உண்மை சரிபார்ப்பு: ஊதுபத்திகள் கொரோனா வைரஸ் வராமல் தடுக்காது
ஊதுபத்திகளால் கொரோனா வைரஸைத் தடுக்க முடியாது. இந்த வைரல் இடுகை தவறானது.
- By: Urvashi Kapoor
- Published: Feb 18, 2021 at 09:00 PM
புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). ஊதுபத்திகள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடக்கூடும் என்று ஒரு யூடியூப் சேனலில் பகிரப்பட்ட காணொலி ஒன்று கூறுகிறது. ஊதுபத்திகளிலிருந்து வரும் நேர்மறை ஆற்றல் வைரஸைத் தடுக்கும் என்பதால் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று அந்த காணொலியில் கூறப்பட்டுள்ளது.
விஸ்வாஸ் நியூஸ் விசாரித்ததில், இந்த வைரல் கூற்று தவறானது என்பதைக் கண்டறிந்ததோம். இந்தக் கூற்று எந்த அறிவியல் ஆதாரங்களாலும் நிரூபிக்கப்படவில்லை.
கூற்று
ஒரு யூடியூப் சேனலில் பகிரப்பட்ட ஒரு காணொலியில், “தடுப்பூசி எடுக்க வேண்டிய அவசியமில்லை; கொரோனா வைரஸை குணப்படுத்த ஊதுபத்திகள் போதுமானது. எதிர்மறை ஆற்றல் காரணமாக கொரோனா வைரஸ் பரவுகிறது. இதை நிறுத்த, நாம் நேர்மறை ஆற்றலை அறிமுகப்படுத்தலாம். சமீபத்தில் நான் ஒரு பரிசோதனையைச் செய்தேன், அதில் நான் என் வீட்டில் அம்பிகாவின் ஊதுபத்தியை பற்றி வைத்தேன், கொரோனா போய்விட்டது. ஆகவே, ஒருவர் காலையிலும் மாலையிலும் குறைந்தது 9-10 ஊதுபத்திகளை ஏற்றவதன் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்,” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
ஊதுபத்திகளின் மணம் நேர்மறை ஆற்றலுடன் தொடர்புடையது மற்றும் நேர்மறை ஆற்றல் மனதையும் உடலையும் ஆற்றும். ஆனால் ஊதுபத்திகளிலிருந்து வரும் நேர்மறை ஆற்றல் கொரோனா வைரஸைக் குணப்படுத்தும் என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை.
நாங்கள் இது குறித்து ஆய்வு செய்து, தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ரோங் ஜூ மற்றும் சீனாவில் உள்ள சீனா புகையிலை குவாங்டாங் தொழில்துறை நிறுவனத்தால் நடத்தப்படும் அறிவியல் நாளிதழ் ஒன்றில் ஆய்வறிக்கை ஒன்றைக் கண்டறிந்ததோம். அதில்,” ஊதுபத்தி புகை மரபணு மாற்றம் செய்யும் திறன் உடையது என்று கண்டறியப்பட்டுள்ளது, அதாவது டி.என்.ஏ போன்ற மரபணுப் பொருள்களை மாற்றக்கூடிய ரசாயன பண்புகள் இதில் உள்ளன, எனவே இவை மரபணு மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அதில்,”ஊதுபத்தி புகை செல்களை பாதிக்கக்கூடியது, குறிப்பாக அதிலுள்ள மரபணுக்களை தாக்கக்கூடியது,” என்று கூறப்பட்டுள்ளது.
இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் டாக்டர் நிகிலிடம் இது குறித்து பேசினோம். இது குறித்து அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் தடுப்பூசி தேவையில்லை என்று சொல்வதும், ஊதுபத்திகளை எரிப்பதால் கொரோனா வைரஸ் குணமாகும் என்று கூறுவதும் தவறானது,” என்று கூறினார்.
தி இந்துவின் ஒரு அறிக்கையில், “அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநரும், பிரபல நுரையீரல் நிபுணருமான ரன்தீப் குலேரியா, கோவிட் -19 இன் தீவிரத்தையும் இறப்பையும் குறைக்க தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். மேலும் இந்திய அரசாங்கம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஆபத்தற்றவை என்று கூறியதையும் அவர் மேற்கோளிட்டு காட்டினார்,” என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்இன்டியா தெலுங்கு என்ற சேனல் இந்த காணொலியை யூடியூப்பில் பகிர்ந்துள்ளது. இந்த சேனலிற்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
निष्कर्ष: ஊதுபத்திகளால் கொரோனா வைரஸைத் தடுக்க முடியாது. இந்த வைரல் இடுகை தவறானது.
- Claim Review : தடுப்பூசி எடுக்க வேண்டிய அவசியமில்லை; கொரோனா வைரஸை குணப்படுத்த ஊதுபத்திகள் போதுமானது. எதிர்மறை ஆற்றல் காரணமாக கொரோனா வைரஸ் பரவுகிறது. இதை நிறுத்த, நாம் நேர்மறை ஆற்றலை அறிமுகப்படுத்தலாம். சமீபத்தில் நான் ஒரு பரிசோதனையைச் செய்தேன், அதில் நான் என் வீட்டில் அம்பிகாவின் ஊதுபத்தியை பற்றி வைத்தேன், கொரோனா போய்விட்டது. ஆகவே, ஒருவர் காலையிலும் மாலையிலும் குறைந்தது 9-10 ஊதுபத்திகளை ஏற்றவதன் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்
- Claimed By : பேஸ்புக் பயனர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.