உண்மை சரிபார்ப்பு: ஆயுதங்களின் பழைய புகைப்படங்கள் தவறான கூற்றுடன் வைரலாகிறது
இந்த புகைப்படங்களின் படத்தொகுப்பு தவறான கூற்றுடன் வைரலாகிறது. இதில் காட்டப்படும் ஆயுதங்களுக்கும், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை.
- By: Ashish Maharishi
- Published: Apr 1, 2021 at 04:05 PM
விஸ்வாஸ் செய்தி (புது தில்லி). சில ஆயுதங்களின் மூன்று புகைப்படங்களின் தொகுப்பு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியில் உள்ள ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) இடத்தில் நடந்த சோதனையின் போது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.
விஸ்வாஸ் செய்தி இந்த வைரல் இடுகையை விசாரித்ததில், இது தவறானது என்று கண்டறியப்பட்டது. இந்தப் படங்கள் நீண்ட காலமாக வெவ்வேறு கூற்றுகளுடன் வைரலாக உள்ளன. மேலும் இக்கூற்றுக்களை விஸ்வாஸ் செய்தி உண்மை சரிபார்ப்பு செய்துள்ளது.
கூற்று
பேஸ்புக் பக்கமான தி ரியல் ஹீரோஸ் ஆஃப் நேஷன், 23 மார்ச் அன்று ஒரு பதிவை வெளியிட்டு, “டெல்லியில் விரிவான சோதனை. RSS மறைவிடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி. இந்திய தலைநகரில் ஏன் இவ்வளவு ஆயுதங்கள் இருப்பு வைக்கப்பட்டன என்பதைப் பற்றி சமூகம் இன்னும் சிந்திக்க வேண்டும். வேலிகளே பயிர்களை மேய்வதைப் புரிந்து கொள்ளுங்கள். துரோகிகள் யார்? வகுப்புவாத பயங்கரவாதிகள் யார்? மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நடுநிலையான விசாரணைக்கு டெல்லிக்கு வெளியில் இருந்து காவல்துறை உதவியை நாட வேண்டும். சௌகிதர் எதுவும் பேசவில்லை! ” என்று எழுதியுள்ளது.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
நாங்கள் அனைத்து படங்களையும் கவனமாகக் கவனித்து, ஒவ்வொரு கூற்றையும் ஒவ்வொன்றாக உண்மை சரிபார்ப்பு செய்தோம். கூகுள் பின்னோக்கிய பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, முதல் படத்தைத் தேடினோம். அவ்வாறு தேடியதில், ஃப்ளிக்கர் இணையதளத்தில் ஒரு இணைப்பைக் கண்டோம். இந்தப் படம் இடம்பெற்றிருக்கும் கணக்கின் பெயர், கல்சா கிர்பன் தொழிற்சாலை என்று இருந்தது. இது குறித்து விசாரிக்க நாங்கள் அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் பச்சன் சிங்கை தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய அவர், இந்த வைரல் புகைப்படம் தனது கடையில் எடுக்கப்பட்டது என்று கூறினார். இதே புகைப்படம் தவறான கூற்றுடன் பல முறை வைரலாகியுள்ளது.
இரண்டாவது புகைப்படத்தை கூகுள் பின்னோக்கிய படத் தேடலில் தேடியதில், @GujratHeadline என்ற ட்விட்டர் கணக்கில் அதனைக் கண்டறிந்தோம். 5 மார்ச், 2016 அன்று வெளியான ஒரு ட்வீட்டில், ராஜ்கோட்டில் உள்ள ஒரு கடையில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது. வைரல் புகைப்படத்தில் இருந்த அதே காவல்துறை அதிகாரி, ஆயுதம் மற்றும் காவல் நிலையத்தை இதே இடுகையிலும் நம்மால் காண முடிந்தது.
யான்டெக்ஸ் பின்னோக்கிய படத் தேடலைச் செய்து மூன்றாவது புகைப்படத்தை தேடியதில், அந்த புகைப்படம் @mehrzadalavinia என்ற இன்ஸ்டாகிராம் பயனரால் பகிரப்பட்டதைக் கண்டோம். இந்தப் புகைப்படம் 17 ஏப்ரல் 2019 அன்று பதிவேற்றப்பட்டிருந்தது.
நாங்கள் இதன் உண்மை சரிபார்ப்பிற்காக ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தை தொடர்பு கொண்டு, டெல்லியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் துலியுடன் பேசினோம். நம்மிடம் பேசிய அவர், இந்த வைரல் பதிவுகள் தவறானவை என்று கூறினார். மேலும் தொடர்ந்த அவர், இந்த வைரல் இடுகையில் உள்ள புகைப்படங்களுக்கும், தங்கள் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார்.
இந்த தவறான இடுகையைப் பகிர்ந்த ரியல் ஹீரோஸ் ஆஃப் நேஷன் என்ற பேஸ்புக் பக்கத்தை நாங்கள் ஆராய்ந்ததில், இப்பக்கத்திற்கு 795 பின்தொடர்பவர்கள் இருப்பதைக் கண்டோம். இந்தப் பக்கம் 27, பிப்ரவரி, 2021 அன்று உருவாக்கப்பட்டது.
निष्कर्ष: இந்த புகைப்படங்களின் படத்தொகுப்பு தவறான கூற்றுடன் வைரலாகிறது. இதில் காட்டப்படும் ஆயுதங்களுக்கும், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை.
- Claim Review : டெல்லியில் விரிவான சோதனை. RSS மறைவிடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி. இந்திய தலைநகரில் ஏன் இவ்வளவு ஆயுதங்கள் இருப்பு வைக்கப்பட்டன என்பதைப் பற்றி சமூகம் இன்னும் சிந்திக்க வேண்டும். வேலிகளே பயிர்களை மேய்வதைப் புரிந்து கொள்ளுங்கள். துரோகிகள் யார்? வகுப்புவாத பயங்கரவாதிகள் யார்? மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நடுநிலையான விசாரணைக்கு டெல்லிக்கு வெளியில் இருந்து காவல்துறை உதவியை நாட வேண்டும். சௌகிதர் எதுவும் பேசவில்லை!
- Claimed By : பேஸ்புக் பயனர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.