முடிவு: விஷ்வாஸ் நியூஸின் புலனாய்வின் மூலமாக கருப்பு பூஞ்சை குறித்த வைரல் க்ளைம் பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் கருத்துப்படி, கருப்பு பூஞ்சை தொற்றக்கூடிய நோய் அல்ல என்பதோடு இது மனிதர்கள் அல்லது விலங்குகள் தொடர்பினால் கருப்பு பூஞ்சை பரவுவதில்லை. கருப்பு பூஞ்சை மற்றும் கோழிப்பண்ணை குறித்து அத்தகைய உத்தரவு எதையும் பஞ்சாப் அரசு பிறப்பிக்கவில்லை. கருப்பு பூஞ்சை சிக்கன் உண்பதால் ஏற்படும் என்னும் கூற்று பொய்யானது.
விஷ்வாஸ் நியூஸ் (புது தில்லி). என்.டி.டி.வி.யின் உள்நோக்கத்துடனான செய்தியின் ஸ்க்ரீன்ஷாட் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலம் பண்ணைக்கோழியை உண்ணுவதால் கருப்பு பூஞ்சை பரவுவதாக கூறப்படுகிறது என்பதோடு கோழிப் பண்ணைகளை நோய்த்தொற்றுக்கு உள்ளான பகுதிகளாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. விஷ்வாஸ் நியூஸின் புலனாய்வில் இந்த செய்தி தவறான செய்தி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு பூஞ்சை பரவக்கூடிய நோய் இல்லை என்பதோடு மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தொடர்பால் இது பரவுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. கருப்பு பூஞ்சை மற்றும் கோழிப் பண்ணை குறித்து இத்தகைய உத்தரவு எதுவும் பஞ்சாப் அரசால் பிறப்பிக்கப்படவில்லை. சிக்கன் உண்ணுவதால் கருப்பு பூஞ்சை வரும் என்னும் கூற்று பொய்யானதாகும்.
வைரலாவது என்ன
ஃபேஸ்புக் பயனர் Sayed Samee மே 25, 2021 என்.டி.டி.வி-இன் அறிக்கையின் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை உள்நோக்கத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த அறிக்கையில், பஞ்சாப் அரசு கோழிப் பண்ணைகளை நோய்த்தொற்றுள்ள பகுதியாக பிரகடனம் அறிவித்துள்ளதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இதோடு, கருப்பு பூஞ்சை பண்ணைக் கோழியால் பரவுவதாக ஸ்க்ரீன்ஷாட்டில் தனியாக எழுதப்பட்டுள்ளது. இதோடு, ஒரு சில நாட்களுக்க பண்ணைக் கோழி சிக்கனை உண்ணக் கூடாது என்று வேண்டுகோளும் விடப்பட்டுள்ளது. இந்தப் பதிவின் ஆர்ச்சிவ் செய்யப்பட்ட பதிப்பு இங்கு க்ளிக் செய்து பார்க்கலாம்.
புலனாய்வு
இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய அலைக்கு நடுவே, கருப்பு பூஞ்சை நிகழ்வுகளையும் பல மாநிலங்களில் காண முடிகிறது. Live Mint (லைவ் மின்ட்) இன் அறிக்கையின்படி, கருப்பு பூஞ்சை அல்லது மியூகோர்மைகோஸிஸை ஒரு தொற்றுநோயாக அறிவிக்குமாறு மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது. Indian Express (இந்தியன் எக்ஸ்பிரஸ்) இன் 20 மே 2021 அறிக்கையின்படி, நாட்டின் பல மாநிலங்களைப் போலவே, பஞ்சாபிலும் கருப்பு பூஞ்சை தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரலாகப் பரவுகிற கூற்றை புலனாய்வு செய்யும் முன், கருப்பு பூஞ்சை என்றால் என்ன அது எவ்வாறு பரவுகிறது என்பதைக் குறித்து அறிந்து கொள்ள நாங்கள் விரும்பினோம். US Centers for Disease Control and Prevention (யுஎஸ் சென்டர்ஸ் ஃபார் டிசீஸ் கன்ட்ரோல் அன்ட் பிரிவென்ஷன்) இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இது குறித்த தகவல்களை நாங்கள் கண்டோம். இதன் படி (மியூகோர்மைகோஸிஸ் (முன்னதாக ஸைகோமைகோஸிஸ்) என்பது மியூகோர்மைசீட்ஸ் என்று அழைக்கப்படும் மோல்டுகளின் ஒரு கூட்டத்தால் உருவாகக் கூடிய கடுமையான அதே சமயம் அரிதான ஒரு பூஞ்சைத் தொற்று ஆகும். மேலும், மியூகோர்மைகோஸிஸ் ஒரு தொற்றுநோய் இல்லை என்றும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே பரவாது என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை இங்கு க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
ஆன்லைன் புலனாய்வின் போது, எங்கள் சக பணியாளர் டைனிக் ஜங்ரனின் வலைத்தளத்தில் 25 மே 2021 அன்று வெளியான ஒரு அறிக்கையை கண்டோம். இந்த அறிக்கையில், சென்டர் ஆஃப் சோசியல் மெடிசின் மற்றும் கம்யூனிட்டி ஹெல்த், ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி (ஜே.என்.யு)-இன் தலைவர் Dr. Rajeev Dasgupta (டாக்டர். ராஜீவ் தாஸ்குப்தா) உடன் கருப்பு பூஞ்சை குறித்து ஒரு நீண்ட உரையாடல் நிகழ்ந்துள்ளது. கருப்பு பூஞ்சை, அதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர். ராஜீவ் தாஸ் குப்தாவுடனான இந்த பிரத்யேக நேர்காணல் ஜக்ரன் டயலாக்ஸ் சீரிஸில் ஜக்ரன் நியூ மீடியாவின் மூத்த எடிட்டரான பிரத்யுஷ் ரஞ்சனால் நடத்தப்பட்டது. கருப்பு பூஞ்சை என்றால் என்ன என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் டாக்டர் ராஜீவ் தாஸ்குப்தா இந்த அறிக்கையில், “மியூகர்-மைகோஸிஸ் என்பதே கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படுகிறது என்றும் இது மிகவும் அரிதான ஆனால் கடுமையான வகை பூஞ்சைத் தொற்று என்று கூறியுள்ளார். இது உங்கள் சருமம், தலை, கழுத்து. இரைப்பை குடல்பாதை மற்றும் நுரையீரலைத் தாக்குகிறது. கருப்பு பூஞ்சை ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுவதில்லை என்பதை நான் குறிப்பாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் இது குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் எலிவேட்டர்கள் வழியாக ஒரு மருத்துவமனைத் தொற்று போல பரவலாம்.” இந்த முழு உரையாடலையும் இதன் கீழ் காணலாம் கேட்கலாம்.
மே 25-ல் டைனிக் ஜக்ரனின் இரண்டாவது அறிக்கையில் ஆல் இன்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் (AIIMS) இன் இயக்குநர் Dr Randeep Guleria (டாக்டர். ரன்தீப் குலேரியா) கருப்பு பூஞ்சை குறித்தான தகவல்களை தந்துள்ளார். இந்த அறிக்கையில், டாக்டர் குலேரியா, தொற்று ஏற்பட்ட நோயாளியுடனான தொடர்பால் பூஞ்சை தொற்று ஏற்படுவதில்லை என்று கூறுகிறார். அவர் கூறுவதன் படி, இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று நோயாளியின் குறைந்த நோயெதிர்ப்பு சக்திதான். இத்தகைய நபர்கள் குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த அறிக்கையை இங்கு க்ளிக் செய்வதன் மூலம் காணலாம்.
புலனாய்வின் அடுத்த நகர்வாக, கருப்பு பூஞ்சை குறித்தும் பண்ணைக் கோழி குறித்தும் பஞ்சாப் அரசு வேறு உத்தரவுகள் ஏதேனும் கொடுத்துள்ளதா என்பதை அறிய விஷ்வாஸ் நியூஸ் விரும்பியது. பஞ்சாபில் கோழிப்பண்ணை கருப்பு பூஞ்சையின் தொற்று உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது என்று வைரலாகி வரும் கூற்றுக்கு எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையும் சான்றளிப்பதை எங்களால் காண முடியவில்லை.
ஸ்கிரீன்ஷாட்டில் கூறியது போல என்.டி.டி.வி.-ன் செய்தியின் பின்னணியில் உள்ள கதையை ஒரு கீவேர்ட் தேடலின் மூலமாக அறியவும் நாங்கள் விரும்பினோம். கூகுள் தேடல் செய்ததன் மூலம் என்.டி.டி.வியின் அறிக்கை ஒன்றில் வைரலான ஸ்க்ரீன்ஷாட்டில் இருந்த அதே வரி மற்றும் புகைப்படத்தைக் கண்டோம். இந்த அறிக்கை என்டிடிவியின் வலைத்தளத்தில் மே 8 2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் லூதியானாவில் உள்ள கோழிப் பண்ணை தொற்றுக்கு உள்ளான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், இதற்கான காரணம் கருப்பு பூஞ்சை அல்ல பறவைக் காய்ச்சல் ஆகும். அந்த அறிக்கையின்படி, பறவைக் காய்ச்சலுக்கான பரிசோதனையில் லூதியானா கோழிப் பண்ணையின் சாம்பிள்கள் பாசிட்டிவ் என்று வந்துள்ளன. இதன் பின் முடிவு எடுக்கப்பட்டது. லூதியானாவிலிருந்து வரும் இந்தச் செய்தியின் ஸ்கிரீன்ஷாட் மார்ஃப் செய்யப்பட்டு கருப்பு பூஞ்சையுடன் இணைக்கப்பட்டு வைரலாக்கப்பட்டுள்ளது. இந்த என்.டி.டி.வி. அறிக்கையை இங்கு க்ளிக் செய்வதன் மூலம் காணலாம்.
வைரலான இந்தக் கூற்றை விஷ்வாஸ் நியூஸ் பீஹார் கால்நடை மருத்துவமனையின் கல்வித் தலைவர் டாக்டர் ஜேகே பிரசாத்துடன் பகிர்ந்து கொண்டது. சிக்கன் உண்பதன் மூலம் கருப்பு பூஞ்சை உருவாகும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக எந்த ஒரு எழுத்தோ அல்லது அறிவியல்பூர்வமான சான்றோ இதுவரை இல்லை என்று டாக்டர் பிரசாத் கூறினார். இந்தியர்கள் சிக்கனை முறையாக சமைத்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டவர்கள் என்றும் நன்கு சமைக்கப்பட்ட சிக்கன் பாதுகாப்பானது என்றும் அவர் கூறினார்.
இந்த வைரல் கூற்று குறித்து லூதியானாவில் உள்ள சிவில் சர்ஜனான Dr Kiran Ahluwalia (டாக்டர் கிரன் அலுவாலியா)வை விஷ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டது. கருப்பு பூஞ்சை மற்றும் கோழிப்பண்ணை குறித்து பஞ்சாப் அரசாங்கம் அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று அவர் கூறினார். இதை உறுதிப்படுத்துவதன் மூலம் வைரலாகி வரும் கூற்று பொய்யானது என்பதை அவர் கூறினார்.
இந்த வைரல் க்ளைமை பகிர்ந்த ஃபேஸ்புக் பயனர் Sayed Samee (சையது சமீ)-இன் ப்ரொஃபைலை விஷ்வாஸ் நியூஸ் ஸ்கேன் செய்தது. இந்த ப்ரொஃபைல் பிப்ரவரி 2018-இன் போது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயனர் ஹைதராபாத்தில் வாழ்பவர். உண்மைத் தன்மை சரிபார்ப்பு செய்யும் வரை இந்த ப்ரொஃபைல் 2330 ஃபாலோயர்களை கொண்டிருந்தது.
निष्कर्ष: முடிவு: விஷ்வாஸ் நியூஸின் புலனாய்வின் மூலமாக கருப்பு பூஞ்சை குறித்த வைரல் க்ளைம் பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் கருத்துப்படி, கருப்பு பூஞ்சை தொற்றக்கூடிய நோய் அல்ல என்பதோடு இது மனிதர்கள் அல்லது விலங்குகள் தொடர்பினால் கருப்பு பூஞ்சை பரவுவதில்லை. கருப்பு பூஞ்சை மற்றும் கோழிப்பண்ணை குறித்து அத்தகைய உத்தரவு எதையும் பஞ்சாப் அரசு பிறப்பிக்கவில்லை. கருப்பு பூஞ்சை சிக்கன் உண்பதால் ஏற்படும் என்னும் கூற்று பொய்யானது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923