உண்மை சரிபார்ப்பு: உலக சுகாதார அமைப்பின் இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை

உண்மை சரிபார்ப்பு: உலக சுகாதார அமைப்பின் இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ​​டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று கூறியிருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு கூறுகிறது.

விஸ்வாஸ் செய்தியின் வாட்ஸ்அப் சாட்பாட்டின் (+91 95992 99372) வழியே உண்மை சரிபார்ப்பிற்காக இந்த கூற்று நம்மிடையே வந்தடைந்தது. விஸ்வாஸ் செய்தி விசாரணையில், ​​டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அவ்வாறு கூறவில்லை என்பதைக் கண்டறிந்தோம். கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒரு நபருடன் தான் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கவே அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த வைரல் பதிவு தவறானது.

கூற்று

சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு இடுகை, WHOவின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகக் கூறுகிறது. இந்த இடுகையை இங்கே காணலாம்.

விஸ்வாஸ் செய்தியின் வாட்ஸ்அப் சாட்பாட்டின் வழியே உண்மைச் சரிபார்ப்பிற்காக இந்த இடுகை நம்மிடையே வந்தடைந்தது.

விசாரணை

இது குறித்து விசாரிக்க, இந்த இடுகையுடன் பகிரப்பட்ட கட்டுரையின் இணைப்பைக் கிளிக் செய்தோம். அதன் தலைப்பு, BREAKING: WHO DG contracts COVID-19 என்று இருந்தது. மேலும் அந்த கட்டுரையை கிளிக் செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததனால், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலம் இந்த கட்டுரை தவறான தலைப்புடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை நம்மால் உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும் இன்விட் கருவியை இணைத்த ட்விட்டரின் மேம்பட்ட தேடலைப் பயன்படுத்தி நாங்கள் தேடியதில், WHOவின் இயக்குநர் கெப்ரேயஸின் ட்வீட்டைக் கண்டறிந்தோம். அவர் ட்வீட்டில் , “#COVID19 தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் ஒருவருடன் நான் தொடர்பில் இருந்ததாக நான் அடையாளம் காணப்பட்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன் மற்றும் அறிகுறிகள் இல்லாமல் இருக்கிறேன், ஆனால் வரவிருக்கும் நாட்களில் @WHO நெறிமுறைகளுக்கு ஏற்ப என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்ளப் போகிறேன், மேலும் அந்நாட்களில் நான் வீட்டிலிருந்து வேலை செய்வேன்,” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு ட்வீட்டின் மூலம், கெப்ரேயஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் தவறான அறிக்கைகளை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. அந்த ட்வீட்டில்: “சில தவறான அறிக்கைகளுக்கு மாறாக, #DRTedrosக்கு #COVID19 தொற்று உறுதி செய்யப்படவில்லல. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரோடு அவர் தொடர்பில் இருந்தார் என அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். டாக்டர் டெட்ரோஸ் நல்ல உடல்நிலையோடு இருக்கிறார், மேலும் அவர் உலக சுகாதார அமைப்பின் நெறிமுறைகளுக்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்,” என்று கூறப்பட்டுள்ளது.

கெப்ரேயஸ், நவம்பர் 2, 2020 அன்று ஒரு ஊடக சந்திப்பில் பங்கேற்று, தான் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஒருவரோடு தொடர்பில் இருந்ததை அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் கொரோனா அறிகுறிகள் ஏதுமின்றி நலமாக இருக்கிறார், ஆனால் உலக சுகாதார அமைப்பின் நெறிமுறைகளுக்கு ஏற்ப, வரும் நாட்களில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இது குறித்து விசாரிக்க நாங்கள் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், இயக்குநர் கெப்ரேயஸுக்கு கொரோனா தொற்று உறுதியானது என்ற கூற்றை முற்றிலுமாக மறுத்தார். “எங்கள் அமைப்பின் இயக்குநர் கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டார், ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை,” என்று கூறினார்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த ட்விட்டர் பக்கத்தினை ஆராய்ந்ததில், solomanislandsblog என்ற அப்பக்கத்திற்கு இன்று வரை 94 பின்தொடர்பவர்கள் இருப்பது தெரியவந்தது.

முடிவு

இந்த வைரல் பதிவு தவறானது. தனக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் கூறவில்லை; தான் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாகவே அவர் கூறியுள்ளார்.

பொறுப்புத்துறப்பு:
CoronavirusFacts எனும் தரவுத்தளம் கோவிட்-19 பரவலின் தொடக்கத்திலிருந்து வெளிவரும் தகவல்களின் உண்மை-சரிபார்ப்புகளை பதிவு செய்து வருகிறது. கொரோனா தொற்றுநோயும் அதன் விளைவுகளும் தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே வருவதோடு மட்டுமல்லாது, சில வாரங்கள் அல்லது சில நாட்களுக்கு முன்பு துல்லியமாக இருந்த தரவுகளே கூட மாறிபோகக்கூடிய சூழ்நிலையும் தற்போது உள்ளது. அதனால் ஓர் செய்தியை நீங்கள் பகிர்வதற்கு முன்பு, அச்செய்தி எந்த நாளில் உண்மைச் சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்கு பின்னரே பகிரவும்.

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்