உண்மை சரிபார்ப்பு: முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறவில்லை
- By: Urvashi Kapoor
- Published: Feb 8, 2021 at 11:00 PM
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி): ஆரோக்கியமான நபர் மருத்துவமனைக்கு வெளியே முகக்கவசம் அணிவதற்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை என்று 22 ஜனவரி அன்று உலக சுகாதார அமைப்பு கூறியதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு பதிவு கூறுகிறது.
இது குறித்து நாங்கள் விசாரித்ததில் இந்த வைரல் பதிவு தவறானது என்பது தெரியவந்தது. உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, அவர்களின் முகக்கவசம் குறித்த வழிகாட்டுதல் பல சூழ்நிலைகளில்-சுகாதார அமைப்புகளுக்கு உள்ளேயும் வெளியேயும்-மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளது. மேலும், மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியதை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
கூற்று
ஜூலியா என்ற பயனரால் ட்விட்டரில் பகிரப்பட்ட இடுகையில், “இப்போது நீங்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது – உங்களுக்குத் தெரியுமா?” என கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் பகிரப்பட்டுள்ள இணைப்பின் தலைப்பு “உலக சுகாதார அமைப்பு இப்போது நீங்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று கூறுகிறது,” என்று குறிப்பிடுகிறது.
இந்த ட்விட்டர் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம். இந்த இடுகை பேஸ்புக்கிலும் வைரலாக உள்ளது.
விசாரணை
இந்த வைரல் இடுகை குறித்து விசாரிக்க நாங்கள் WHO SEARO இன் சுகாதார அவசரநிலைகளின் தொழில்நுட்ப அதிகாரியிடம் பேசினோம்.இது குறித்து பேசிய அவர், “இந்த இடுகை தவறானது. எங்கள் வழிகாட்டுதல்கள் பல சூழ்நிலைகளில்-சுகாதார அமைப்புகளுக்கு உள்ளேயும் வெளியேயும்- மக்கள் முகக்கவசங்களை அணிவது குறித்து தெளிவாக உள்ளது. உண்மையில், முகக்கவசங்கள் தொடர்பான சிறப்பு வழிகாட்டுதல்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம்,” என்று கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் முகக்கவசம் அணிவதை பழக்கமாக மாற்றிக் கொள்ள பரிந்துரைக்கிறது. முகக்கவசங்களை முடிந்தவரை பயனுள்ளதாக மாற்றுவதற்கு பொருத்தமான பயன்பாடு, சேமித்தல் மற்றும் சுத்தம் செய்தல் அல்லது அகற்றுவது அவசியமானாதாகும்.
மருத்துவமனைகளுக்கு வெளியே முகக்கவசம் அணிய வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எங்கும் கூறவில்லை. உண்மையில், உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில், முகக்கவசங்களின் பயன்பாடு குறித்து தனியே ஒரு பக்கம் உள்ளது. அதில் “முகக்கவசம் அணிவது நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் நாம் செய்யக்கூடிய ஒரு முக்கிய நடவடிக்கையாகும். உடல் ரீதியான விலகல், நெரிசலான, மூடிய மற்றும் நெருங்கிய தொடர்பு அமைப்புகளைத் தவிர்ப்பது, நல்ல காற்றோட்டம், கைகளை சுத்தம் செய்தல், தும்மல் மற்றும் இருமல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான ‘இதையெல்லாம் செய்யுங்கள்!’ அணுகுமுறையின் ஒரு பகுதியாக முகக்கவசங்களை நாம் பயன்படுத்த வேண்டும். வகையைப் பொறுத்து, ஆரோக்கியமான நபர்களின் பாதுகாப்பிற்காக அல்லது தொடர்ந்து பரவுவதைத் தடுக்க முகக்கவசங்கள் பயன்படுத்தப்படலாம்,” என்று கூறப்பட்டுள்ளது.
22 ஜனவரி அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், உலக சுகாதார அமைப்பின் டாக்டர் மரியா வான் கெர்கோவ் “முகக்கவசங்கள் நோய் கட்டுப்பாட்டின் ஒரு அம்சமாகும். முகக்கவசம் இந்த வைரஸ் பரவலைக் குறைப்பதற்கான ஒரு அம்சம், ஆனால் அவற்றை அணிவது மட்டுமே நோய் பரவலைக் கட்டுப்படுத்திவிடாது,” என்று கூறியுள்ளார்.
முகக்கவசம் அணிவதைத் தவிர, உடல் ரீதியான சமூக விலகலைக் கடைபிடித்தல் மற்றும் நல்ல கை சுத்தம் போன்ற பிற அணுகுமுறைகளை பின்பற்றவும் அவர் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
இந்த வைரல் இடுகையை ட்விட்டரில் ஜூலியா என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இந்தப் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், இந்தப் பயனருக்கு 69 பின்தொடர்பவர்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
முடிவு: இந்த வைரல் கூற்று குறித்து நாங்கள் விசாரித்ததில் இந்த வைரல் பதிவு தவறானது என்பது தெரியவந்தது. உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, அவர்களின் முகக்கவசம் குறித்த வழிகாட்டுதல் பல சூழ்நிலைகளில்-சுகாதார அமைப்புகளுக்கு உள்ளேயும் வெளியேயும்-மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளது. மேலும், மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியதை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
பொறுப்புத்துறப்பு: #CoronavirusFacts எனும் தரவுத்தளம் கோவிட்-19 பரவலின் தொடக்கத்திலிருந்து வெளிவரும் தகவல்களின் உண்மை-சரிபார்ப்புகளை பதிவு செய்து வருகிறது. கொரோனா தொற்றுநோயும் அதன் விளைவுகளும் தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே வருவதோடு மட்டுமல்லாது, சில வாரங்கள் அல்லது சில நாட்களுக்கு முன்பு துல்லியமாக இருந்த தரவுகளே கூட மாறிபோகக்கூடிய சூழ்நிலையும் தற்போது உள்ளது. அதனால் ஓர் செய்தியை நீங்கள் பகிர்வதற்கு முன்பு, அச்செய்தி எந்த நாளில் உண்மைச் சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்கு பின்னரே பகிரவும்.உண்மை சரிபார்ப்பு: அரவிந்த் கெஜ்ரிவால் வேளாண் மசோதாக்களை ஆதரிக்கும் இந்தக் காணொலி திருத்தப்பட்டுள்ளது.
- Claim Review : புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி): ஆரோக்கியமான நபர் மருத்துவமனைக்கு வெளியே முகக்கவசம் அணிவதற்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை என்று 22 ஜனவரி அன்று உலக சுகாதார அமைப்பு கூறியதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு பதிவு கூறுகிறது.
- Claimed By : பேஸ்புக் பயனர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.