உண்மை சரிபார்ப்பு: கோகோயின் கொரோனா வைரஸைக் கொல்லும் என்று கூறும் பதிவு பொய்யானது

கோகோயின் கொரோனா வைரஸைக் கொல்லும் என்று கூறும் பதிவு பொய்யானது.

வகை A மருந்து எவ்வாறு ஒரு தொற்றுநோயை அழிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு வைரலான பதிவு கூறுகிறது. செய்தி வடிவத்தில் ஸ்கிரீன் கிராப்பாக இருக்கும் பதிவில் சுட்டிக்காட்டப்படும் வாசகம் பின்வருமாறு: கோகோயின் கொரோனா வைரஸைக் கொல்லும். இந்த வைரலான பதிவு பொய்யானது என்பதை விஸ்வாஸ் நியூஸ் விசாரித்து, கண்டறிந்துள்ளது.

கூற்று

வகை A மருந்து எவ்வாறு ஒரு தொற்றுநோயை அழிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக டுவிட்டரில் பகிரப்பட்ட ஒரு பதிவு கூறுகிறது. செய்தி வடிவத்தில் ஸ்கிரீன் கிராப்பாக இருக்கும் பதிவில் சுட்டிக்காட்டப்படும் வாசகம் பின்வருமாறு: கோகோயின் கொரோனா வைரஸைக் கொல்லும். காப்பகத்தில் சேமிக்கப்பட்ட பதிவின் பதிப்பை இங்கே பார்க்கலாம்.

விசாரணை

கோகோயின் மிகவும் வீரியமான போதை மருந்தாகும், இதை நீண்ட காலம் பயன்படுத்தினால் கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தேசிய சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் விஸ்வாஸ் நியூஸ் தேடி கண்டறிந்துள்ளது.

கோகோயின் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான ஏதேனும் அறிக்கை உள்ளதா என்றும் நாங்கள் தேடிப் பார்த்தோம். கோகோயின் கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று கூறும் எந்த உண்மையான அறிக்கையும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

உலக சுகாதார அமைப்பின் (WHO) இணையதளத்தில் எங்களுக்கு ஒரு  அறிக்கை கிடைத்தது. WHO கூற்றுப்படி, நாவல் கொரோனா வைரஸை தடுக்க அல்லது சிகிச்சையளிக்க குறிப்பிட்ட மருந்து எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.

குறிப்பிட்ட சில சிகிச்சைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன, இவை மருத்துவ பரிசோதனைகள் மூலம் பரிசோதிக்கப்படும் என்றும் அது கூறுகிறது.

கூகிள் ரிவர்ஸ் படத் தேடலைப் பயன்படுத்தி வைரலான பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தை நாங்கள் தேடினோம். செய்தி அறிக்கை போல தோற்றமளிக்கும் இந்த படத்தின் வடிவமானது குறிப்பிட்ட மீம் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வைரலான பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள கோகோயின் படத்தின் ஆதாரத்தையும் கண்டுபிடிக்க நாங்கள் முயற்சி செய்தோம்.

இதே புகைப்படம் ஐஸ்டாக்போட்டோபிக்ஸ்டாக்போட்டோ, மற்றும் அடோப் ஸ்டாக் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது ஒரு பதிப்புரிமை பெற்ற படம். இந்த புகைப்படம் எந்தவொரு செய்தி இணையதளத்திலும் கொரோனா வைரஸ் சிகிச்சையாக இடம்பெறவில்லை.

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தைச் சேர்ந்த டாக்டர் என் விமல் அவர்களிடம் விஸ்வாஸ் நியூஸ் பேசியது, “இது ஒரு பொய்யான செய்தி. இந்த கூற்றுக்கு ஆதரவாக எந்த ஆதாரமோ அல்லது ஆராய்ச்சியோ கிடையாது.“ WHO கூறியது போல கொரோனா வைரஸ்க்கு இதுவரை எந்த சிசிக்சையும் இல்லை.

निष्कर्ष: கோகோயின் கொரோனா வைரஸைக் கொல்லும் என்று கூறும் பதிவு பொய்யானது.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்