இந்த வைரல் பதிவு தவறானது. முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக்விஜய் சிங்கின் மகள் பாஜகவில் சேரவில்லை. பீகார் மாநில பாங்காவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங்கின் மகள் ஸ்ரேயாசி சிங்கே பாஜகவில் இணைந்துள்ளார்.
புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). காங்கிரஸ் எம்.பி.யும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கின் மகள் பாஜகவில் சேர்ந்துள்ளதாக ஒரு வைரல் பதிவு கூறுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்பதும், பீகார் மாநில பாங்காவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரான திக்விஜய் சிங்கின் மகளான ஸ்ரேயாசி சிங்கே பாஜகவில் இணைந்துள்ளார் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
கூற்று
பேஸ்புக் பயனர் கமலேஷ் பிரசாத் சாஹு என்பவர் தனது பதிவில், “காங்கிரஸ் முதல்வர் திக்விஜய் சிங்கின் மகள் பாஜகவில் இணைகிறார்,” என்று எழுதியுள்ளார்.
இதேபோல், பேஸ்புக் பயனர் சூரஜ் கிரி கோஸ்வாமி என்பவர் ஸ்ரேயாசி சிங்கின் படத்தை பதிவேற்றி, “இது ஒரு அதிர்ச்சி, முன்னாள் காங்கிரஸ் முதல்வர் திக்விஜய் சிங்கின் மகள் பாஜகவில் இணைகிறார்!” என்று எழுதியுள்ளார்.
இந்த பேஸ்புக் இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
இதனை விசாரிக்க இச்சம்பவம் குறித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இணையத்தில் செய்திகளை தேடினோம். அவ்வாறு தேடியதில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங்கின் மகள் ஸ்ரேயாசி சிங் பாஜகவில் சேர்ந்தது குறித்த பல செய்தி அறிக்கைகள் எங்களுக்குக் கிடைத்தன. அக்டோபர் 4 ம் தேதி அன்று அமர் உஜாலாவின் வலைத்தளம் வெளியிட்டுள்ள கட்டுரையில், “துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவிலான வீராங்கனையும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங்கின் மகளுமான ஸ்ரேயாசி சிங், பாஜக தலைவர் பூபேந்திர யாதவ் முன்னிலையில் பாஜக கட்சியில் சேர்ந்தார்,” என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்ரேயாசி பாஜகவில் சேருவது குறித்த தகவலை உறுதிப்படுத்தும் ANI இன் ட்வீட்டையும் எங்களால் காண முடிந்தது.
விசாரணையின் அடுத்த கட்டமாக, பீகார் பத்திரிகைகளில் இது குறித்த செய்திகளைத் தேடியதில், இந்த செய்தியை டைனிக் ஜாக்ரானின் 5 அக்டோபர் பதிப்பிலும் எங்களால் காண முடிந்தது.
Jagran.com வெளிவந்த ஒரு கட்டுரையில், ஸ்ரேயாசி சிங்கின் தாயார் புத்துல் சிங்கும் ஒரு மத்திய எம்.பி என்பதும், அவரது தந்தையும் முன்னாள் பாங்கா எம்.பி. என்பதும், அவர் 2010 இல் இறந்தார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்துகொள்ள நைதுனியாவின் போபால் பணியகத் தலைவர் தனஞ்சய் பிரதாப் சிங்கைத் தொடர்பு கொண்டோம். இந்த வைரல் இடுகையை சரிபார்க்க அவர் திக்விஜய் சிங்கை அணுகினார். தனது மகள் பாஜகவில் சேருகிறார் என்ற கூற்றை மறுத்த திக்விஜய், ஸ்ரேயாசி சிங் தனது மகள் அல்ல என்று தெளிவுபடுத்தினார்.
வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் ஜார்க்கண்டின் பொகாரோவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு பேஸ்புக்கில் 1,837 நண்பர்கள் இருப்பதும், அக்கணக்கு மே 2017 முதல் செயலில் உள்ளது என்பதும் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக்விஜய் சிங்கின் மகள் பாஜகவில் சேரவில்லை. பீகார் மாநில பாங்காவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங்கின் மகள் ஸ்ரேயாசி சிங்கே பாஜகவில் இணைந்துள்ளார்.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923