X
X

உண்மை சரிபார்ப்பு: டெல்லி டிராக்டர் பேரணியில் டாக்டர் கஃபீல் கான் பங்கேற்கவில்லை

இந்த வைரல் பதிவு தவறானது. ராஜஸ்தானின் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட டாக்டர் கஃபீல் கானின் காணொலியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம், டெல்லியில் டிராக்டர் பேரணியில் எடுக்கப்பட்டதாக வைரலாகி உள்ளது.

  • By: ameesh rai
  • Published: Jan 30, 2021 at 10:08 PM
  • Updated: Feb 2, 2021 at 09:47 AM

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஆர்வலர் டாக்டர் கஃபீல் கான் டிராக்டரில் அமர்ந்திருக்கும் ஒரு வைரல் புகைப்படம், குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பங்கேற்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்ற கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது.

இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானிலிருந்து விவசாயிகளுக்கு ஆதரவாக டாக்டர் கஃபீல் கான் வெளியிட்ட காணொலி, டெல்லியில் எடுக்கப்பட்டதாக வைரலாகிறது.

கூற்று

ஒரு டிராக்டரில் டாக்டர் கஃபீல் கான் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று, டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் அவர் பங்கேற்றதாகவும், அதில் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நமது வாட்ஸ்அப் சாட்பாட் (+91 95992 99372) வழியாக உண்மை சரிபார்ப்பிற்காக இந்த இடுகை நம்மை வந்தடைந்தது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம். ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் இதே போன்ற கூற்றினைக் கொண்ட புகைப்படங்களை எங்களால் காண முடிந்தது.

விசாரணை

இது குறித்து விசாரிக்க, சமூக ஆர்வலர் டாக்டர் கஃபீல் கான் பற்றிய செய்திகளை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. அவரது சமூக வலைத்தள கணக்கில் வழக்கமாக அவரது செயல்பாடுகள் குறித்த புதுப்பிப்புகள் இருப்பதால், மேற்கொண்டு விசாரணைக்கு அதனை நாங்கள் ஆராய்ந்தோம். அவ்வாறு ஆராய்ந்ததில், 26 ஜனவரி 2021 அன்று வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில் ஒரு டிராக்டரில் அவர் அமர்ந்திருப்பது போன்ற காணொலியைக் கண்டோம். இந்தக் காணொலியிலிருந்து எடுக்கப்பட்டதே இந்த வைரல் புகைப்படம் என்பதை நம்மால் அடையாளம் காண முடிந்தது. இந்தக் காணொலியில் அவர் ஒரு டிராக்டரை ஓட்டுவதற்கான அடிப்படைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

https://twitter.com/drkafeelkhan/status/1353920433775538176?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1353920433775538176%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.vishvasnews.com%2Fwp-admin%2Fpost.php%3Fpost%3D91476action%3Dedit

இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் டாக்டர் கஃபீல் கானை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், ஒரு மாதத்திற்கும் மேலாக தான் டெல்லிக்கு வரவில்லை என்று கூறி இந்த வைரல் கூற்றை மறுத்துவிட்டார். மேலும் தொடர்ந்த அவர், “இந்தப் புகைப்படம் ஜனவரி 25 அன்று ராஜஸ்தானின் லங்கர்வாஸ் கிராமத்தில் MNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்) கீழ் பணிபுரியும் பெண் தொழிலாளர்களைச் சந்தித்த பின்னர் எடுக்கப்பட்ட காணொலியில் இருந்து எடுக்கப்பட்டது,” என்று கூறினார். மேலும் குடியரசு தினத்தன்று ஜெய்ப்பூரின் ஜோத்வாராவில் உள்ள ஷாஹீன் அகாடமியில் நடைபெற்ற கொடி ஏற்றும் நிகழ்வின் தான் கலந்து கொண்ட சில புகைப்படங்களையும், அந்நிகழ்வில் பங்கேற்ற பெண் தொழிலாளர்களின் புகைப்படங்களையும் அவர் எங்களோடு பகிர்ந்து கொண்டார்.

இதனை மேலும் உறுதிப்படுத்த, லங்கர்வாஸ் கிராமத்தின் துணை சர்பஞ்ச் ரோஹித்தை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். டாக்டர் கஃபீலின் டிராக்டர் காணொலி லங்கர்வாஸில் எடுக்கப்பட்டது என்பதை அவர் நமக்கு உறுதிப்படுத்தினார். ஜோத்வாராவைச் சேர்ந்த ஆரிஃப் கானும் தங்கள் ஷஹீன் அகாடமியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற நிகழ்வில் கஃபீல் கான் வருகை தந்து விழாவில் பங்கேற்றதை உறுதிப்படுத்தினார்.

இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அக்கணக்கு அக்டோபர் 2014 இல் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. ராஜஸ்தானின் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட டாக்டர் கஃபீல் கானின் காணொலியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம், டெல்லியில் டிராக்டர் பேரணியில் எடுக்கப்பட்டதாக வைரலாகி உள்ளது.

  • Claim Review : சமூக ஆர்வலர் டாக்டர் கஃபீல் கான் டிராக்டரில் அமர்ந்திருக்கும் ஒரு வைரல் புகைப்படம், குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பங்கேற்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்ற கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது.
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later