X
X

உண்மை சரிபார்ப்பு: மாணவர்களுக்கு அரசு இலவச ஸ்மார்ட்போன்களை வழங்கவில்லை, வைரல் கூற்று தவறானது

இந்த வைரல் கூற்று தவறானது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் அரசு இலவச ஸ்மார்ட்போன்களை வழங்கவில்லை. அறியப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • By: ameesh rai
  • Published: Oct 8, 2020 at 01:33 PM
  • Updated: Oct 9, 2020 at 08:12 AM

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்).கொரோனா நோய்தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு அரசு இலவச ஸ்மார்ட்போன்களை வழங்கி வருவதாக சமூக ஊடகங்களில் ஒரு வைரல் செய்தி தெரிவிக்கிறது. பதிவுக்கான இணைப்புடன் அந்த செய்தி பகிரப்பட்டு வருகிறது.

விஸ்வாஸ் நியூஸின் வாட்ஸ்அப் சாட்பாட் (+91 95992 99372) மூலமாக உண்மை சரி பார்ப்பிற்காக நம்மிடையே இந்த கோரிக்கை வந்தடைந்தது. இது குறித்த எங்கள் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பது தெரியவந்தது. மேலும் இலவச மடிக்கணினிகளை அரசாங்கம் விநியோகிப்பது போன்ற வைரல் கூற்றுக்கு ஒத்த மத்த கூற்றுகளும் சமீபத்திய காலங்களில் வைரலாகி வருவதையும் நம்மால் காண முடிந்தது.

கூற்று

இணைப்பு ஒன்றோடு பகிரப்படும் இந்த வைரல் செய்தியில், “கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன, இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாணவர்களுக்கும் இலவச ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வழங்கப்படுகிறது… உங்கள் இலவச ஸ்மார்ட்போனைப் பெற இந்த இணைப்பிலிருக்கும் படிவத்தை நிரப்பவும்: http://bit.ly/Register-Free-Smartphone-Link. ” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ட்விட்டரிலும் எங்களால் காண முடிந்தது. 500 பின்தொடர்பவர்களைக் கொண்ட பிராண்ட் கிருஷ்ணா என்னும் ட்விட்டர் பயனர் இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார். இந்த ட்வீட்டினை இங்கே காணலாம்.

விசாரணை

நாங்கள் இந்தக் கூற்று குறித்து முதலில் இணையத்தில் தேடினோம். அனைத்து மாணவர்களுக்கும் இலவச ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தால், இந்நேரம் இது ஒரு பெரிய செய்தியாக இருந்திருக்கும். ஆனால் கூற்றினை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதற்கு நேர்மாறாக, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கும் கட்டுரையை எங்களால் காண முடிந்தது.

மேலும் செய்தியுடன் பகிரப்பட்ட இணைப்பை குறித்து விசாரித்ததில், இது Blogspot க்கான இணைப்பு என்பதும், இது எந்தவொரு பயனராலும் உருவாக்கப்படலாம் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. பெயர் மற்றும் தொடர்பு எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை நிரப்பக் கோரி இந்த இணைப்பு கேட்கிறது. படிவத்தை நிரப்ப கடைசி தேதி அக்டோபர் 10 என்றும் அது கூறுகிறது. அந்த இணைப்பில் உள்ள படிவத்தில் சில தவறுகளை (கீழே, அக்டோபர்) எங்களால் காண முடிந்தது.

விசாரணை நோக்கத்திற்காக, அந்த படிவத்தில் கேட்கப்பட்டிருந்த தகவல்களை நிரப்பினோம். அவற்றை நிரப்பிய பிறகு அடுத்த கட்டமாக, அந்த இணைப்பினை வாட்ஸ்அப்பில் பத்து பேருடன் பகிர்ந்து கொள்ளும்படி கேட்கப்பட்டிருந்தது. இதன்மூலம் இது கிளிக்பெயிட்டினை பயன்படுத்தி இணைப்பை அதிகம் பகிர்வதற்கான ஒரு முயற்சி என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.

கொரோனா நோய்தொற்று காரணமாக ₹ 9,000 அரசு வழங்குவதாக கூறிய இதேபோன்ற ஒரு பதிவை விஸ்வாஸ் நியூஸ் முன்பு உண்மை சரிபார்ப்பு செய்தது. இதுபோன்ற எந்த வலைப்பதிவு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று மக்களை எச்சரிக்குமாறு தேசிய தகவல் மையம்(என்ஐசி) உ.பி.யின் அலுவலர் ஒருவர் எங்களை முன்னரே கேட்டுக்கொண்டார். அந்த உண்மை சரிபார்ப்பு கட்டுரையை கீழே காணலாம்.

இந்த வைரல் இணைப்பை இணைய பாதுகாப்பு நிபுணர் ஆயுஷ் பரத்வாஜுக்கு அனுப்பினோம். அவர் இந்த இணைப்பைச் சரிபார்த்து, இது ஒரு கிளிக்பெயிட் இணைப்பு என்றும், பயனர் தரவுகளை திருடும் ஆபத்து இதில் இருக்கக்கூடும் என்றும் கூறினார். மேலும் அவர் மொபைல்களில் அணுகப்பட்ட மால்வேரின் கட்டுப்பாட்டை இதுபோன்ற கிளிக்பெயிட் மூலம் பெற முடியும் என்று விளக்கினார். தனிப்பட்ட தகவல்களை டார்க் வெப்பில் திருடலாம் மற்றும் விற்கலாம் என்பதையும் (ஹேக்கர்கள் மற்றும் இணைய மோசடி செய்பவர்கள் டார்க் வெப்பை பயன்படுத்துகிறார்கள்), ஈ-வாலெட்களை ஹேக்கிங் செய்வதன் மூலம் பயனருக்கு பணம் திருடப்பலாம் என்பதையும் அவர் நமக்கு விளக்கினார்.

இந்த வைரல் செய்தியைப் பகிர்ந்த ட்விட்டர் கணக்கினை ஆராய்ந்ததில், இது 491 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது என்பதும், ஆகஸ்ட் 2020 முதல் செயலில் உள்ளது என்பதும் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் அரசு இலவச ஸ்மார்ட்போன்களை வழங்கவில்லை. அறியப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later