இது கோவிட் -19 தடுப்பூசியில் செருகப்பட்ட சிப்பின் வரைபடம் அல்ல. வைரல் போஸ்ட் தவறானது.
புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு இடுகை, கோவிட் -19 தடுப்பூசியில் செருகப்பட்ட சிப் என ஒரு வரைப்படத்தை காட்டுகிறது.
விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில், இந்த இடுகை தவறானது என்று கண்டறியப்பட்டது. இந்த வரைபடம் ஒரு கித்தார் இசைக்கருவி மிதிவின் மின்சார சுற்றை காட்டுகிறது.
கூற்று
சமூக ஊடகங்களில் ஒரு வரைபடம், கோவிட் -19 தடுப்பூசியில் செருகப்பட்ட சிப்பின் வடிவமைப்பு என பகிரப்படுகிறது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
கொரோனா வைரஸ் மற்றும் கோவிட் தடுப்பூசி தொடர்பான போலி இடுகைகளால் சமூக ஊடக பயனர்கள் ஏமாற்றப்படுகின்றன. சமீபத்தில் விஸ்வாஸ் நியூஸ் வெளியிட்ட இதேபோன்ற போலி பதிவுகள், கோவிட் தடுப்பூசியில் மனதைக் கட்டுப்படுத்த ஒரு சிப் இருக்கும், மேலும் கேட் என்ற அறக்கட்டளை கோவிட் -19 ஸ்வாப் சோதனையின் போது பொருத்தியது என பகிரப்பட்டது.
இந்த இடுகை குறித்து விசாரிக்க, நாங்கள் முதலில் கூகிள் தலைகீழ் படத் தேடல் கருவியில் (Google Reverse Image Search Tool) படத்தைத் தேடினோம். GUITAR WORLD என்ற இணையதளத்தில் இந்த வரைபடத்தை நாங்கள் கண்டோம். அதில் சதி கோட்பாட்டாளர்கள் கோவிட் -19 தடுப்பூசிகளில் பொருத்தப்பட்டதாகக் கூறும் “5 ஜி சிப்பிற்கான” திட்டத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் – இது உண்மையில் பாஸ் மெட்டல் எனும் கிட்டார் இசைக்கருவி மிதிவின் மின் சுற்று வரைப்படம் என்று கூறுகிறது.
மேலும் தேடியதில், இந்த வரைப்படத்தை கொண்ட ஒரு ட்வீட்டைக் பகிர்ந்த பயனரின் சுயவிவரத்தில் ரெட்ஹாட்டின் மூத்த மென்பொருள் பொறியாளர் மரியா புஸ்கோ என்று கூறப்பட்டிருந்தது. அவர் தனது ட்வீட்டில் அந்தக் கோரிக்கையை மறுத்து, “இங்கே இத்தாலியில் மக்கள் இந்த புள்ளிவிவரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர், இது 5 ஜி சிப்பின் வரைபடம் கோவிட் தடுப்பூசியில் செருகப்பட்டுள்ளது. உண்மையில் இது ஒரு கிட்டார் மிதிவின் மின்சார சுற்று…” என்று எழுதியுள்ளார்.
பாஸ் மெட்டல் எனும் கிட்டார் இசைக்கருவி மிதிவின் தயாரிப்பாளர் சமீபத்தில் வரைபடம் தொடர்புடைய செய்திகளில் உறுதிப்படுத்தினார்.
விஸ்வாஸ் நியூஸ் NSITயின் மின் மற்றும் கட்டுப்பாட்டு பொறியாளரான உஜ்வாலுடன் பேசினோம். அவர் “இல்லை, இது கோவிட் சிப் வரைபடம் அல்ல. இது கித்தார் (op-amps)க்கான பெருக்கி,” என்று கூறினார்.
இந்த இடுகையை ட்விட்டரில் சீபீ என்ற பயனர் பகிர்ந்துள்ளார் . பயனரின் சகணக்கினை ஆராய்ந்ததில், அருக்கு 79 பின்தொடர்பவர்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.
निष्कर्ष: இது கோவிட் -19 தடுப்பூசியில் செருகப்பட்ட சிப்பின் வரைபடம் அல்ல. வைரல் போஸ்ட் தவறானது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923