இந்த வைரல் பதிவு தவறானது. நாக்பூரில் சூதாட்ட முக்கியப் புள்ளியான பினேக்கர் கொலை செய்யப்பட்ட காணொளி உத்தரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டார் என்ற தவறான கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது.
புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). ஒரு சிக்னலில் நிற்கும் காருடைய ஓட்டுநரை பட்டப்பகலில் திடீரென சில நபர்கள் தாக்கும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்கி அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என்ற கூற்றுடன் இந்த காணொளி பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்று தெரியவந்தது. இந்த காணொளி நாக்பூரைச் சேர்ந்த ஒரு சூதாட்ட முக்கிய புள்ளி கொலை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
கூற்று
பேஸ்புக் பயனர் மது D உரகனகன் செப்டம்பர் 30 அன்று ஒரு சி.சி.டி.வி காட்சியை பதிவேற்றி, “ஆளும் உயர் சாதியான நாஜி ஆர்.எஸ்.எஸ்-பிஜேபியை சேர்ந்த நபர்கள் ஏழை பட்டியல் சாதி மக்களுக்கு அரசாங்கத்தின் நிதியை விநியோகிக்க வேண்டாம் என்ற தங்களின் அறிவுறுத்தல்களை புறக்கணித்ததால் உ.பி.யில் ஒரு பட்டியல் சாதி ஐ.ஏ.எஸ் அதிகாரியை வெட்டிக் கொலை செய்தனர். அவரது 16 வயது மகளை காரில் பாலியல் வன்கொடுமை செய்தனர், ” என்று எழுதியுள்ளார்.
அந்த பேஸ்புக் இடுகையினை இங்கே காணலாம்.
விசாரணை
நாங்கள் இந்த வைரல் காணொளியை இன்விட் கருவியில் பதிவேற்றி, கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தோம். பின்பு கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி அவற்றை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில் இந்த காணொளியை பல யூடியூப் சேனல்களில் எங்களால் காண முடிந்தது. செப்டம்பர் 28 அன்று நியூஜே யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட இந்த காணொளியில் , “சூதாட்ட முக்கியப் புள்ளியான பால்யா பினேகர் (எ) கிஷோர் பினேகர் நாக்பூரில் குத்திக் கொல்லப்பட்டார் … கொலை செய்தவர்கள் பால்யாவின் காரைச் சுற்றி வளைத்து, அவரை வெளியே இழுத்து, கத்தி மற்றும் பிற கூர்மையான ஆயுதங்களால் அவரைக் குத்தினர். இந்தத் தாக்குதல் அருகிலிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து கொலைகாரர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இணையத்தில் செய்திகளைத் தேடியதில், செப்டம்பர் 26 அன்று தி லைவ் நாக்பூர் இணையதளத்தில் வெளியிடப்பட்ட சூதாட்ட முக்கிய புள்ளியான பினேகரின் கொலை குறித்த செய்தியை எங்களால் காண முடிந்தது.
இதனை விசாரிக்க நாக்பூரின் ANI இன் பணியகத் தலைவர் சவுரப் ஜோஷியைத் தொடர்பு கொண்டோம். இந்த வைரல் காணொளி நாக்பூரிலிருந்து நடந்த ஒரு சம்பவம் என்பதை அவர் நமக்கு உறுதிப்படுத்தினார். “கிஷோர் பினேக்கர் கொலை செய்யப்பட்டதற்காக நாக்பூர் குற்றப்பிரிவுத் துறையினர் சிலரை கைது செய்துள்ளனர்,” என்று ஜோஷி கூறினார்.
இந்த வைரல் காணொளியைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு பேஸ்புக்கில் 1,277 பின்தொடர்பவர்கள் இருப்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. நாக்பூரில் சூதாட்ட முக்கியப் புள்ளியான பினேக்கர் கொலை செய்யப்பட்ட காணொளி உத்தரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டார் என்ற தவறான கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923