உண்மை சரிபார்ப்பு: பாட்னா தீ விபத்தின் பழைய காணொளி மங்களூரில் நடைபெற்றது என்ற தெளிவற்ற கூற்றுடன் வைரலாகிறது
இந்த வைரல் இடுகை தெளிவற்றது. உத்தரகண்ட் மாநிலத்தின் மங்களூரில் அண்மையில் நடந்த சம்பவத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி பீகாரில் ஏற்பட்ட தீ விபத்தின் பழைய காணொளி வைரலாகியுள்ளது.
- By: Pallavi Mishra
- Published: Nov 17, 2020 at 11:53 PM
- Updated: Nov 17, 2020 at 11:56 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). உத்தரகண்ட் மாநிலத்தின் ரூர்க்கி மாவட்டத்தின் மங்களூரில் உள்ள ஒரு இனிப்பு கடையில், 10 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததனால், அங்கு தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறி, தீ விபத்து ஏற்பட்ட ஒரு கட்டிடத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 24 பேர் இறந்ததாகவும், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அப்பதிவு கூறுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தெளிவற்றது என்று தெரியவந்தது. பாட்னாவில் ஏற்பட்ட தீ விபத்தின் காணொளியே தற்போது தெளிவற்ற கூற்றுக்களுடன் வைரலாகி உள்ளது.
கூற்று
ரூர்க்கியின் மங்களூரில் நடந்த சிலிண்டர் வெடிப்பு விபத்தில் 24 பேர் இறந்ததாகக் கூறி, தீ விபத்து ஏற்பட்ட ஒரு கட்டிடத்தின் வைரல் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் 10 சிலிண்டர்கள் வெடித்ததில் அந்த இனிப்பு கடை தீப்பிடித்து, அதில் 30 பேர் காயமடைந்ததாகவும் இந்த இடுகை கூறுகிறது. இந்த இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் முதலில் இந்த வைரல் காணொளியை இன்விட் கருவியில் பதிவேற்றி, கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தோம். பின்பு கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, அவற்றை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்த காணொளியை, 8 ஜூன் 2018 அன்று ஃப்ரண்ட்லைன் நியூஸின் யூடியூப் சேனல், “பாட்னாவின் டிடர்கஞ்சில் உள்ள ஒரு எரிவாயு கிடங்கில் தீ விபத்து” என்று பதிவேற்றியிருப்பதை எங்களால் காண முடிந்தது.
பாட்னாவில் உள்ள ஒரு கிடங்கில் தீ விபத்து என்ற இதே போன்ற விளக்கத்துடன் இந்தியா டுடே யூடியூப் சேனலால் 9 ஜூன் 2018 அன்று இதே காணொளி பகிரப்பட்டு இருப்பதையும் நாங்கள் கண்டோம்.
இந்தக் கூற்றினை சரிபார்க்க டைனிக் ஜாக்ரான் பாட்னாவின் நிருபர் ஆஷிஷ்குமாரை தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடையே பேசிய அவர், “இந்த காணொளி 2018ல் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எரிவாயு கிடங்கு தீப்பிடித்தபோது எடுக்கப்பட்டது. இந்த விபத்தில் மரணங்கள் எதுவும் ஏற்படவில்லை,” என்று கூறினார்.
இது குறித்து மேலும் அறிந்துகொள்ள ரூர்க்கியின் மங்களூரில் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய செய்திகளை இணையத்தில் தேடியதில், நவம்பர் 8 ஆம் தேதி மங்களூரில் உள்ள ஒரு இனிப்பு கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்ததாகவும், மேலும் 9 பேர் காயமடைந்ததாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ள ஒரு செய்தி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
பல சமூக ஊடக பயனர்களும் இந்த காணொளியை சமீபத்திய சம்பவத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி பகிர்ந்து வருகின்றனர். இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்து கொண்ட Knowledge ka Adda என்ற பேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்ததில், அப்பக்கத்திற்கு 11,393 பின்தொடர்பவர்கள் இருப்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் இடுகை தெளிவற்றது. உத்தரகண்ட் மாநிலத்தின் மங்களூரில் அண்மையில் நடந்த சம்பவத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி பீகாரில் ஏற்பட்ட தீ விபத்தின் பழைய காணொளி வைரலாகியுள்ளது.
- Claim Review : ரூர்க்கியின் மங்களூரில் நடந்த சிலிண்டர் வெடிப்பு விபத்தில் 24 பேர் இறந்ததாகக் கூறி, தீ விபத்து ஏற்பட்ட ஒரு கட்டிடத்தின் வைரல் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் 10 சிலிண்டர்கள் வெடித்ததில் அந்த இனிப்பு கடை தீப்பிடித்து, அதில் 30 பேர் காயமடைந்ததாகவும் இந்த இடுகை கூறுகிறது.
- Claimed By : பேஸ்புக் பக்கம்
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.