X
X

உண்மைச் சரிபார்ப்பு: திமுக மற்றும் அதிமுக கட்சிகள் குறித்த இந்த ஆய்வு முடிவு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பழையது.

இந்த வைரல் இடுகை தவறானது. 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் புகைப்படங்கள் மற்றும் புள்ளிவிவரங்களே தற்போது வைரலாகி வருகின்றன. புதியதலைமுறை இந்த ஆண்டு இதுவரை எந்த கணக்கெடுப்பையும் நடத்தவில்லை.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பற்றி தமிழ் மொழி செய்தி சேனலான புதிய தலைமுறை வெளியிட்ட கணக்கெடுப்பின் புகைப்படங்களுடன், பேஸ்புக்கில் ஒரு வைரல் இடுகை இரு கட்சிகளின் ஆட்சி செயல்பாடுகளை ஒப்பிட்டு காட்டுகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. இந்த வைரல் இடுகை பழையது என்றும், புதிய தலைமுறை இந்த ஆண்டு எந்த ஆய்வையும் நடத்தவில்லை என்றும் புதிய தலைமுறையின் இணைய குழுத் தலைவர் நமக்குத் தெளிவுபடுத்தினார்.

கூற்று

பேஸ்புக் பயனரான Dr.D.மோசஸ் ஜோஷ்வா என்பவர், புதிய தலைமுறை கருத்துக்கணிப்பின் சில புகைப்படங்களை பகிர்ந்து,

“புதிய தலைமுறையில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள்:

தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கிய அரசு எது?

அதிமுக – 34.48%,
திமுக – 33.33%
பதில் – அதிமுக.

ஏழைக்களின் நலனுக்காக செயல்பட்ட அரசு எது?

அதிமுக – 35.04%
திமுக – 30.96%
பதில் – அதிமுக.

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதில் சிறந்த அரசு எது?

அதிமுக – 36.65%
திமுக – 29.63%
பதில் – அதிமுக.

பொதுவிநியோகத் திட்டத்தை சிறப்பாகச்
செயல்படுத்திய அரசு எது?

அதிமுக – 37.06%
திமுக – 31.52%
பதில் – அதிமுக.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு எது?

அதிமுக – 31.83%
திமுக – 27.66%
பதில் – அதிமுக.

எல்லாத்தையும் இரட்டை இலை,
எங்கேயும் இரட்டை இலை,
எப்போதுமே இரட்டை இலை!!!

நாம எல்லோரும் வாக்கு செலுத்த வேண்டிய சின்னம் #இரட்டைஇலை🌱”
என்று எழுதியுள்ளார்

இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

இது குறித்து விசாரிக்க, நாங்கள் புதிய தலைமுறையின் கருத்துக் கணிப்புக்காக இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், சமீபத்திய பதிவேற்றங்கள் எதையும் எங்களால் பார்க்க முடியவில்லை என்றாலும், அவர்களின் யூடியூப் சேனலில் 15 பிப்ரவரி 2016 அன்று வெளியிடப்பட்ட காணொலி ஒன்றைக் கண்டோம்.
https://youtu.be/UsDcPT8maW0

நம் வைரல் இடுகையில் உள்ள ஸ்னாப்ஷாட்கள் காணொலியுடன் ஒன்றி இருப்பதை நம்மால் தெளிவாகக் கவனிக்க முடிகிறது, இதன் மூலம் இந்தக் கணக்கெடுப்பு மிக பழையது என்பதை நம்மால் உறுதிப்படுத்த முடிகிறது.

இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் புதிய தலைமுறையின் இணைய குழு தலைவர் மனோஜ் பிரபாகரை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “நாங்கள் இந்த ஆண்டு எந்த ஆய்வையும் நடத்தவில்லை. இந்தப் படங்கள் 2016 கணக்கெடுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை”என்று கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் டைனிக் ஜாக்ரானில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது.

இந்த வைரல் பதிவைப் பகிர்ந்து கொண்ட நபரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு பேஸ்புக்கில் 11,885 பின்தொடர்பவர்கள் இருப்பதும், அவர் ஒரு அரசியல்வாதி என்பதும் நமக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் இடுகை தவறானது. 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் புகைப்படங்கள் மற்றும் புள்ளிவிவரங்களே தற்போது வைரலாகி வருகின்றன. புதியதலைமுறை இந்த ஆண்டு இதுவரை எந்த கணக்கெடுப்பையும் நடத்தவில்லை.

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later