இல்லை, பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படும் இந்த காணொலி இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல. இது பிரேசிலில் எடுக்கப்பட்டது என்பதே உண்மை.
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி).கோடாரியினை கொண்டு ஒரு பெண்ணின் தலையை ஒருவர் கொடூரமாக தாக்கும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனுடன் பகிரப்படும் கூற்று, இந்த காணொலி இந்தியாவில் எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது. இந்த இடுகை குறித்து நாங்கள் விசாரித்தபோது, அந்த காணொலி உண்மையாக பிரேசிலில் எடுக்கப்பட்டது என்பதையும், மேலும் இது இந்தியாவில் எடுக்கப்பட்டதென்று தவறாகக் கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
எங்களது வாட்ஸ்அப் சாட்பாட் மூலமாகவும் இந்த இடுகை எங்களை வந்தடைந்தது. இந்த காணொலியை நம்மோடு பகிர்ந்துகொண்ட அந்த பயனர், இது இந்தியாவின் அசாமில் எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
கூற்று
பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்படும் காணொலி இந்தியாவில் எடுக்கப்பட்டது என்ற கூற்றுடன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 31 வினாடிகள் நீளமூள்ள இந்த காணொலியில், முகமூடி அணிந்த ஒருவரால், பெண் ஒருவர் தலையில் தாக்கப்படுகிறார். மேலும் அந்தப் பெண்ணின் கைகளும், வாயும் கட்டப்பட்டு இருப்பதையும் நம்மால் காண முடிகிறது. இந்த காணொலியின் தன்மை காரணமாக நாங்கள் இந்த காணொலியை காட்ட வேண்டாம் என்று முடிவுசெய்து, இதன் ஸ்கிரீன் ஷாட்களை மழுங்கடித்துள்ளோம்.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
நாங்கள் இந்த காணொலியை கவனமாக ஆராய்ந்ததில், அந்த பெண்ணின் மேலாடையில் ஒரு லோகோவைக் கண்டறிந்தோம். ‘fort-‘ என்று பாதி மட்டுமே தெரிந்த அந்த லோகோ, உண்மையில் ஃபோர்டாலெஸா கால்பந்து கிளப்பின் லோகோவாகும். இதன்மூலம் அந்தப் பெண் பிரேசிலிய கால்பந்து கிளப்பான ஃபோர்டாலெஸா கால்பந்து கிளப்பின் ஜெர்சியினை அணிந்திருந்ததை எங்களால் கண்டறிய முடிந்தது.
பிரேசிலிய கால்பந்து கிளப்பின் லோகோ, ஃபோர்டாலெஸா கால்பந்து கிளப்
நாங்கள் இது குறித்து தேடியதில், வலைப்பக்கம் ஒன்றில் அதே ஜெர்சியை அணிந்தபடி தரையில் கிடந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் கண்டோம். அந்தப் பெண், 23 வயதான தாலியா டோரஸ் டி சௌசா என்பவராக அப்பக்கத்தில் அடையாளம் கூறப்பட்டிருந்தார்.
தாலியா டோரஸ் டி சௌசா என்ற பெயரை கூகுளில் தேடியதில், செப்டம்பர் 1, 2020 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை நாங்கள் கண்டறிந்தோம். அந்த அறிக்கையில், “பிரேசிலில் நடந்த மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றாக, செயரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதுடைய தாலியா டோரஸ் டி சௌசாவின் கொலை கருதப்படுகிறது. இவர் போம் ஜார்டில் குற்றப் பிண்ணனி கொண்ட ஒரு குழுவின் உறுப்பினர்களால் கடத்தப்பட்டு, அதன் அருகிலிருக்கும் மற்றொரு பகுதியான கிரான்ஜா போர்ச்சுகலுக்கு கொண்டு செல்லப்பட்டார். தாலியா அங்கு கயிறுகளால் கட்டப்பட்டு, துப்பாக்கி முனையில் ருவா கொரோனல் ஃபேப்ரிசியானோவிற்கு அருகிலுள்ள மராங்குபின்ஹோ ஆற்றின் கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கே கொடூரமாக கொல்லப்பட்டார். கோடாரி மற்றும் கற்களால் தலையில் தாக்கப்பட்டு, கொடூரமான முறையில் செய்யப்பட்ட இந்த கொலை, குற்றவாளிகளால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் சில மணி நேரங்கள் கழித்து, தலை சிதறி, கைகள் கட்டிப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அவர் நீல நிற டெனிம் ஷார்ட்ஸையும், அவளுக்கு பிடித்த அணியான ஃபோர்டாலெஸா எஸ்போர்டே க்ளப்பின் சட்டையையும் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஆடைகள், வைரல் காணொலியில் இருந்த பெண்ணின் ஆடையுடன் பொருந்தின.
தாலியா கொலை செய்யப்பட்டது தொடர்பாக எந்த இடுகைகள் பதிவிடப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் ஒரு புகைப்படம் ஒன்று ஃபெமினிகாடியோ – பரேம் டி நோஸ் மாதர் என்ற பக்கத்தில் செப்டம்பர் 1, 2020 அன்று பதிவிடப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
இந்த காணொலி இந்தியாவின் அசாமில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டு வைரலாகி வருவதால், நாங்கள் அசாம் மாநிலம் கௌஹாத்தியின் நிர்வாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளரான ஸ்ரீ ஹேமந்தா KR தாஸினை தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “அசாமின் எந்த இடத்திலும் இதுபோன்ற எந்தச் சம்பவம் நடைபெறவில்லை,” என்று கூறினார்.
இந்தக் காணொலியை Jaggu दादा என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இவரின் கணக்கினை ஆராய்ந்ததில், இவருக்கு இன்று வரை 1,202 பின்தொடர்பவர்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
निष्कर्ष: இல்லை, பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படும் இந்த காணொலி இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல. இது பிரேசிலில் எடுக்கப்பட்டது என்பதே உண்மை.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923