தினை கொரோனா வைரஸ் வராமல் தடுக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், நோய்த்தொற்றுகளின் போது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, உணவில் தினையினை சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). தினை அல்லது பஜ்ராவை உட்கொள்வதன் மூலம் கொரோனா வைரஸ் வராமல் தடுக்கலாம் என்று மராத்தி மொழியில் பகிரப்படும் ஒரு வைரல் கூற்றைக் நாங்கள் கண்டறிந்தோம். இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்தக் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது.
கூற்று
“वक्रतुंड फिटनेस क्लब राजगुरूनगर” என்ற பேஸ்புக் பக்கம், பின்வரும் செய்தியை மராத்தி மொழியில் பகிர்ந்துள்ளது.
“கொரோனா வைரஸுக்கு எதிராக சிகிச்சையளிப்பதில் தினை ரொட்டி அல்லது பஜ்ரா ரொட்டியினை உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கிறது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவர் சூடாக உணவை உட்கொள்வது, அவர் குணமடைவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் சமீபத்தில் தெரிவித்துள்ளனர். எனவே, நமது உணவுப் பழக்கத்தை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். தினை சாப்பிடும் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள் என்று பிரபல மருத்துவர்கள் கூறுகிறார்கள். தினை இயற்கையிலே சூடான தன்மை கொண்டதாகும். அவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலில் வெப்ப அளவு நிலையாக பராமரிக்கப்படுகிறது, இதனால், தினை உட்கொள்ளும் மக்களை கொரோனா வைரஸ் தாக்குவதில்லை. அப்படியே நோய்த்தொற்று ஏற்பட்டாலும், தினையினில் உள்ள வெப்பமானது எதிர்புரதங்கள் (ஆன்டிபாடிகள்) உருவாக வழிவகுக்கிறது. தினை உட்கொள்ளும் நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டாலும், அவர் ஒருபோதும் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள மாட்டார். நாட்டின் கிராமப்புறங்களில் வசிக்கும், தினை சாப்பிடும் மக்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இதுவே காரணம். கிராமத்தில் வசதிகள் இல்லாதபோது கூட, மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படுவதில்லை.”
தினையின் நன்மைகள்:
1) உடலைப் பலப்படுத்துதல் – தினை சாப்பிடுவது உடலில் ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.
2) தினை எளிதில் செரிக்கும் உணவாகும். இது எடையைக் குறைக்க உதவுகிறது.
3) தினை இதய நோய் அபாயத்தையும், கொழுப்பையும் குறைக்கிறது.
4) கார்போஹைட்ரேட்டுகள், மாவுச்சத்து நிறைந்த உணவுகள் அதிக அளவில் உடலை நிரப்புகின்றன.
5) தினை நார் – இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
6) தினை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.
7) புற்றுநோய் – தினை ரொட்டி சாப்பிடுவது புற்றுநோய் வராமல் ஒருவரைப் பாதுகாக்கிறது.
இந்த தினை ரொட்டியில் இதுபோன்ற பல நன்மைகள் உள்ளன
அன்புடன் நாத் சன்வித்
இந்த இடுகை மற்றும் அதன் காப்பக பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
உலக சுகாதார அமைப்பின் (WHO) வலைத்தளத்தை ஆராய்வதின் மூலம் நாங்கள் எங்கள் விசாரணையை தொடங்கினோம். அவ்வாறு ஆராய்ந்ததில், தினை கொரோனா வைரஸ் வருவதைத் தடுக்கும் என்று கூறும் எந்த குறிப்பையும் எங்கும் எங்களால் காண முடியவில்லை. இருப்பினும், அந்த வலைத்தளத்தின் ஒரு பிரிவில், “கோவிட்-19 நோய்த்தொற்று காலத்தில் பெரியவர்களுக்கான ஊட்டச்சத்து ஆலோசனை” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை நாங்கள் கண்டோம்.
இந்த அறிக்கையில், மக்கள் தங்கள் உணவில் ‘தினை’ சேர்த்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது, இருப்பினும் தினை சாப்பிடுவது கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
“பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் (பயறு, பீன்ஸ்), பருப்புகள் மற்றும் முழு தானியங்கள் (பதப்படுத்தப்படாத மக்காச்சோளம், தினை, ஓட்ஸ், கோதுமை, பழுப்பு அரிசி அல்லது மாவுச்சத்து நிறைந்த கிழங்குகள் அல்லது உருளைக்கிழங்கு, யாம், டாரோ அல்லது கசவா போன்ற வேர்கள்) மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுகள் (இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால்),” ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
“சரியான ஊட்டச்சத்தும், சரியான அளவில் நீர் அருந்துவதும் மிகவும் முக்கியமானவையாகும். நல்ல சீரான உணவை உட்கொள்ளும் மக்கள் வலுவான நோயெதிர்ப்பு அமைப்பினை பெற்று, நாட்பட்ட நோய்கள் மற்றும் தொற்று நோய்களுக்கு எதிராக ஆரோக்கியமாக இருக்கிறார்கள். எனவே உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், உணவு நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைப் பெற நீங்கள் ஒவ்வொரு நாளும் பலவிதமான புதிய மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளை உண்ண வேண்டும். போதுமான நீர் அருந்த வேண்டும். அதிக எடை, உடல் பருமன், இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை கணிசமாகக் குறைக்க சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு ஆகியவற்றைத் தவிர்க்கவும்,” என்று அந்த ஊட்டச்சத்து ஆலோசனையில் குறிப்படப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக இந்த வைரல் செய்தி கூறுகிறது. இந்த கூற்று உண்மையா என்பதை நாங்கள் ஆராய்ந்தோம். இது சம்பந்தமாக, செப்டம்பர் 5, 2020 அன்று டெக்கான் ஹெரால்டு நடத்திய பி.டி.ஐ அறிக்கையை நாங்கள் கண்டறிந்தோம். இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது
“கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து சரியான தகவல் இல்லை என்றாலும், இது இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பரவியுள்ளது என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன, மேலும் இந்த நோய் சர்வவல்லமை கொண்ட ஒன்றாக திகழ்கிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“பாதி வறண்ட வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம்” (ICRISAT) மே 24, 2020 அன்று ‘கோவிட்- 19 சூழலில் உணவில் புது கவனமும், சரியான உணவு உட்கொள்ளலும்’ என்று தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில், “தினைகளில் உள்ள நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் ஒரு தனிநபரின் நுண்ணிய ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்வதற்கான இயற்கையின் மாற்றாக நாம் கருதலாம். உதாரணமாக, விரல் தினையில் (ராகி) பாலை விட மூன்று மடங்கு அதிக கால்சியம் உள்ளது; மற்றொரு பிரபலமான ஊட்டச்சத்து-தானியமான முத்து தினையில் அதிக அளவு ஃபோலேட் உள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தினை, நோய் எதிர்ப்பு சக்தி, கொரோனா வைரஸ்’ போன்ற வார்த்தைகளை நாங்கள் இணையத்தில் தேடியபோது, ஏப்ரல் 28, 2020 அன்று தி இந்து பிஸினஸ் லைனில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை நாங்கள் கண்டோம். “கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி ஒரு முக்கிய ஆயுதம்” என்பதே அக்கட்டுரையின் தலைப்பாகும். மேலும் அக்கட்டுரையில் “தினைகளை உண்டு நல்ல நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குங்கள்: ஐ.ஐ.எம்.ஆர் (இந்திய தினை ஆராய்ச்சிக் கழகம்),” என்று குறிப்பிடப்பட்டிருப்பதை எங்களால் காண முடிந்தது.
மேலும் அக்கட்டுரையில் “நோய் எதிர்ப்பு சக்தியை மெருகேற்றும் உணவுகளாக பல உணவு வகைகள் அறியப்படுகின்றன. இதில் பிரதான தானியமாக இருக்கும் தினை, ஓர் நம்பிக்கையான உணவு வகையாகும். குறிப்பாக கோவிட் -19 வைரஸ் தொற்று பரவும் இந்த சூழ்நிலையில், இது பொருத்தமானதாக உணவு வகையாக இருக்கும் என்று அவர்கள் கூறினர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையும் தினையினை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாகும் என்று கூறினாலும், தினை உட்கொள்வது கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் என்று குறிப்பிடவில்லை.
எங்களின் இறுதி கட்ட விசாரணையாக இந்திய தினை ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனரான முனைவர் விலாஸ் A டோனாபியுடன் உரையாடினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், நோய் எதிர்ப்பு சக்தி உணவுடன் தொடர்புடையது என்றும், எனவே, நோய்த்தொற்றுகளின் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினையை உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்றும் கூறினார்.
ஜோவர், ராகி, ஃபோக்ஸ்டைல், பஜ்ரா மற்றும் பிற தானியங்கள், சில முக்கிய தானியங்களை விட ஊட்டச்சத்து மிகுந்தவை என்றும், அவை புரதம், அதிக உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகவும் செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், இந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இருப்பினும், தினை கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் என்ற கூற்றில் எந்த உண்மையும் இல்லை, இதனை உறுதிப்படுத்து வகையில் எந்த ஆய்வும் இல்லை என்று கூறினார்.
இந்த கூற்றினை பேஸ்புக்கில் வெளியிட்ட பக்கத்தை நாங்கள் ஆராய்ந்ததில், “वक्रतुंड फिटनेस क्लब राजगुरूनगर” என்ற அந்தப் பக்கம் மகாராஷ்டிராவின் ராஜ்குரு நகரத்திலிருந்து செயல்படுவதும், அப்பக்கத்திற்கு 457 பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: தினை கொரோனா வைரஸ் வராமல் தடுக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், நோய்த்தொற்றுகளின் போது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, உணவில் தினையினை சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923