புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்): 2023 உலகக் கோப்பை தொடர்பான பல பொய்யான மற்றும் தவறான கருத்துகள் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பரவி வருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட ஒரு டிரெண்டிங் பதிவு, அக்டோபர் 23 அன்று பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போட்டியின் போது, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் “பாரத் மாதா கி ஜெய்” என்று முழக்கமிட்டதாக குறிப்பிடுகிறது.
மேலும், பாகிஸ்தான் அளித்த புகாரின் பேரில் கானிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ரூ.55 லட்சம் அபராதம் விதித்ததாகவும் அதில் கூறப்படுகிறது. கானுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தொழிலதிபர் ரத்தன் டாடா ஈடுசெய்வார் என்றும் மேலும் அவருக்கு ரூ.10 கோடி வெகுமதி அளிப்பார் என்றும் வைரல் பதிவு கூறுகிறது.
விசாரணையில், விஷ்வாஸ் நியூஸ் வைரலான தகவல் தவறானது என தீர்மானமான முடிவுக்கு வந்தது. உலா வரும் இத்தகைய கூற்றுக்களை ரத்தன் டாடாவே வெளிப்படையாக மறுத்து, தனது பெயருடன் தொடர்புடைய இவ்வாறான அனைத்து கூற்றுகளும் தவறானவை என்று நிராகரித்திருக்கிறார்.
ஃபேஸ்புக் பயனர் ‘சம்ஷர் சிங் ஷெகாவத்’, அக்டோபர் 30, 2023 அன்று வைரல் இணைப்பைப் பகிர்ந்து, “மதிப்பிற்குரிய ஸ்ரீ ஸ்ரீ ரத்தன் டாடா சார்… இல்லை இல்லை, நான் பாரத ரத்னாவைப் பற்றி பேசவில்லை. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போட்டிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் “பாரத் மாதா கி ஜெய்” என்று முழக்கமிட்டார், மேலும் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கங்களை எழுப்பினர், பின்னர் அனைத்து காங்கிரஸ்காரர்கள் மற்றும் அண்டிப்பிழைக்கும் இடதுசாரிகள் ஆதரிக்கும் பாகிஸ்தான், ஐசிசி-யிடம் புகார் அளித்தது, ஐசிசி ரஷித் மீது ரூ.55 லட்சம் அபராதம் விதித்தது. பிறகு ஸ்ரீ ரத்தன் டாடா ஜி, ரஷித்தின் தண்டனைத் தொகையை தருவதாகக் கூறியதோடு, ரஷித்துக்கு ரூ.10 கோடி வெகுமதி அளித்தார். இது இந்தியாவின் ஆண்டு, இதுவே மகத்துவம், ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீ ராம் பாரத் மாதா, மேலும் அவர்கள் எப்போதும் பாரத மாதாவின் மகனும், உண்மையான இந்தியருமான ரத்தன் டாடா போன்றோரை துஷ்பிரயோகம் செய்து, பாகிஸ்தான், ஹமாஸ், ரோஹிங்கியா மற்றும் பயங்கரவாதிகளை ஆதரிக்கின்றனர்.” என்று எழுதியுள்ளார்.
வைரல் கூற்றை விசாரிக்க, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள் தேடலை நடத்தினோம். இது எங்களை, ரத்தன் டாடாவின் சரிபார்க்கப்பட்ட X ஹேண்டிலில் இருந்து இந்த கூற்றை வெளிப்படையாக மறுக்கும் ஒரு இடுகைக்கு இட்டுச்சென்றது. அக்டோபர் 30, 2023 அன்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ட்வீட்டின் இந்தி மொழிபெயர்ப்பு உள்ளது அதில், “ஐசிசி அல்லது எந்த கிரிக்கெட் அமைப்புக்கும் எந்த வீரருக்கும் நான் அபராதம் அல்லது வெகுமதிகளை பரிந்துரைக்கவில்லை. எனக்கு கிரிக்கெட்டுடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லை. வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் மற்றும் வீடியோக்கள் எனது அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து தோன்றாத வரையில் அவற்றை நம்புவதைத் தவிர்க்கவும்.“ என்று உள்ளது.
க்ளைம் தொடர்பாக டைனிக் ஜாக்ரனின் இணையதளத்தில் அக்டோபர் 30, 2023 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை நாங்கள் கண்டோம். அந்த அறிக்கையின்படி, “புகழ்பெற்ற தொழிலதிபர் ரத்தன் டாடா சமீபத்தில் ஐசிசி அல்லது எந்த கிரிக்கெட் அதிகாரிகளுடனும் தனக்கு தொடர்பில்லை என்பதைக் கூறி தன்னைக் குறித்து வரும் அனைத்து க்ளைம்களையும் நிராகரித்துள்ளார்”
வைரலான கூற்று தொடர்பாக டாடா டிரஸ்ட் மக்கள் தொடர்பு பிரதிநிதி பாப் ஜானை அணுகினோம். இந்த வைரல் பதிவு தவறானது என்று கண்டனம் தெரிவித்த அவர், ரத்தன் டாடாவே இந்தக் கூற்றை நிராகரித்ததாகக் கூறினார். ரத்தன் டாடாவுடன் தொடர்புடைய பல க்ளைம்கள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டு, விஷ்வாஸ் நியூஸ் மூலம் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேக்ட் செக் அறிக்கைகளை இங்கே அணுகலாம் .
பின்னர், தவறான கூற்றைப் பகிர்ந்த பயனரின் சுயவிவரத்தை நாங்கள் ஆய்வு செய்தோம், பயனர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் என்பதையும், பேஸ்புக்கில் 534 நண்பர்கள் கொண்டு இருப்பதையும் கண்டுபிடித்தோம்.
முடிவு: விஷ்வாஸ் நியூஸ், தனது விசாரணையின் மூலம், ரஷித் கான், ரத்தன் டாடாவிடம் இருந்து 10 கோடி ரூபாய் வெகுமதி பெற்றதாகவும் அவர் தனது அபராதமான ரூபாய் 55 லட்சத்தை செலுத்தினார் என்றும் கூறப்பட்ட தகவல் தவறானது என்று உறுதி செய்துள்ளது. ரத்தன் டாடா தனது சரிபார்க்கப்பட்ட X கணக்கில் ஒரு இடுகையைப் பகிர்ந்து இந்த க்ளைம் குறித்து நேரடியாக தெளிவுபடுத்தியுள்ளார்.
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923