த க்ளைம் தவறானது என்பதைக் கண்டுபிடித்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ 2016 ஆண்டு வந்த ஒன்று. சமீபத்தில் ஷாருக் கான் அமெரிக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக எந்தச் செய்தியும் வரவில்லை.

வைரலாக பரவுவது எது

Wsm.Tv என்கிற முகநூல் பயனர் ஏப்ரல் 24 அன்று வைரல் போஸ்ட் ஐ பகிர்ந்தார். வீடியோவுடன் வந்த வாசகத்தில் இவ்வாறு இருந்தது, “ஷாருக் கான் அமெரிக்க விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டது ஏன்.”

புலனாய்வு

News24 லோகா இந்த வைரல் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இந்த வைரல் போஸ்ட்டின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதற்கு விஷ்வாஸ் நியூஸ், சில கீவேர்டுகளுடன் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் கருவியைப் பயன்படுத்தியதியது. இந்த வீடியோ News24 சரிபார்க்கப்பட்ட யூடியூப் சேனலில் ஆகஸ்ட் 12, 2016 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டோம். அதனுடன் இணைந்த விவரணையில் ”ஷாருக் கானை விமானநிலையத்தில் நிறுத்தி வைத்ததற்காக அமெரிக்க சுங்கத்துறை மன்னிபபு கேட்டது” என்று இருந்தது.

2016ல் ஷாருக் கான் லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் என்கிற ஒரு செய்தியை Jagran.com–யிலும் கண்டோம்.

அதன் பின்னர், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் மற்றும் யுஎஸ் ஸ்டேட் டிபார்ட்மென்ட் இந்த நிகழ்வுக்காக மன்னிப்பு கேட்டன.

இந்த செய்தித் தேடலைச் செய்தபோது, அமெரிக்க விமானநிலையங்களில் ஷாருக்கான் 2016 ஆண்டு தவிர 2009 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்தோம். 2016க்குப் பிறகு ஷாருக் கான் எந்த நாட்டிலும் நிறுத்திவைக்கப்பட்டதான செய்தி எதுவும் இல்லை.

ஜக்ரனின் (Jagran) பொழுபோக்குச் செய்தி நிருபர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவாவிடம் இது குறித்து கேட்டோம். அவரும் இத்தகைய நிகழ்வு எதுவும் சமீபத்தில் நிகழவில்லை என்பதை உறுதிசெய்தார்.

புலனாய்வின் முடிவில், இந்த வைரல் வீடியோவை உருவாக்கிய பயனரின் ஃபேஸ்புக் ப்ரொஃபைலை விஷ்வாஸ் நியூஸ் சரிபார்த்தது. இந்த Wsm.Tv என்கிற ஃபேஸ்புக் பக்கம் 2,802 ஃபாலோயர்களைக் கொண்டுள்ளது என்பது தெரியவந்தது.

निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் நடத்திய புலனாய்வில் இந்த வைரல் க்ளைம் தவறானது என்பது தெரியவந்தது. உண்மையில் இந்த வீடியோ 2016 ஆண்டைச் சேர்ந்தது. உண்மையில், சமீபத்தில் ஷாருக்கான் எந்த அமெரிக்க விமானநிலையத்திலும் தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி எதுவும் இல்லை.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்