X
X

உண்மை சரிபார்ப்பு: பழைய மேற்கு வங்காள பேரணியின் புகைப்படம், சமீபத்திய பேரணியின் புகைப்படமென பகிரப்படுகிறது

இந்த வைரல் இடுகை தெளிவற்றது. கொல்கத்தாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடதுசாரிகளின் பேரணியின் பழைய புகைப்படம், பிப்ரவரி 28 அன்று நடந்த சமீபத்திய பேரணியில் இருந்து எடுக்கப்பட்டதாக பகிரப்படுகிறது.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பிப்ரவரி 28 ம் தேதி பிரிகேட் மைதானத்தில் நடந்த மேற்கு வங்காள பேரணியில் ஆளுங்கட்சிக்கு எதிரான தங்கள் கோபத்தை வெளிப்படுத்த மக்கள் கூடியிருந்தனர் என்ற கூற்றுடன் ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தின் புகைப்படமொன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தி விசாரணையில் இந்தக் கூற்று தெளிவற்றது என்று தெரியவந்தது. இரண்டு ஆண்டுகள் முன் நடைபெற்ற இடதுசாரிகள் பேரணியின் புகைப்படம் நேற்றைய பேரணியின் பெயரில் தவறாக வைரலாகியுள்ளது.

கூற்று

பிரமாண்டமான ஒரு கூட்டத்தின் புகைப்படத்துடன் கூடிய ஒரு வைரல் இடுகையில், “@INCIndia & @CPIM_WESTBENGAL ஆகிய கட்சிகளின் கூட்டுத் தேர்தல் பேரணி
கொல்கத்தாவின் ப்ரிகேட் மைதானத்தில் நடைபெற்றது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வைரல் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

https://twitter.com/reshma_alam9/status/1365951573642285056

பேஸ்புக் பயனரான தௌபீக் அகமது என்பவரும் இதே புகைப்படத்தைப் பகிர்ந்து, “மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கம்யூனிஸ்டு & காங்கிரஸ் கூட்டணி சார்பாக நடைபெற்ற வரும் தேர்தல் பேரணி” என்று எழுதியுள்ளார்.

காங்கிரசின் தேசிய கன்வீனரான சரல் படேலும் இதேபோன்ற கூற்றுடன் இந்த புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.”இது மேற்கு வங்காள மக்களின் கோபத்தை காட்டுகிறது.” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://mobile.twitter.com/SaralPatel/status/1365944173895974912

விசாரணை

2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இடதுசாரிகள்-காங்கிரஸ்-ISF கூட்டணி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொல்கத்தாவின் புகழ்பெற்ற பிரிகேட் பரேட் மைதானத்தில் ஒரு பிரம்மாண்ட பேரணியுடன் தொடங்கியது. பல ஆண்டுகளாக பல பிரம்மாண்ட பேரணிகளை இவ்விடத்தில் நடத்தியதன் மூலம் இந்த மைதானத்தை இடதுசாரிகள் பிரபலமடைய செய்துள்ளனர் என்று இந்துஸ்தான் டைம்ஸின் ஒரு கட்டுரை தெரிவிக்கின்றது.

இந்த வைரல் இடுகையை நாங்கள் கவனித்ததில், இரண்டு புகைப்படங்களும் ஒன்று போன்றவை என்பதையும், அவற்றூல் வெவ்வேறு ஃபில்டர்கள் உள்ளன என்பதையும் நாங்கள் அடையாளம் கண்டோம்.

கூகுள் பின்னோக்கிய படத் தேடல் கருவியைப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தின் மூலத்தைத் தேடியதில், அது குறித்து விவரிக்கும் ஒரு கட்டுரையின் தலைப்பினை நாங்கள் இணையதளத்தில் கண்டறிந்தோம். அதில் “கொல்கத்தாவின் இடதுசாரி கட்சியினை சேர்ந்த தொழிலாளர்கள் 3 பிப்ரவரி 2019 அன்று கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற இடது முன்னணி பேரணியில் பங்கேற்றனர். புகைப்படம்: IANS. ” என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோன்ற விளக்கத்துடன் பிப்ரவரி 2019 இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையிலும் இந்த புகைப்படத்தைக் கண்டோம்.

இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் டைனிக் ஜாக்ரானின் கொல்கத்தா பணியகத் தலைவர் JK வாஜ்பாயை தொடர்பு கொண்டு பேசினோம். பேரணியின் உண்மையான புகைப்படத்தை நம்மோடு பகிர்ந்து கொண்ட அவர், “இடுகைகளில் உள்ள படம் 2019 பேரணியில் எடுக்கப்பட்டது,” என்று கூறினார்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு பேஸ்புக்கில் 932 பின்தொடர்பவர்கள் இருப்பதும், மேலும் அவரது கணக்கு அக்டோபர் 2010 முதல் செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் இடுகை தெளிவற்றது. கொல்கத்தாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடதுசாரிகளின் பேரணியின் பழைய புகைப்படம், பிப்ரவரி 28 அன்று நடந்த சமீபத்திய பேரணியில் இருந்து எடுக்கப்பட்டதாக பகிரப்படுகிறது.

  • Claim Review : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கம்யூனிஸ்டு & காங்கிரஸ் கூட்டணி சார்பாக நடைபெற்ற வரும் தேர்தல் பேரணி
  • Claimed By : பேஸ்புக் பயனரான தௌபீக் அகமது
  • Fact Check : Misleading
Misleading
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later