உண்மை சரிபார்ப்பு: தட்டம்மை தடுப்பூசி 1989க்கு முன் பிறந்தவர்களுக்கு வேலை செய்யாது என்ற பதிவு தெளிவற்றது

தட்டம்மை தடுப்பூசி 1989க்கு முன்பு பிறந்தவர்களுக்கு வேலை செய்யாது என்ற கூற்று தெளிவற்றது.

உண்மை சரிபார்ப்பு: தட்டம்மை தடுப்பூசி 1989க்கு முன் பிறந்தவர்களுக்கு வேலை செய்யாது என்ற பதிவு தெளிவற்றது

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு இடுகை, 1989 க்கு முன்னர் பிறந்தவர்கள் மீண்டும் மற்றொரு தட்டம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

இந்த இடுகை, விஸ்வாஸ் வாட்ஸ்அப் சாட்பாட் (+91 95992 99372) மூலமாக உண்மை சரிபார்ப்புக்காக நம்மை வந்தடைந்தது. விஸ்வாஸ் செய்தி விசாரணையில் இந்த வைரல் இடுகை தெளிவற்றது என்று தெரியவந்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் கூடுதல் தடுப்பூசி அறிவுறுத்தப்படலாம் என்றாலும், 1989 க்கு முன்னர் பிறந்த அனைவரும் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கூற்று

விஸ்வாஸ் வாட்ஸ்அப் சாட்பாட்டின் வழியே பகிரப்பட்ட ஒரு இடுகை, 1989 க்கு முன்னர் பிறந்தவர்கள், மீண்டும் மற்றொரு தட்டம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

விசாரணை

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த ​​வைரல் கூற்று முற்றிலும் totallythebomb.com என்ற வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம்.

தட்டம்மை என்பது வைரஸால் ஏற்படும் ஒரு தீவிர நோயாகும். மிக எளிதில் பரவக்கூடிய நோய்களுள் இதுவும் ஒன்றாகும். தட்டம்மை பேராமைக்சோவைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் ஏற்படுகிறது. இது பொதுவாக நேரடி தொடர்பு மற்றும் காற்று வழியாக பரவுகிறது. இந்த வைரஸ் முதலில் சுவாசக்குழாயைப் பாதித்து, பின்னர் உடல் முழுவதும் பரவுகிறது. தட்டம்மை மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு நோயே தவிர விலங்குகளுக்கு ஏற்படுவதில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

இந்த அமைப்பு 1989 க்கு முன்னர் பிறந்தவர்கள் புதிய தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது குறித்து எங்கும் குறிப்பிடவில்லை.

இந்த கூற்று குறித்து நோய் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) இணையதளத்தில் நாங்கள் தேடியபோதிலும், 1989க்கு முன் பிறந்தவர்கள் தட்டம்மை நோய்க்கு மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

CDC வலைத்தளத்தின்படி ஒரு நபர் பெற்றுள்ள தடுப்பூசிகளின் அளவைப் பொறுத்து, அவர் தட்டம்மைக்கு எதிராக பாதுகாக்கப்பட்டதாக கருதுகிறது. தட்டம்மை நோயிலிருந்து பாதுகாக்க பின்வரும் வழிகாட்டுதல்களை CDC குறிப்பிட்டுள்ளது:

அம்மை நோயிலிருந்து நான் பாதுகாக்கப்பட்டுள்ளேனா?

பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைக் காட்டும் ஆவணங்களை நீங்கள் கொண்டிருந்தால், தட்டம்மை நோயிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக CDC கருதுகிறது:

நீங்கள் கீழே சொல்லப்பட்டிருக்கும் ஏதோ ஒன்றில் பொருந்துபவராய் இருந்து, நீங்கள் தட்டம்மை எதிராக இரண்டு தடுப்பூசிகளை பெற்றிருக்க வேண்டும்.

◆ நீங்கள் பள்ளி வயது குழந்தையாய் இருந்திட வேண்டும் (தரம் K-12)

◆ நீங்கள் உயர்நிலைப் பள்ளி கல்வி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர், சுகாதாரப் பணியாளர் மற்றும் சர்வதேச பயணி போன்று தட்டம்மை நோய் அதிகம் பரவுவதற்கான ஒரு சூழலில் வேலை செய்யும் நபராய் இருக்க வேண்டும்.

நீங்கள் கீழே சொல்லப்பட்டிருக்கும் ஏதோ ஒன்றில் பொருந்துபவராய் இருந்து, நீங்கள் தட்டம்மை எதிராக ஒரு தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும்.

◆ நீங்கள் பாலக வயது குழந்தையாய் இருக்க வேண்டும்.

◆ நீங்கள் தட்டம்மை அதிகம் பரவுவதற்கான சூழலில் இல்லாத ஒரு நபராய் இருக்க வேண்டும்.

◆ உங்கள் வாழ்க்கையின் ஏதேனும் ஓர் கட்டத்தில் உங்களுக்கு அம்மை நோய் வந்திருக்க வேண்டும். அதை ஒரு ஆய்வகம் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

◆ நீங்கள் அம்மை நோயில் இருந்து முழுதாய் மீண்டு இருப்பதை ஒரு ஆய்வகம் உறுதிப்படுத்திட வேண்டும்.

◆ நீங்கள் 1957க்கு முன்பு பிறந்தவராய் இருக்க வேண்டும்.

நான் இப்போது வயதுக்கு வந்தவனாக இருக்கிறேன், ஆனால் என் குழந்தைப் பருவத்தில் தட்டம்மை தடுப்பூசி ஒருமுறை போட்டுக்கொண்டேன். நான் இப்போது இரண்டாவது முறையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா..?

நீங்கள் 1957 க்குப் பிறகு பிறந்திருந்து, உங்களுக்கு ஒருமுறையாவது அம்மை நோய்த்தொற்று வந்திருக்காவிட்டால் அல்லது உங்களுக்கு தட்டம்மை எதிரான நோயெதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால், நீங்கள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது அம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சில பெரியவர்களுக்கு இரண்டு முறை தடுப்பூசி தேவைப்படலாம். தட்டம்மை பரவுவதற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு சூழலில் இருக்கப்போகும் பெரியவர்கள், குறைந்தது 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். இந்தப் பட்டியலில் கீழே குறிப்படப்பட்டுள்ளவர்களும் அடங்குவர்.

• உயர்நிலைப் பள்ளிகளுக்கு பின்னான கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள்
• சுகாதாரப் பணியாளர்கள்
• சர்வதேச பயணிகள்
• பொது சுகாதாரத்துறை அதிகாரிகள்

மேலே சொல்லப்பட்டிருப்பவர்களுக்கு தட்டம்மை நோய்தொற்று பரவுவதற்கான ஆபத்து மற்றவர்களை விட அதிகமானது.

1960 களில் கொல்லப்பட்ட தட்டம்மை தடுப்பூசி பெற்றவர்கள், தற்போதைய நேரடி தட்டம்மை தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமா?

ஆமாம், முன்னரே கொல்லப்பட்ட தட்டம்மை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் (முந்தைய தட்டம்மை தடுப்பூசி இனி பயன்படுத்தப்படாது) தற்போதைய, நேரடி தட்டம்மை-மம்ஸ்-ரூபெல்லா (எம்.எம்.ஆர்) தடுப்பூசியை போட்டுக்கொள்வது குறித்து தங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

இந்த பட்டியலில் பலர் இடம்பெறவில்லை; கொல்லப்பட்ட தட்டம்மை தடுப்பூசியானது 1963 மற்றும் 1967 ஆண்டுகளுக்கு இடையில் 1 மில்லியனுக்கும் குறைவான மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்த வைரல் கூற்று பற்றி அறிந்திட யுனிசெப்பில் சுகாதார அதிகாரியாக இருக்கும் டாக்டர் பிரபுல் பரத்வாஜை நாங்கள் தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “ஒரு நோய் பெருவெடிப்பு மாறும் காலங்களில், அந்த பெருவெடிப்பினை தடுப்பதற்கு பல உத்திகள் இருக்கக்கூடும், ஆனால் இப்போது பெரியவர்கள் அனைவரும் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி எந்த பரிந்துரையும் செய்யப்படவில்லை,” என்றார்.

निष्कर्ष: தட்டம்மை தடுப்பூசி 1989க்கு முன்பு பிறந்தவர்களுக்கு வேலை செய்யாது என்ற கூற்று தெளிவற்றது.

Misleading
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்