உண்மை சரிபார்ப்பு: பழைய மற்றும் திருத்தப்பட்ட ஷாருக் கானின் புகைப்படம் போலியான உரிமைக் கோரிக்கையுடன் வைரலாக உள்ளது
முடிவு விஷ்வாஸ் நியூஸ் இதை பரிசீலனை செய்தபோது, இந்த உரிமைக் கோரிக்கை போலி என்று கண்டுபிடித்தோம். அதன் மூலப் படம் 2017-ஆம் ஆண்டுக்கானது. அதில் ஷாருக் கானின் கண்கள் திருத்தும் கருவிகள் மூலம் சிவந்ததாக ஆக்கப்பட்டிருந்தது.
- By: Pallavi Mishra
- Published: Nov 8, 2021 at 01:59 PM
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): ஷாருக் கான் மிகவும் வேதனையுடன் இருப்பதுபோல ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் ஷாருக்கின் கண்கள் சிவந்து உள்ளன மேலும் அவருடைய தாடியும் வளர்ந்திருக்கிறது. அந்தப் பதிவில் இந்தப் படம் சமீபத்தயது என்றும் அவருடைய மகன் ஆர்யன் கான் காவலில் வைக்கப்பட்ட பிறகு ஷாருக் கானுக்கு இவ்வாறு ஏற்பட்டது என்றும் உரிமைக் கோரிக்கை எழுப்பப்பட்டது. விஷ்வாஸ் நியூஸ் இந்தப் பதிவை சரிபார்க்கும் போது, அந்த உரிமைக் கோரிக்கை போலி என்று நாங்கள் கண்டு பிடித்தோம். அதன் மூலப் படம் 2017-ஆம் ஆண்டுக்கானது. அதில் ஷாருக் கானின் கண்கள் திருத்தும் கருவிகள் மூலம் சிவந்ததாக ஆக்கப்பட்டிருந்தது.
வைரல் பதிவில் இருந்தது என்ன?
முகநூல் பயனர் Idiotic Minds இந்த படத்தை பகிர்ந்தார். அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “குழந்தை பற்றிய கவலை.”
ஆவணப்படுத்தப்பட்ட பதிவின் பதிப்பை இங்கே பார்க்கவும்.
புலன் விசாரணை
எங்கள் புலன் விசாரணையைத் தொடங்குவதற்காக, நாங்கள் முதலில் அந்த வைரல் படத்தின் ஒரு கூகிள் ரிவர்ஸ் இமேஜ் தேடலைச் செய்தோம். இந்தப் படத்தை இந்தியா டுடே-வின் வலைதளத்தில் இருந்த ஒரு 2017 செய்திக்கதையில் கண்டுபிடித்தோம். அந்தச் செய்தியில் பயன்படுத்தப்பட்டிருந்த புகைப்படத்தில், ஷாருக் கானின் கண்கள் சிகப்பாகக் கூட இல்லை. அந்தச் செய்தியின்படி அந்தப்படம் அலியா பட்டின் 24-வது பிறந்த நாளின் போது எடுக்கப் பட்டது.
நாங்கள் இந்தப் புகைப்படத்தை அது அலியா பட்டின் 24வது பிறந்த நாளின் போது எடுக்கப்பட்டது என்ற அதே விவரத்தோடு, த க்விண்ட்-இல் இருந்த ஒரு 2017 அறிக்கையிலும் கண்டுபிடித்தோம். அந்தப் படத்திலும், ஷாருக் கானின் கண்கள் சிகப்பாக இல்லை.
புலன் விசாரணையைத் தொடர்ந்து, விஷ்வாஸ் நியூஸ் மும்பையில் தைனிக் ஜாக்ரனுக்காக பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளை பற்றி எழுதும் செய்தியாளர் ஸ்மிதா ஸ்ரீவாஸ்தவாவை தொடர்பு கொண்டது. அவர் இந்தப் புகைப்படம் தற்போதையது அல்லது, 2017-க்கு உரியது என்று சொன்னார்.
மும்பை கடற்கரையில் ஒரு உல்லாசக் கப்பலில் நடந்த ஒரு களியாட்ட கொண்டாட்டத்தில் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது சம்பந்தமாக ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அதைப் பற்றிய முழு செய்தியையும் இங்கே படிக்கலாம்.
இப்போது இந்த போலியான பதிவைப் பகிர்ந்த முதநூல் பயனர் Idiotic Minds பற்றிய சமூக அலசலைச் செய்ய வேண்டிய நேரம் வந்தது. அந்தப் பக்கம் 2,388,163 முகநூல் தொடர்பாளர்களைக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.
निष्कर्ष: முடிவு விஷ்வாஸ் நியூஸ் இதை பரிசீலனை செய்தபோது, இந்த உரிமைக் கோரிக்கை போலி என்று கண்டுபிடித்தோம். அதன் மூலப் படம் 2017-ஆம் ஆண்டுக்கானது. அதில் ஷாருக் கானின் கண்கள் திருத்தும் கருவிகள் மூலம் சிவந்ததாக ஆக்கப்பட்டிருந்தது.
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.