முன்னாள் திமுக எம்எல்ஏ M அப்பாவு பாஜகவில் சேர்ந்ததாகக் கூறும் இந்தப் பதிவு தவறானது.
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுடன் முன்னாள் திமுக எம்.எல்.ஏ M அப்பாவு இருக்கும் புகைப்படம், அவர் பாஜகவில் இணைந்துவிட்டார் என்ற கூற்றுடன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு திருமண விழாவில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறி அப்பாவு இந்த கூற்றுகளை மறுத்துவிட்டார்.
கூற்று
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜக கட்சியில் சேர்ந்தார் என்ற கூற்றுடன் முன்னாள் திமுக எம்எல்ஏ எம்.அப்பாவுவின் புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, முதலில் இது பற்றிய செய்திகளை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், மூத்த நடிகரும், திமுக ஆதரவாளருமான சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் சேருவதற்கான தனது திட்டங்களை அறிவித்ததைப் பற்றி சமீபத்திய செய்திகளை நாங்கள் கண்டறிந்தாலும், M அப்பாவு பற்றிய இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த உண்மையான அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
இதனைத் தெளிவுபடுத்த நாங்கள் M அப்பாவுவை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், “இந்த வைரல் கூற்று தவறானது. ஒரு திருமண விழாவிலே இந்தப் புகைப்பபடம் எடுக்கப்பட்டது,” என்று கூறினார். ஒரு பேஸ்புக் பதிவையும் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டார். அதில் அந்த திருமண தம்பதியினரின் குடும்பத்தினர் இந்த புகைப்படம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் வசிப்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 605 பின்தொடர்பவர்கள் இருப்பதும் நமக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: முன்னாள் திமுக எம்எல்ஏ M அப்பாவு பாஜகவில் சேர்ந்ததாகக் கூறும் இந்தப் பதிவு தவறானது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923