உண்மை சரிபார்ப்பு: தலைவலிகளுக்கு ஆஸ்பிரினை விட வாதுமைக் கொட்டைகள் நன்றாக வேலை செய்கின்றன என்று க்ளைம் செய்யும் பதிவு தவறாக வழிநடத்துவது.

தலைவலிகளுக்கு ஆஸ்பிரினை விட வாதுமைக் கொட்டைகள் நன்றாக வேலை செய்கின்றன என்று க்ளைம் செய்யும் வைரல் பதிவு தவறாக வழிநடத்துவது. வாதுமைக் கொட்டைகள் ஆஸ்பிரினுக்கு பதிலாகப் பயன்படும் என்று உறுதி செய்ய எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை

புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): வாதுமைக் கொட்டைகள் ஆஸ்பிரினை விட நன்றாக வேலை செய்கின்றன என்று சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு க்ளைம் செய்கிறது. உங்களுக்குத் தலைவலி என்றால் 10-12 வாதுமைக் கொட்டைகளை சாப்பிடச் சொல்லி அந்தப் பதிவு யோசனை கூறுகிறது. 10-12 வாதுமைக் கோட்டைகள் இரண்டு ஆஸ்பிரின் சாப்பிடுவதற்கு இணையானவை என்று அந்தப் பதிவு மேலும் க்ளைம் செய்கிறது. விஷ்வாஸ் நியூஸ் இதை புலன்விசாரணை செய்து இந்தக் க்ளைம் தவறாக வழிநடத்துவது என்று கண்டுபிடித்தது.

க்ளைம்

ஒரு சமூக ஊடகப் பதிவு இவ்வாறு உள்ளது: “தலைவலிக்கு நிவாரணம். அடுத்த முறை உங்களுக்கு தலைவலி வரும்போது இரண்டு ஆஸ்பிரினுக்கு இணையான 10-12 வாதுமைக் கொட்டைகளை சாப்பிடுங்கள்.”

இந்தப் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே பார்க்கலாம்.

புலன் விசாரணை

விஷ்வாஸ் நியூஸ் புலன்விசாரணை செய்து ஆஸ்பிரின் என்பது சாலிசைலேடஸ் என்று அழைக்கப்படும் மருந்துகளின் குழுவில் உள்ளது என்று கண்டுபிடித்தது. காய்ச்சல், வலி, வீக்கம் மற்றும் ரத்தம் கட்டுதல் போன்றவற்றுக்குக் காரணமான சில இயற்கையான பொருட்களின் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் அது வேலை செய்கிறது.

நாங்கள் மேலும் புலன்விசாரணை செய்து நேஷனல் லைப்ரரி ஆஃப் மீடியா என்ற வலைதளத்தில், ஆஸ்பிரின் என்பது, மிதமான தலைவலிகளுக்கு நிவாரணம் கொடுக்க சைக்ளோஆக்சிஜெனேஸ் (COX)-ஐ குறி வைத்து ப்ரோஸ்டாக்லான்டின்-இன் தயாரிப்பைக் குறைக்கும் சாலிசைலேடஸ் என்று அழைக்கப்படும் மருந்துகளின் குழுவில் உள்ள ஒரு ஆசிடைலேட்டட் சாலிசைலேடஸ் என்று கூறும் ஒரு 2001 வருடத்திய அறிக்கையைக் கண்டுபிடித்தோம்.

சாலிசைலேடஸ்-இன் அளவுக்கு அதிகமான எந்த விதமான உபயோகமும் தலைவலிகளை உண்டாக்கும் என்று இன்னொரு அறிக்கை கூறுகிறது.

ஒரு அறிக்கையின்படி, வாதுமைக்கொட்டைகளிலும் சாலிசைலேடஸ் உள்ளது என்று சிட்னி லோக்கல் ஹெல்த் டிஸ்ட்ரிக்ட், நியூ சவுத் வேல்ஸ் (NSW) அரசு பரிந்துரைக்கிறது. சாலிசின் என்பது ஒரு இயற்கையாகத் தோன்றும் சாலிசைலேட என்பதால், தலைவலிகள் அல்லது ஒற்றைத் தலைவலியைக் கூட வாதுமைக் கொட்டைகள் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

வாதுமைக் கொட்டைகள் தலைவலிகளுக்கு எதிராக பயன் அளிக்கக் கூடியவை என்று மேலும் சில ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

ஒரு பயோமெட்சென்ட்ரல் ஆய்வு உணவுப் பழக்கத்துக்கும் தலைவலிக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தது. இங்கே படிக்கவும்.

இருந்த போதிலும், மேற்குறிப்பிட்ட எந்த ஆய்வுகளும் எவ்வாறு உணவுப்பழக்கம் தலைவலிகளைக் குறைக்கிறது என்று குறிப்பிடவில்லை. எனவே வாதுமைக் கொட்டைகள் தலைவலிகளை குணப்படுத்தும் அல்லது தலைவலிகளுக்கான சிகிச்சையில் அவை ஆஸ்பிரினுக்கு பதிலாகப் பயன்படும் என்று நிறுவ மேல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

விஷ்வாஸ் நியூஸ் டாக்டர் ஜூனேஜா நியூரோ சென்டர், மகாராஜா அக்ராசென் மருத்துவமனையின் நரம்பியல் ஆலோசகர் டாக்டர் அபிஷேக் ஜூனேஜாவிடம் பேசினோம். “வாதுமைக் கொட்டைகள் ஆஸ்பிரினுக்கு பதிலாக பயன்படும் என்று உறுதி செய்ய எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை. வாதுமைக் கொட்டைகள் ஆரோக்கியமான உணவு என்று கருதப்பட்டாலும், அவை தலைவலிக்கு நிவாரணம் அளிப்பவை என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை.” என்று அவர் கூறினார்.

இந்தப் பதிவு ஃபேஸ்புக்கில் ‘Nutritionist Alizay khattak’ என்ற பெயருடைய பக்கத்தால் பகிரப் பட்டிருந்தது. அந்தப் பக்கத்தை நாங்கள் ஸ்கேன் செய்து அதில் உணவுப் பழக்கம் மற்றும் சத்துணவு குறித்தான பல பதிவுகள் இருப்பதைக் கண்டுபிடித்தோம். அந்தப் பக்கத்துக்கு 65 பின்பற்றுபவர்கள் உள்ளனர்.

निष्कर्ष: தலைவலிகளுக்கு ஆஸ்பிரினை விட வாதுமைக் கொட்டைகள் நன்றாக வேலை செய்கின்றன என்று க்ளைம் செய்யும் வைரல் பதிவு தவறாக வழிநடத்துவது. வாதுமைக் கொட்டைகள் ஆஸ்பிரினுக்கு பதிலாகப் பயன்படும் என்று உறுதி செய்ய எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
சமீபத்திய போஸ்ட்கள்