உண்மை சரிபார்ப்பு: பகுஜன் சமாஜ் கட்சியின் பழைய பைக் பேரணியின் காணொளி தவறான கூற்றுடன் வைரலாகிறது
இந்த வைரல் பதிவு தவறானது. இந்த பைக் பேரணியின் காணொளி 2016 ஆம் ஆண்டு ஜான்சியில் எடுக்கப்பட்டதே தவிர, வைரல் இடுகையில் கூறப்பட்டுள்ளபடி பீகாரில் எடுக்கப்பட்டது அல்ல.
- By: Ashish Maharishi
- Published: Oct 30, 2020 at 08:33 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பீகார் சட்டசபை தேர்தலையொட்டி பகுஜன் சமாஜ் கட்சி (BSP) நடத்திய பேரணியின்போது எடுக்கப்பட்டதாகக் கூறி ஒரு பைக் பேரணியின் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் பகுஜன் சமாஜ் கட்சி நடத்திய பேரணியின்போது எடுக்கப்பட்ட பழைய காணொளியே தற்போது தவறான கூற்றுடன் வைரலாகி வருகிறது என்பது தெரியவந்துள்ளது.
கூற்று
பேஸ்புக் பயனரான ராஜ் பகதூர் என்பவர் அக்டோபர் 16 அன்று ஒரு காணொளியை பதிவேற்றி, “… பீகார் தேர்தலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி நிறைய மக்கள் ஆதரவைப் பெற்றுவருகிறது …” என்று எழுதியுள்ளார்.
இந்த பேஸ்புக் இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
இந்த வைரல் காணொளியை நாங்கள் முதலில் கவனித்தோம். காணொளியின் தரம் மிகவும் மோசமாக இருந்தததைக் கொண்டு, அது பழையது என்பதை நாங்கள் அடையாளம் கண்டோம். தற்போது கொரோனா தொற்றுநோயின் தாக்கம் அதிகமாக இருந்துவரும் வேளையிலும், இந்த காணொளியில் யாரும் முக கவசம் அணியாது இருப்பதை எங்களால் கவனிக்க முடிந்தது. இந்த காணொளி குறித்து மேலும் அறிந்துகொள்ள, இது குறித்த வார்த்தைகளை பயன்படுத்தி உண்மையான காணொளியினை யூடியூப்பில் தேடினோம். அவ்வாறு தேடியதில், ‘மறக்கமுடியாத பைக் பேரணி – ஜான்சியின் BSP வேட்பாளர் சித்தாரம் குஷ்வாஹா – ஒளிப்பதிவு லலித் குஷ்வாஹா’ என்ற தலைப்பில் 31 டிசம்பர் 2016 அன்று யூடியூப் பயனர் லலித் குஷ்வா பதிவேற்றியிருந்த இந்த காணொளியை நாங்கள் கண்டோம்.
இந்த கூற்றினை சரிபார்க்க குஷ்வாஹாவைத் தொடர்புகொண்டோம். தனது மாமா சீதாராம் குஷ்வாஹா ஜான்சி சட்டமன்றத் தொகுதியில் (223) போட்டியிட்டதால், 2016 டிசம்பரில் பகுஜன் சமாஜ் கட்சி ஏற்பாடு செய்த பைக் பேரணியின்போது இந்த காணொளியை தான் ஒளிப்பதிவு செய்ததாக அவர் எங்களிடம் கூறினார். “இந்த காணொளி பழையது. பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேச ஜான்சியில் மாவட்ட அளவிலான மாநாடு ஒன்றையும், பைக் பேரணியையும் ஏற்பாடு செய்தது,” என்று கூறினார்.
வைரல் கூற்றைப் பகிர்ந்துள்ள பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் பாட்னாவைச் சேர்ந்த மாணவர் என்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்த பைக் பேரணியின் காணொளி 2016 ஆம் ஆண்டு ஜான்சியில் எடுக்கப்பட்டதே தவிர, வைரல் இடுகையில் கூறப்பட்டுள்ளபடி பீகாரில் எடுக்கப்பட்டது அல்ல.
- Claim Review : பீகார் தேர்தலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி நிறைய மக்கள் ஆதரவைப் பெற்றுவருகிறது
- Claimed By : பேஸ்புக் பயனரான ராஜ்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.