உண்மை சரிபார்ப்பு: குஜராத் முதல்வரின் இந்த வைரல் காணொலி தவறான கூற்றுடன் வைரலாகிறது

இந்த வைரல் கூற்று தவறானது. முதல்வர் விஜய் ரூபானி கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டார்.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவு, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இறந்துவிட்டார் என்ற கூற்றுடன் மேடை ஒன்றில் அவர் மயக்கமுற்று சரிந்து விழுந்த காணொலியைக் கொண்டுள்ளது.

இந்தக் கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தி விசாரணையில் தெரியவந்துள்ளது.  முதல்வர் ரூபானி கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டார் என்று கூறி பாஜகவின் செய்தித் தொடர்பாளர் இந்த வைரல் கூற்றினை மறுத்துவிட்டார்.

கூற்று

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பொது மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, மயக்கமுற்று சரிந்து விழும் காணொலியை, அவர் இறந்துவிட்டார் என்ற கூற்றுடன் சமூக ஊடக பயனர்கள் பலரும் பகிர்ந்துள்ளனர். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

இது குறித்த எங்கள் விசாரணையில், இந்த வைரல் காணொலியுடன் வெளியிடப்பட்ட பல செய்தி கட்டுரைகள் நமக்குக் கிடைத்தன.

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி ஞாயிற்றுக்கிழமை இரவு வதோதராவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் உடல் சோர்வு, பலவீனம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த அளவின் காரணமாக திடீரென மேடையில் சரிந்து விழுந்தார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் அகமதாபாத்தின் UN மேத்தா ஹார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று பிப்ரவரி 15 அன்று வெளியிடப்பட்ட டைனிக் ஜாக்ரானின் ஒரு கட்டுரை கூறுகிறது.

அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அதிலிருந்து குணமடைந்தார். அதைத் தொடர்ந்து, அவர் தனது சொந்த ஊரான ராஜ்கோட்டில் மாநகராட்சித் தேர்தலுக்கான தன் வாக்கினைப் பதிவு செய்தார் என்று பிப்ரவரி 22 அன்று வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய கட்டுரை கூறுகிறது.

இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் பாஜக செய்தித் தொடர்பாளர் யமல் வியாஸை தொடர்பு கொண்டு பேசினோம். இந்த வைரல் கூற்றுக்களை மறுத்த அவர், “முதல்வர் ரூபானி, கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகு முற்றிலும் நலமாக இருக்கிறார்.  கடந்த மூன்று நாட்களாக அவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்,” என்று கூறினார்.

கோத்ராவில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ரூபானி தனது ட்விட்டரில் ஒரு நேரடி காணொலியை வெளியிட்டு இருப்பதை  நம்மால் காண முடிந்தது.

இந்த வைரல் காணொலியைப்  பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், இப்பக்கம் 13,015 பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பதும், 21 ஜனவரி 2014 முதல் இப்பக்கம் செயலில் இருப்பதும் நமக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. முதல்வர் விஜய் ரூபானி கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டார்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்