X
X

உண்மை சரிபார்ப்பு: குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற அளவிலான அலுமினியம் இந்த தடுப்பூசியில் உள்ளது என்று கூறும் பதிவு தெளிவற்றது

பிடியாரிக்ஸ் தடுப்பூசி பாதுகாப்பற்ற அளவிலான அலுமினியத்தை கொண்டுள்ளது என்று கூறும் இடுகை தெளிவற்றது. ஒரு உயிரியல் சம்பந்தப்பட்ட பொருளின் தனிப்பட்ட டோஸில், அலுமினியத்தின் அளவு 0.85 மில்லிகிராம்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதன்படி பிடியரெக்ஸின் எந்தவொரு டோஸிலும் அலுமினியத்தின் அளவு 0.85 மில்லிகிராம்களுக்கு மேல் இல்லை (அல்லது 850 mcg) என்பதே உண்மை.

  • By: Urvashi Kapoor
  • Published: Dec 6, 2020 at 07:24 PM
  • Updated: Dec 7, 2020 at 01:27 PM

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). பேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவு, பிடியாரிக்ஸ் (Pediarix) தடுப்பூசியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற அளவிலான அலுமினியம் உள்ளது என்று கூறுகிறது.

விஸ்வாஸ் செய்தி விசாரணையில் ​​இந்த கூற்று தெளிவற்றது என்பதைக் கண்டறிந்தோம். பிடியாரிக்ஸ் தடுப்பூசி ஏற்கனவே பாதுகாப்புக்காக சோதிக்கப்பட்டுள்ள ஒரு தடுப்பூசியாகும். இது 2002 ஆம் ஆண்டு முதலே பயன்பாட்டில் உள்ள ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கூற்று

ஹெர்வி ஆல்வின் என்ற பயனரால் பேஸ்புக்கில் பகிரப்பட்ட இடுகை, “ஒரு பிடியாரிக்ஸ் தடுப்பூசியில் 850 mcg அலுமினியம் உள்ளது. FDA வழிகாட்டுதலின்படி, 2 மாத குழந்தைக்கு ஊசி போட ‘பாதுகாப்பான’ வரம்பு 25 mcg அலுமினியம் மட்டுமே,” என்று கூறுகிறது.

இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

இது குறித்த விசாரணையில், நாங்கள் உயிரியல் சம்பந்தப்பட்ட தயாரிப்புகளுக்கான அமெரிக்க கூட்டாட்சியின் விதிமுறைகளில் ஒரு அறிக்கையைக் கண்டறிந்தோம். “உயிரியல் சம்பந்தப்பட்ட ஒரு பொருளின் தனிப்பட்ட டோஸில் அலுமினியத்தின் அளவு 0.85 மில்லிகிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும்,” என்று கூறுகிறது

மேலும் இது குறித்த விசாரணையில், FDAவின் இணையதளத்தில் பிடியாரிக்ஸ் தொகுப்பினை கண்டறிந்தோம். அதிலிருந்த அறிக்கையில், அவர்களின் தடுப்பூசியின் ஒவ்வொரு டோஸிலும் 0.85 மில்லிகிராம் (850 mcg) அலுமினியத்தை விட அதிகமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

யு.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மேற்கொண்ட ஆய்வு ஒன்று, “குழந்தைகளின் முதல் வயதில் அவர்களுக்குப் போடப்படும் பரிந்துரைக்கப்பட்ட குழந்தை பருவ தடுப்பூசிகளிலிருந்து பெறப்படும் மொத்த அலுமினியத்தால் ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு,” என்று கூறுகிறது.

சில தடுப்பூசிகளில் அலுமினியம் சேர்க்கப்படுவது ஏன்?

FDAவின் படி, சில தடுப்பூசி சூத்திரங்களில் அலுமினிய உப்புகள் துணையாக சேர்க்கப்படுகின்றன. துணை என்பது தடுப்பூசி போடுப்படும் நபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, சில தடுப்பூசிகளில் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும்.

கிளாசோஸ்மித்க்லைன் (GSK) வலைத்தளத்தின்படி, உலகெங்கிலும் 14 பாதுகாப்பு சோதனைகளில் பிடியாரிக்ஸின் பாதுகாப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியினை ஒரு குழந்தை பிறந்து ஆறு வாரங்கள் முதல் ஆறு வயது வரை கொடுக்கலாம்.

இது குறித்து மேலும் அறிந்திட, ஜெய்ப்பூரில் உள்ள மெட்ரோ மாஸ் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு மருத்துவராக பணிபுரியும் டாக்டர் வீரேந்திர மிட்டலிடம் பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், பிடியாரிக்ஸில் பாதுகாப்பற்ற அளவு அலுமினியம் இல்லை என்றும், இது பரிசோதிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற தடுப்பூசி என்றும் கூறினார்.

இந்த இடுகையை பகிர்ந்துள்ள பேஸ்புக் பயனரின் சுயவிவரத்தை ஆராய்ந்ததில், ​​அவர் டெக்சாஸை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

निष्कर्ष: பிடியாரிக்ஸ் தடுப்பூசி பாதுகாப்பற்ற அளவிலான அலுமினியத்தை கொண்டுள்ளது என்று கூறும் இடுகை தெளிவற்றது. ஒரு உயிரியல் சம்பந்தப்பட்ட பொருளின் தனிப்பட்ட டோஸில், அலுமினியத்தின் அளவு 0.85 மில்லிகிராம்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதன்படி பிடியரெக்ஸின் எந்தவொரு டோஸிலும் அலுமினியத்தின் அளவு 0.85 மில்லிகிராம்களுக்கு மேல் இல்லை (அல்லது 850 mcg) என்பதே உண்மை.

  • Claim Review : பிடியாரிக்ஸ் (Pediarix) தடுப்பூசியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற அளவிலான அலுமினியம் உள்ளது
  • Claimed By : FB User
  • Fact Check : Misleading
Misleading
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later