X
X

உண்மை சரிபார்ப்பு: ரஞ்சன் கோகாயின் போலி கணக்கு மூலம் வைரலாகும் ட்வீட்

முடிவுரை: விஸ்வாஸ் செய்தி புலனாய்வு செய்தததில் வைரல் ஸ்கிரீன் ஷாட்டை ரஞ்சன் கோகாய் ட்வீட் செய்யவில்லை என்பது தெரியவந்தது அது அவருடைய பெயரில் ஒரு போலியான கணக்கிலிருந்து செய்யப்பட்டது. வைரல் பதிவு போலியானது.

  • By: Umam Noor
  • Published: Sep 30, 2021 at 12:06 PM

புது டெல்லி (விஸ்வாஸ் செய்தி): ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரில் ஒரு போலி ஸ்கிரீன் ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. விஸ்வாஸ் செய்தி புலனாய்வுசெய்து, வைரல் ஸ்கிரீன் ஷாட்டை ரஞ்சன் கோகாய் ட்வீட் செய்யவில்லை என்று கண்டறியப்பட்டது, அது அவரது பெயரில் செய்யப்பட்ட போலி கணக்கிலிருந்து செய்யப்பட்டது. வைரல் பதிவு போலியானது.

கூற்று

ஒரு முகநூல் பயனர் வைரல் பதிவை பகிர்ந்துள்ளத்தில் ஒரு ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட் உள்ளது. த ட்விட்டர் ஹாண்டிலில் @தகோகாய் என்று கூறுகிறது மற்றும் ரஞ்சன் கோகாய் அவர்களுடைய புகைப்படத்தை காட்சிப்படுத்தியிருப்பதை படத்தில் காணலாம். அந்த ட்வீட் கூறுகிறது‘‘पहले मोदी हटावो, फिर योगी हटावो, फिर खट्टर हटावो, अब कह रहे हैं चलो SDM ही हटा दो, नाक कटने से बचा लो।’  (ஆங்கில பொழிபெயர்ப்பு: முதலில் மோடியை நீக்கவேண்டும் பிறகு யோகியை நீக்கவேண்டும் பிறகு கட்டாரை நீக்கவேண்டும், இப்போது அவர்கள் SDM ஐ நீக்குவோம், மூக்கை வெட்டாமல் காப்பாற்றுங்கள் என்று சொல்கிறார்கள். அதே ஸ்கிரீன்ஷாட்டில், ஒரு பயனரின் கருத்துரையும் காணலாம், ‘जय भारत। गोगोई जी।’.

பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே
உண்மை சரிபார்ப்பு: ரஞ்சன் கோகாயின் போலி கணக்கு மூலம் வைரலாகும் ட்வீட்

புலனாய்வு

ட்விட்டரில் @தகோகாய் கணக்கை ஸ்கேன் செய்து எங்கள் விசாரணையைத் தொடங்கினோம். கணக்கு விவரிப்பு இது ஒரு போலி கணக்கு என்றும், ரசிகர்கள் பக்கம் ரஞ்சன் கோகாய் பெயரில் உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அக்டோபர் 2019 இல் உருவாக்கப்பட்டது மற்றும் 1.16 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்தக் கணக்கை பின்தொடர்கிறார்கள். இந்த கணக்கின் சமூக வரியோட்டத்தில், செப்டம்பர் 10, 2021 அன்று செய்யப்பட்ட ட்வீட்டையும் நாங்கள் கண்டோம், இதன் ஸ்கிரீன் ஷாட் பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

விஸ்வாஸ் செய்தி டைனிக் ஜாக்ரனின் சிறப்பு நிருபர் மாலா தீட்சித்தை தொடர்பு கொண்டார். ரஞ்சன் கோகாய் அப்படி எந்த ட்வீட்டும் செய்யவில்லை என்று அவர் கூறினார்.

ரஞ்சன் கோகாய் பெயரில் ட்விட்டரில் பல போலி கணக்குகள் உள்ளன மற்றும் அந்த கணக்குகளால் செய்யப்பட்ட ட்வீட்களின் ஸ்கிரீன் ஷாட்கள் அடிக்கடி பல்வேறு சமூக ஊடகங்கள் கையாளுகையில் வைரலாகின்றன. கடந்த காலங்களிலும் ரஞ்சன் கோகாய் பெயரில் செய்யப்பட்ட போலி ட்வீட்களை விஸ்வாஸ் செய்தி உண்மையைச் சரிபார்த்தது. உண்மை சரிபார்ப்பு கதைகளை இங்கே படிக்கலாம்.

விஸ்வாஸ் செய்தி ஹிந்து ராஷ்டிரானுடைய முகநூல் பக்கத்தை சமூக வரியோட்டம் செய்தது அதில் போலியான பதிவு பகிரப்படிருந்தது. இந்த பக்கம் அக்டோபர் 3, 2019 அன்று உருவாக்கப்பட்டது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்,, அதை 119,188 பேர் பின்தொடர்கின்றனர்.

निष्कर्ष: முடிவுரை: விஸ்வாஸ் செய்தி புலனாய்வு செய்தததில் வைரல் ஸ்கிரீன் ஷாட்டை ரஞ்சன் கோகாய் ட்வீட் செய்யவில்லை என்பது தெரியவந்தது அது அவருடைய பெயரில் ஒரு போலியான கணக்கிலிருந்து செய்யப்பட்டது. வைரல் பதிவு போலியானது.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later