இந்த வைரல் பதிவு தவறானது. கொல்கத்தா பேரணியில் குறித்து BBC இதுபோன்ற எந்த செய்தியையும் வெளியிடவில்லை.
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் நடைபெற்ற மேற்கு வங்காள பேரணியினை, உலகின் மிகப்பெரிய அமைதியான அரசியல் கூட்டமாக BBC செய்தி ஊடகம் குறிப்பிடுவது போன்ற பதிவு ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பேரணி குறித்து இவ்வாறான எந்த செய்தியையும் தாங்கள் வெளியிடவில்லை என்று கூறி, இந்த வைரல் கூற்றினை BBC ஊடக ஊழியர் மறுத்துவிட்டார்.
கூற்று
கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் நடைபெற்ற இடதுசாரிகளின் மேற்கு வங்கப் பேரணியை, உலகின் மிகப்பெரிய அமைதியான அரசியல் கூட்டமாக BBC நியூஸ் அறிவிப்பது போன்று ஒரு வைரல் புகைப்படம் காட்டுகிறது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
தங்கள் பலத்தைக் காட்ட விரும்பிய CPI (M) கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதன் கூட்டணி கட்சிகளுடன் ஒரு பிரம்மாண்டமான பேரணியை நடத்தியது. இந்தப் பேரணி கொல்கத்தா நகரத்தின் மிகப்பெரிய திறந்தவெளி மைதானமான பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்றது. மேற்கு வங்க சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரம்மாணட பேரணி நடைபெற்றிருப்பது குறிப்படத்தக்கது என்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது.
கொல்கத்தா பேரணி தொடர்பாக விஸ்வாஸ் நியூஸ் சமீபத்தில் ஒரு
செய்தி வெளியிட்டது.மேலும் இதன் உண்மை சரிபார்ப்பிற்காக BBC செய்தி அறிக்கைகளுக்காக நாங்கள் இணையத்தில் தேடினோம்.
அவ்வாறு தேடியதில், இந்தப் பேரணி குறித்த செய்திகளை அவர்களின் இணையதளத்தில் எங்களால் கண்டுபிடிக்க இயவில்லை.
இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் BBC மீடியா சென்டர், குளோபல் நியூஸ் லிமிடெட் மற்றும் உலக சேவை குழுவை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பேசினோம். BBCயில் விளம்பரதாரராக பணியாற்றும் டெஸ் கோலி, “BBC அத்தகைய கதையை எதையும் வெளியிடவில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்,” என்று கூறினா.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்பதும், மார்ச் 2011 முதல் அவரின் கணக்கு பேஸ்புக்கில் செயல்பட்டுவருவதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. கொல்கத்தா பேரணியில் குறித்து BBC இதுபோன்ற எந்த செய்தியையும் வெளியிடவில்லை.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923