விஷ்வாஸ் நியூஸ் புலன் விசாரணையில் FASTag ஏமாற்றுதல் பற்றி வைரல் ஆகும் காணொளி மற்றும் பதிவு போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): காரின் விண்ட்ஸ்க்ரீனைத் துடைக்கும்போது FASTag ஸ்டிக்கர் மீது தன் கடிகாரத்தைக் காட்டி நகர்த்தி ஒரு வழியில் செல்லுபவரை ஒரு சிறுவன் ஏமாற்றுவதாகக் காட்டும் ஒரு போலி காணொளி பல வலை தளங்களிலும் சமூக ஊடகத் தளங்களிலும் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. இது ஒரு புதிய வகை ஏமாற்று வேலை என்று அந்தக் காணொளி க்ளைம் செய்கிறது. இருந்த போதிலும், 3:45 நிமிடங்கள் நீளமுள்ள அந்தக் காணொளியை சரிபார்த்தபின், விஷ்வாஸ் நியூஸ் தன் புலன் விசாரணையில் அது போலி என்று கண்டுபிடித்தது.
ஷாம்லி நியூஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் ஒரு காணொளியை ஜூன் 24 அன்று அப்லோட் செய்துவிட்டு க்ளைம் செய்தது: யாரெல்லாம் அவர்கள் காரில் FASTag வைத்திருக்கிறீர்களோ, கவனமாக இருங்கள், இது ஒரு புது வித ஏமாற்றுவேலை, விண்டஸ்க்ரீன் துடைக்கப்ப்படும்போது உங்கள் கணக்கும் காலியாகி விடும்.’
ஃபேஸ்புக் பதிவின் உள்ளடக்கம் இருந்தவாறே தரப்படுகிறது. அதை வைரலாகப் பார்த்து, பல பயனர்கள் அதை மறுபகிர்வு செய்கிறார்கள். அந்தப் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விஷ்வாஸ் நியூஸ் முதலில் அந்த வைரல் காணொளியை மறு பரிசீலனை செய்து அந்த சிறுவன் விண்ட்ஸ்க்ரீன்-ஐ சுத்தப்படுத்துவதைப் பார்த்தது. FASTag மீது அவன் தன கடிகாரத்தை கொண்டுபோய் ஆட்டுவதையும் பார்க்க முடிந்தது. அந்தக் காணொளியை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ‘Baklol Video‘. என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள மூலக் காணொளிக்கு நம்மை செல்லுமாறு பணிக்கும் ஒரு அழைப்புக் குறிப்பைப் பார்த்தோம். அந்த ஃபேஸ்புக் பக்கத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்த பிறகு, அம்மாதிரியான காணொளியை எங்களால் கண்டுபிடிக்க மடியவில்லை. கூகுள் தேடல் மூலம் இந்தப் பக்கத்தைப் பற்றிய விவரங்களை சேகரித்தபோது, அதன் நிறுவனர் பங்கஜ் ஷர்மா என்று கண்டுபிடித்தோம். அந்த விவரங்களின் அடிப்படையில், நாங்கள் பங்கஜ் ஷர்மாவின் ஃபேஸ்புக் பக்கத்தைத் தேடினோம்.
புலன் விசாரணையைத் தொடர்ந்து, விஷ்வாஸ் நியூஸ், பாக்லோல் வீடியோவின் நிறுவனரான பங்கஜ் ஷர்மாவோடு தொடர்பு கொண்டோம். அந்த வைரல் காணொளி விழிப்புணர்ச்சிக்காக தயார் செய்யப்பட்டது என்று அவர் கூறினார். அது ஒரு எழுதித் தயாரிக்கப்பட்ட காணொளி, ஆனால் அது தவறாக வழிநடத்துவதாக மக்களுக்குத் தோன்றியதால், அந்தப் பக்கத்திலிருந்து அது விலக்கப்பட்டது.
தேடலின்போது Paytm-இன் அதிகாரப் பூரவமான ட்விட்டர் ஹேண்டிலில் ஒரு ட்வீட்டை நாங்கள் கண்டுபிடித்தோம். அதில் இந்த வைரல் காணொளி போலி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. Paytm FASTag பற்றி தவறாக வழிநடத்தும் தகவலை ஒரு காணொளி பரப்புகிறது என்று Paytm தன்னுடைய விளக்கத்தில் கொடுத்திருந்தது. NETC வழிகாட்டல்களின்படி, FASTag பணம் செலுத்தல்கள் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்களால் மட்டுமே துவக்கப்படும் மேலும் பல சுற்றுகள் பரிசோதனைக்குப் பின்னரே அவை ஒப்புக்கொள்ளப்படும். Paytm FASTag முழுவதும் பாதுகாப்பானது.
புலன்விசாரணையின்போது, FASTag NETC ட்விட்டர் ஹேண்டிலில் சமூக ஊடகங்களில் வைரல் ஆகும் அந்தக் காணொளி முழுவதும் அடிப்படை அற்றது மேலும் பொய் என்று கூறும் ஒரு ட்வீட்டைக் கண்டுபிடித்தோம்.
அடுத்து, அந்தப் போலியான பதிவை வைரல் செய்யும் பக்கத்தைப் பற்றிய விவரங்களை நாங்கள் சேகரித்தோம். ஷாம்லி நியூஸ் என்ற அந்த ஃபேஸ்புக் பக்கம் 17000-க்கும் அதிகமான நபர்களால் தொடரப்படுகிறது, மேலும் அது சில உள்ளூர் விளம்பரங்களையும் வெளியிடுகிறது.
निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் புலன் விசாரணையில் FASTag ஏமாற்றுதல் பற்றி வைரல் ஆகும் காணொளி மற்றும் பதிவு போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923