இந்த வைரல் பதிவு தவறானது. இந்த இடுகையுடன் பகிரப்படும் புகைப்படத்தில் உள்ள செய்தித்தாளில் உள்ள சம்பவம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). கான்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறும் செய்தித்தாள் ஒன்றின் தலைப்பை காட்டும் புகைப்படம், இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டதால் நிலைமை இதுதான் என்ற கூற்றுடன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் ரூபெல்லா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்த பழைய சம்பவமே தற்போது தவறான கூற்றுடன் வைரலாகியுள்ளது.
கூற்று
“கான்பூரில் தடுப்பூசி போட்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 மாணவர்கள்” என்ற செய்தித்தாள் தலையங்கத்தை கொண்டுள்ள ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டால் நிலைமை இதுதான் என்று கூறுகிறது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசிக்கும், ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனிகா கூட்டணியால் உருவாக்கப்பட்டு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும் அவசரகால பயன்பாட்டிற்காக இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
ஜாக்ரானில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை, “இந்தியா தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த சனிக்கிழமையன்று தொடங்கி, அன்று மட்டும் மொத்தம் 2,07,229 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது உலகிலேயே ஒரே நாளில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஆகும். இந்தத் தடுப்பூசி திட்டத்தின் 2வது நாளில், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் மணிப்பூர் ஆகிய ஆறு மாநிலங்களில் சுமார் 553 தடுப்பூசி மையங்களில் சுமார் 17,072 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி போடப்பட்டது,” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி போடும் இயக்கத்தின் முதல் இரண்டு நாட்களில் மொத்தம் 447 எதிர்பாரா நிகழ்வுகள் பதிவாகியிருந்தாலும், 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தப்படுத்தும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
இதன் உண்மை சரிபார்ப்புக்காக நாங்கள் டைனிக் ஜாக்ரான் ஐநெக்ஸட்டின் முதன்மை ஆசிரியரான மயங்க் சுக்லாவைத் தொடர்பு கொண்டு பேசினோம். “எந்தவொரு செய்தி ஊடகமும் சமீபத்தில் இதுபோன்ற எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை. இந்தப் புகைப்பட செய்தித்தாளில் உள்ளது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முன்னர் நடைபெற்ற ஒரு சம்பவம். அப்போது ருபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்கள் சிலர் லேசான பக்க விளைவுகளை உணர்ந்தனர்,”என்று கூறினார்.
இந்தப் புகைப்படத்தைக் கவனித்து, அதிலிருந்த தலையங்கத்தை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், 30 நவம்பர் 2018 அன்று இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட ஒரு செய்தி கட்டுரையை நாங்கள் கண்டோம். “கான்பூரில் உள்ள மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடிப்புகள் உருவாகின. மாநிலம் தழுவிய தடுப்பூசி போடும் திட்டத்தின் ஒரு பகுதியாக தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசியினை அவர்கள் எடுத்துக்கொண்ட பின் காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்று வலி ஆகியவையும் அவர்களுக்கு உண்டாகின” என்று அக்கட்டுரை கூறுகிறது.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த ட்விட்டர் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு 1,362 பின்தொடர்பவர்கள் இருப்பதும், அக்டோபர் 2016 முதல் அக்கணக்கு செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்த இடுகையுடன் பகிரப்படும் புகைப்படத்தில் உள்ள செய்தித்தாளில் உள்ள சம்பவம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923