X
X

உண்மை சரிபார்ப்பு: 2020 லெபனான் காணொளி போலியான உக்ரெய்ன் சூழலுடன் தவறாக சொல்லப்பட்டிருக்கிறது.

விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையில், இந்தக் க்ளைம் தவறு என்று தெரிய வந்தது. இந்த வைரல் காணொளி ரஷ்யா-உக்ரெய்ன் போர் சம்பந்தப்பட்டதல்ல. அது 2020-இல் லெபனானில் நடந்த ஒரு வெடிப்புச் ச்ம்பவத்தினுடையது.

  • By: Pallavi Mishra
  • Published: Mar 20, 2022 at 12:00 PM
  • Updated: Mar 20, 2022 at 02:38 PM

புது டெல்லி: (விஷ்வாஸ் நியூஸ்). உக்ரெய்ன்-இல் ரஷ்யப் படையெடுப்பைக் காட்டுவதாக க்ளைம் செய்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டிடத்திலிருந்து வலிமையான தீப்பிழம்புகள் எழுவது போல அந்த வைரல் காணொளியில் காட்சி உள்ளது. அதே சமயத்தில்,அந்தக் கட்டிடத்தின் சுற்றுப்புறங்களின் ஒரு பெரும்பகுதி அழிக்கப்பட்டது போல் காட்சியளித்து, அந்தத் தீ ஒரு பெரும் வெடிப்பினால் உண்டாகியது போல் தோன்றுகிறது.

விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையில் அந்தக் க்ளைம் தவறானது என்று தெரிய வந்தது. அந்த வைரல் காணொளி ரஷ்யா-உக்ரெய்ன் போர் சம்பந்தப்பட்டது அல்ல. அது 2020-இல் லெபனானில் நடந்த ஒரு வெடிப்புச் ச்ம்பவத்தினுடையது.

அந்த வைரல் பதிவில் இருப்பது என்ன?

பேஸ்புக் பயனர் ‘சாய்ஸ்தா மியா சாய்ஸ்தா மியா’ இந்த வைரல் காணொளியைப் (ஆவணப்படுத்தப்பட்ட இணைப்பு) பகிரும் போது எழுதினார், “ஒ கடவுளே உக்ரெய்ன்-க்காக பிரார்த்தனை செய்யுங்கள்”.

புலன் விசாரணை

கூகுள் ரிவர்ஸ் இமேஜில் அந்த வைரல் காணொளியின் கீ-ஃபிரேம்களைத் தேடிய பின், நாங்கள் இந்தக் காணொளியை ‘KHOU 11’ என்ற சரிபார்க்கப்பட்ட யூடியுப் சேனலில் கண்டுபிடித்தோம். இந்தக் காணொளி ஆகஸ்ட் 5, 2020 அன்று அப்லோட் செய்யப்பட்டிருந்தது. அந்தக் காணொளியுடன் இருந்த விவரக்குறிப்பு இவ்வாறு இருந்தது. “லெபனான் தலைநகரில் நடந்த நாசகரமான வெடிப்புக்குப் பிறகு பெய்ரூட்டில் உள்ள பின்விளைவு இதுதான்.. பலர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். நகரமே முற்றிலும் அழிந்ததுபோல் காட்சியளிக்கிறது. காணொளி அளிப்பவர்: ரஷாத் அச்கர்.”

www.khou.com என்ற தளத்திலும் இந்த நிகழ்வு பற்றிய செய்திகளை நாங்கள் கண்டுபிடித்தோம்.

இந்தக் காணொளி khou.com-இன் ட்விட்டர் ஹேண்டிலிலும் ஆகஸ்ட் 5, 2020 அன்று அப்லோட் செய்யப்பட்டிருந்தது. அதிலிருந்து விவரக்குறிப்புப் படி, இந்தக் காணொளி லெபனான் தலைநகரில் நடந்த நாசகரமான வெடிப்பு பற்றியது.

https://twitter.com/KHOU/status/1290777669789941761

இதே காணொளி ஆகஸ்ட் 5, 2020 அன்று செய்தியாளர் ஜேனன் மூஸாவினாலும் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அதோடு, இவ்வாறு எழுதப்பட்டிருந்தது, “வெடிப்புக்குப் பிறகு என் நகரம் பெய்ரூட். என்ன துயரகரமான நிகழ்வு, தாங்க முடியவில்லை.”

https://twitter.com/jenanmoussa/status/1290718420791689219

விஷ்வாஸ் நியூஸ் உறுதிப்படுத்துவதற்காக மின்னஞ்சல் மூலமாக உக்ரெய்ன் உண்மை சரிபார்ப்புக் குழுவோடு தொடர்புகொண்டது. இது சம்பந்தமாக, நாங்கள் செய்தியாளர் ஜேனன் மூஸாவுடனும் தொடர்பு கொண்டோம். அங்கிருந்து பதில் வந்தவுடன் செய்தி புதுப்பிக்கப்படும்.

தவறான க்ளைமோடு இந்த வைரல் காணொளியைப் பகிர்ந்த பயனர் சாய்ஸ்தா மியா சாய்ஸ்தா மியாவுக்கு ஃபேஸ்புக்கில் 5000 நண்பர்கள் உள்ளனர்.

निष्कर्ष: விஷ்வாஸ் நியூசின் புலன் விசாரணையில், இந்தக் க்ளைம் தவறு என்று தெரிய வந்தது. இந்த வைரல் காணொளி ரஷ்யா-உக்ரெய்ன் போர் சம்பந்தப்பட்டதல்ல. அது 2020-இல் லெபனானில் நடந்த ஒரு வெடிப்புச் ச்ம்பவத்தினுடையது.

  • Claim Review : ஒ கடவுளே உக்ரெய்ன்-க்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
  • Claimed By : சாய்ஸ்தா மியா சாய்ஸ்தா மியா
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later