உண்மைச் சரிபார்ப்பு: பிரதமர் மோடி, சோனியா காந்தி ஆகியோரின் பழைய புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகி வருகிறது

சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் அமித் ஷா ஆகியோரின் புகைப்படம், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையே நடந்த ரகசிய சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படம் என்ற கூற்றுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஸ்வாஸ் நியூஸ் இந்த வைரலான பதிவின் உண்மைத் தன்மையை-சோதித்து பார்த்து, இந்த புகைப்படம் ஆகஸ்ட் 2021 இல் சோனியா காந்தி, பிரதமர் மோடி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் மக்களவை தலைவர் ஓம் பிர்லா நடத்திய சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படம் என்பதை கண்டறிந்தது. எனவே பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக கூறப்படும் இந்த கூற்று தவறானது என்பது நிரூபணமாகியுள்ளது.

உரிமைகோரல்:

முகநூல் பயனர் முகமது இக்பால் ஜனவரி 17 அன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “பாஜக, காங்கிரஸ் ரகசிய சந்திப்பு?” என்று எழுதினார்.

விசாரணை:

வைரலான புகைப்படத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க விஸ்வாஸ் நியூஸ் முதலில் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் கருவியைப் பயன்படுத்தியது. கூகுளின் ரிவர்ஸ் இமேஜ் டூலில் புகைப்படத்தைப் பதிவேற்றிய பிறகு, அது தொடர்பான பல புகைப்படங்கள் மற்ற இணையதளங்களில் காணப்பட்டன. ஆகஸ்ட் 11, 2021 அன்று, பிரதமர் மோடி, அமித் ஷா, சோனியா காந்தி மற்றும் பிற தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்று ஆகஸ்ட் 12, 2021 அன்று Financial Express.com-ல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை கூறியது. Bhaskar.com-மும் தனது அறிக்கை ஒன்றில் அதே சந்திப்பின் படத்தை கோப்புப் படமாக பயன்படுத்தியது.

இந்த விசாரணையை முன்னோக்கி எடுத்துச்செல்லும்போதே, மக்களவை தலைவர் ஓம் பிர்லாவின் ட்விட்டர் பக்கம் எப்படி கையாளுதல் செய்யப்படுகிறது என்பதை நாங்கள் ஆராய்ந்தோம். அவ்வாறு ஆராயும்போது, “லோக்சபாவின் நடவடிக்கைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட பிறகு, பொதுமக்களின் நலனுக்காகவும், அவர்களின் குறைபாடுகளை நீக்கவும் எதிர்காலத்தில் அவையில் விவாதம் மற்றும் உரையாடலை ஊக்குவிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தப்பட்டது.” என்ற தலைப்புடன் ஆகஸ்ட் 11, 2021 அன்று பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்று அவரது ட்விட்டர் பக்க ஹாண்டில் பகுதியில் காணப்பட்டது,

https://twitter.com/ombirlakota/status/1425395043238498306

காங்கிரஸின் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தொடர்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நிதின் அகர்வால், விஸ்வாஸ் நியூஸிடம் பேசுகையில் கூறியதாவது, “இந்த வைரலான படம் ஆகஸ்ட் 2021 இல் மக்களவை அமர்வு முடிந்த பிறகு எடுக்கப்பட்டது. ஐடி செல் மற்றும் அவர்களின் போலி கணக்குகள் (ஹாண்டில்ஸ்) போலியான செய்திகளை பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளது”.

தவறான கூற்றுடன் பழைய படத்தைப் பகிர்ந்த பயனரின் முகநூல் கணக்கையும் நாங்கள் ஆய்வு செய்தோம். முகமது இக்பால் என்ற முகநூல் பயனரை 7,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். அவர் துபாயை சேர்ந்தவர். இந்த முகநூல் கணக்கு மார்ச் 2014 இல் உருவாக்கப்பட்டது.

முடிவு: எங்கள் விசாரணையில், சோனியா காந்தி, பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரின் புகைப்படம் தவறான கூற்றுடன் பகிரப்பட்டது கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் 2021 இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம், பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையிலான ரகசிய சந்திப்பு என்ற பெயரில் பகிரப்படுகிறது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்