உண்மை சரிபார்ப்பு: இந்த காணொளியில் உள்ளவர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதிகள் அல்ல, அவர்களின் கூற்றுக்களும் உண்மை அல்ல
விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த வைரல் இடுகை உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் தவறாக பகிரப்படுவதும், அவர்களது கூற்றுக்கள் தெளிவற்றவை என்றும் தெரியவந்துள்ளது.
- By: Urvashi Kapoor
- Published: Nov 10, 2020 at 10:39 PM
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). ட்விட்டரில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவில், உலக சுகாதார நிறுவனம் திடீர் திருப்பமாக ஒரு முடிவை எடுத்துள்ளது என்றும், அதன்படி இனிமேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துவதோ, சமூக விலகலோ தேவையில்லை என்று அந்நிறுவனம் கூறுவதவாக சொல்லப்பட்டுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து அந்த வைரஸ் மற்றொரு நபருக்கு பரவ முடியாது என்றும் அந்நிறுவனம் கூறவதாக சொல்லப்படுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த வைரல் இடுகை உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் தவறாக பகிரப்படுவதும், அந்த காணொளியில் சொல்லப்படும் கூற்றுக்களும் தெளிவற்றவை என்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
கூற்று
பர்வேஸ் என்பவர் ட்விட்டரில் ஒரு காணொளியை பகிர்ந்து, “உலக சுகாதார நிறுவனம் திடீர் திருப்பமாக ஓர் முடிவை ஒன்றை எடுத்துள்ளது, அதன்படி இனிமேல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துவதோ, சமூக விலகலை கடைபிடிப்பதோ தேவையில்லை என்றும் அந்நிறுவனம் கூறுகிறது. மேலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து அந்த வைரஸ் மற்றொரு நபருக்கு பரவ முடியாது என்றும் அந்நிறுவனம் கூறுகிறது,” என்று எழுதியுள்ளார்.
விசாரணை
ஆதாரமற்ற கூற்றுகளைக் கொண்ட ஒரு வைரல் காணொளி உலக சுகாதார அமைப்பின் (WHO) பெயரில் பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியில் இருக்கும் மருத்துவர்கள் குறித்து விஸ்வாஸ் செய்தி விசாரித்தபோது, அவர்கள் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதைக் கண்டறிந்தோம்.
மேலும் இன்விட் கருவியைப் பயன்படுத்தி, ஸ்கிரீன்கிராப்களை பிரித்து, அவற்றை கூகுள் தலைகீழ் படத் தேடலைப் பயன்படுத்தி நாங்கள் தேடியதில், இந்த காணொளியில் உள்ள நபர்கள், உலக மருத்துவர்கள் கூட்டணி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சுகாதார நிபுணர்களின் குழு என்பதைக் கண்டறிந்தோம். இதன் உண்மையான காணொளியை இங்கே காணலாம்.
இது குறித்து விசாரிக்க உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இந்த கூற்றுக்களை முற்றிலுமாக மறுத்த அவர், இந்த காணொளி உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் தவறாகப் பகிரப்படுகிறது என்றும், அவர்களின் நிறுவனம் அத்தகைய எந்த கூற்றையும் வெளியிடவில்லை என்று கூறினார்.
இந்த இடுகையில் உள்ள உரிமைகோரல்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1) கொரோனா வைரஸ் நோயாளிகளை தனிமைப்படுத்தப்படவோ, சமூக இடைவெளியை கடைபிடிக்கவோ தேவையில்லை.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி (CDC), கோவிட்-19 க்கு ஆளாகியிருக்கக்கூடிய ஒருவரை மற்றவர்களிடமிருந்து விலக்கி வைக்க தனிமைப்படுத்தல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஒரு நபர் தான் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து கொள்வதற்கு முன்பும் அல்லது வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தும் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருப்போரிடமிருந்து நோய் பரவுவதைத் தடுக்கவும் தனிமைப்படுத்தல் உதவுகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், மற்றவர்களிடமிருந்து தாங்கள் பிரிந்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், தங்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும், மேலும் அவர்களின் மாநில அல்லது உள்ளூர் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மேலும், CDCயின் அறிவுறுத்தலின்படி, கோவிட்-19 இன் பரவலைக் குறைக்க மற்ற அன்றாட தடுப்பு நடவடிக்கைகளான முகமூடி அணிவது, கழுவப்படாத கைகளால் உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது, குறைந்தது 20 வினாடிகள் சோப்பு மற்றும் நீரில் கைகளை கழுவுதலோடு சேர்த்து சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்.
2) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் மற்றொருவருக்கு அந்த வைரஸினை பரப்ப முடியாது
இதற்கு முன்னரே இதேபோன்ற கூற்றை நாங்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளோம். அதன் முழுமையான உண்மை சரிபார்ப்பை இங்கே படிக்கலாம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படும் 90 சதவிகித நபர்கள் உண்மையாக பாதிக்கப்படவில்லை, எனவே அவர்களை நோய்வாய்ப்பட்டவர்களாக எடுத்துக்கொள்ள இயலாது.
தவறான கோவிட் -19 சோதனை முடிவுகள் சிக்கலானது என்றாலும், நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு நோய் இல்லை என்று அறிவிப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படும் 90 சதவிகித நபர்கள் உண்மையாக பாதிக்கப்படவில்லை எந்த அறிக்கையும் கூறவில்லை.
பிரிட்டிஷ் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இங்கிலாந்தில், RT-PCR இல் 0.8 முதல் 4 என்ற சதவீதத்தில் தொற்று இல்லாதவர்களுக்கு, நோய்த்தொற்று உள்ளதாக தவறாக முடிவுகளை வழங்கியுள்ளது, அதே நேரத்தில் 33% என்ற சதவீதத்தில் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு, தொற்று இல்லை என தவறாகக் காட்டியுள்ளது.
3) நோய்த்தொற்று உள்ளவர்களில் 86 சதவீதத்தினருக்கு எந்த அறிகுறியும் இல்லை.
ரூய்ட்டர்ஸின் ஒரு அறிக்கையின்படி, இங்கிலாந்தில் ஊரடங்கின்போது மாதிரி மக்கள்தொகையிடையே எடுக்கப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் நோய்த்தொற்று உள்ளவர்களாக தெரியவந்தவர்களில் 86% பேர் அறிகுறியற்றவர்களாக இருந்தனர். ஏப்ரல் 26 முதல் ஜூன் 27 வரை நடத்தப்பட்ட இந்த பைலட் ஆய்வில், இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் 36,061 நபர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரிசோதனையில் நோய்த்தொற்று உள்ளதாக முடிவினைப் பெற்ற 115 நபர்களில், 16 நபர்களுக்கு மட்டுமே அறிகுறிகள் இருந்தன, மற்ற 99 நபர்களுக்கும் சோதனை நாளன்று எந்த குறிப்பிட்ட அறிகுறியும் இல்லை. மேலும், சோதனை நாளில் தங்களுக்கு நோய் அறிகுறிகள் இருப்பதாகக் கூறிய 142 நபர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இல்லை என்றே பரிசோதனை முடிவு தெரிவித்தது, இவர்களின் எண்ணிக்கை நோய்த்தொற்று உள்ளவர்களைவிட அதிகமாகவே உள்ளது.
இந்த கணக்கெடுப்பின்படி, இந்த கூற்று இங்கிலாந்துக்கு பொருத்தமானதாக உள்ளது என்றாலும், மற்ற நாடுகளுக்கு இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த இடுகையை பர்வேஸ் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த பயனரின் சுயவிவரத்தை ஆராய்ந்ததில், இந்த கணக்கு ஜூலை 2020 இல் உருவாக்கப்பட்டது என்பதும், அக்கணக்கிற்கு 3 பின்தொடர்பவர்கள் இருப்பதும் தெரியவந்தது.
பொறுப்புத்துறப்பு: CoronavirusFacts எனும் தரவுத்தளம் கோவிட்-19 பரவலின் தொடக்கத்திலிருந்து வெளிவரும் தகவல்களின் உண்மை-சரிபார்ப்புகளை பதிவு செய்து வருகிறது. கொரோனா தொற்றுநோயும் அதன் விளைவுகளும் தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே வருவதோடு மட்டுமல்லாது, சில வாரங்கள் அல்லது சில நாட்களுக்கு முன்பு துல்லியமாக இருந்த தரவுகளே கூட மாறிபோகக்கூடிய சூழ்நிலையும் தற்போது உள்ளது. அதனால் ஓர் செய்தியை நீங்கள் பகிர்வதற்கு முன்பு, அச்செய்தி எந்த நாளில் உண்மைச் சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்கு பின்னரே பகிரவும்.
निष्कर्ष: விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த வைரல் இடுகை உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் தவறாக பகிரப்படுவதும், அவர்களது கூற்றுக்கள் தெளிவற்றவை என்றும் தெரியவந்துள்ளது.
- Claim Review : உலக சுகாதார நிறுவனம் திடீர் திருப்பமாக ஓர் முடிவை ஒன்றை எடுத்துள்ளது, அதன்படி இனிமேல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துவதோ, சமூக விலகலை கடைபிடிப்பதோ தேவையில்லை என்றும் அந்நிறுவனம் கூறுகிறது. மேலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து அந்த வைரஸ் மற்றொரு நபருக்கு பரவ முடியாது என்றும் அந்நிறுவனம் கூறுகிறது
- Claimed By : ட்விட்டர் பயனர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.