முடிவு: வைராலன கூற்று பொய்யானது என்பதையும், இதற்கு எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்பதையும் விஷ்வாஸ் நியூஸ் விசாரித்து கண்டறிந்துள்ளது. அரசமர இலைகளில் மருத்துவ குணங்கள் இருக்கலாம், ஆனால் அதன் வாசனையை உள்ளிழுப்பது கோவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்ஸிஜனுக்கு மாற்றாக முடியாது.
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): ஒரு கண்ணாடி ஜாடிக்குள் சில அரசமர இலைகளை (புனித அத்தி) போட்டு அதன் வாசனையை உள்ளிழுப்பது ஆக்ஸிஜனை 4-5 புள்ளிகள் அதிகரிக்கும் என்று கூறுகிறது. மேலும் அது ஜாடிக்குள் ஒரு கற்பூர வில்லையைப் போடுது இன்னும் சிறந்த பலனைக் கொடுக்கும் என்று கூறுகிறது. இந்த வைரலான கூற்று பொய்யானது என்பதையும், எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லாதது என்பதைம் விஷ்வாஸ் நியூஸ் விசாரித்து கண்டறிந்துள்ளது.
கூற்று
விஷ்வாஸ் நியூஸ் ஆனது உண்மை சரிபார்ப்புக்காக தனது வாட்ஸ்அப் சாட்பாட்டில் ஒரு செய்தியைப் பெற்றது. அந்த செய்தி பின்வருமாறு: “ஆக்ஸிஜன் அளவு குறைந்து, எங்கிருந்தும் ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்றால், வாடாத 4-5 அரசமர இலைகளை ஒரு கண்ணாடி ஜாடிக்குள் போட்டு ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் மூடியை மூடுவிடுங்கள். அதன்பிறகு மூடியைத் திறந்து மூக்கு மற்றும் வாய் வழியாக வாசனை உள்ளிழுங்கள். ஆக்ஸிஜன் அளவு உடனடியாக 4-5 புள்ளிகள் அதிகரிக்கும். இந்த முறையை நீங்கள் மீண்டும் மீண்டும் செய்யலாம். ஜாடிக்குள் ஒரு கற்பூர வில்லையைப் போடுவது இன்னும் சிறந்த பலன்களைக் கொடுத்திருக்கிறது. நீங்களும் அதை பயன்படுத்துங்கள், மற்றவர்களுக்கும் சொல்லுங்கள். இலவசமான மற்றும் நல்லொழுக்கமான பணி.”
விசாரணை
விஷ்வாஸ் நியூஸ் ஆனது அரச மரத்தின் குணங்களையும் அதன் இலைகளையும் தேடுவதன் மூலம் தனது விசாரணையைத் துவங்கியது. மொரேசியா குடும்பத்தைச் சேர்ந்த பொதுவாக அரச மரம் என அறியப்படும் ஃபிகஸ் ரிலிகியோசா (எல்.) ஆனது மேக வெட்டை நோய் மற்றும் தோல் நோய்களுக்கான சிகிச்சையில் புண் தடுப்பியாகவும், பாக்டீரியா தடுப்பியாகவும், நீரிழிவு தடுப்பியாகவும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், அரசமர இலைகளில் உள்ள ஆக்ஸிஜன் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு மாற்றாக இருக்கலாம் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
மருந்து பாதுகாப்பு அதிகாரியும் ஆயுர்வேத நிபுணருமான டாக்டர் விமல் அவர்களின் கூற்றுப்படி வைரலான கூற்று பொய்யானது. “சாதாரண நீராவியை உள்ளிழுப்பதால் சுவாசப்பாதையில் ஏற்படும் அடைப்பை நீக்கலாம் அல்லது தொண்டையை சுகப்படுத்தலாம். ஆனால் அரசமர இலைகள் அல்லது கற்பூரத்தின் வாசனையை உள்ளிழுப்பது மருத்துவ ஆக்ஸிஜனுக்கு உதவாது அல்லது மாற்றாக அமையாது” என்று அவர் கூறினார்.
விஷ்வாஸ் நியூஸ் ஆனது டெராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளர் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் பேசியது. சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதில் தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், சுவாசிப்பதில் சிரமமுள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்ஸிஜனுக்கு மாற்றாக முடியாது என்று அவர் கூறினார். அரச மரத்திற்கும் இது பொருந்தும். அரசமர இலைகள் அல்லது கற்பூர வாசனையை உள்ளிழுப்பது மருத்துவ ஆக்ஸிஜனை அதிகரிக்கும் எனும் இக்கூற்று உண்மையானது அல்ல.
நாங்கள் கற்பூரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த போது, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) இணையதளத்தில் ஒரு அறிக்கையைக் கண்டோம். CDC யின் கூற்றுப்படி, 2-காம்போனோன், பசை கற்பூரம், மர கற்பூரம், செயற்கை கற்பூரம் ஆகியவை கண்கள், தோல், சளி சவ்வு ஆகியவற்றில் எரிச்சலையும்; குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு; தலைவலி, தலைச்சுற்றல், சிலிர்ப்பு, கை கால் வலிப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.
निष्कर्ष: முடிவு: வைராலன கூற்று பொய்யானது என்பதையும், இதற்கு எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்பதையும் விஷ்வாஸ் நியூஸ் விசாரித்து கண்டறிந்துள்ளது. அரசமர இலைகளில் மருத்துவ குணங்கள் இருக்கலாம், ஆனால் அதன் வாசனையை உள்ளிழுப்பது கோவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்ஸிஜனுக்கு மாற்றாக முடியாது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923