X
X

உண்மை சரிபார்ப்பு: செங்கோட்டையில் தேசியக் கொடியை அகற்றி காலிஸ்தான் கொடி ஏற்றப்படவில்லை

இந்த வைரல் பதிவு தவறானது. கம்பத்திலிருந்து இந்திய தேசியக் கொடி கீழிறக்கப்பட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்படவில்லை. செங்கோட்டையின் கோபுரங்களில் உள்ள மஞ்சள் கொடி சீக்கியர்களின் மத அடையாளமான நிஷன் சாஹிப்.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). இந்தியா தனது 72 வது குடியரசு தினத்தை ஜனவரி 26 அன்று கொண்டாடிய நிலையில், விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்கள் குறித்த பல காணொலிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றுள் ஒன்றாக குடியரசு தினத்தில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை கீழிறக்கி கலிஸ்தானின் கொடி ஏற்றப்பட்டதாக ஒரு வைரல் பதிவு கூறுகிறது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த இடுகை தவறானது என்பது தெரியவந்தது. செங்கோட்டையின் கோபுரங்களில் இந்திய தேசிய கொடியை கீழிறக்கி காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது என்று கூறும் இடுகை தவறானது. செங்கோட்டையில் உயரமான ஒரு கம்பத்தில் ஏற்றப்பட்ட கொடி, சீக்கியர்களின் மத அடையாளமாகா அனைத்து குருத்வாராக்களிலும் பயன்படுத்தப்படும் நிஷன் சாஹிப்.

கூற்று

சங்கரகுமாரையன் பரமன்குறிச்சி என்ற பயனர் இந்த காணொலியை பகிர்ந்து, அதில் “டெல்லி #செங்கோட்டையில் #இந்திய #கொடியை இறக்கி விட்டு #காலிஸ்தான் கொடியை ஏற்றிய #சீக்கியர்கள். இந்த நொடியில் இருந்து #அரபு அடிமைகள் முதல் எதிரி என்றால் இவர்கள் இரண்டாவது எதிரிகள். இதுதான் #விவசாயிகள் போராட்டமாம். இனியும் அரசு பொறுத்து கொண்டிருப்பது நல்லதற்கல்ல…,” என்று எழுதியுள்ளார்.

ட்விட்டர் பயனரான ‘சுமித் கடெல்’ ஒரு ட்வீட்டை (காப்பக இணைப்பு) பகிர்ந்து, “காலிஸ்தானின் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது .. இந்தியாவுக்கு கறுப்பு நாள் …” என்று எழுதியுள்ளார்.

பல பயனர்களு இந்த காணொலி காட்சிகளை சமூக ஊடகங்களில் இதே போன்ற கூற்றுக்களுடன் பகிர்ந்துள்ளனர்.

விசாரணை

இந்த வைரல் இடுகை 26 ஜனவரி அன்று ANI செய்தி நிறுவனம் வெளியிட்ட இடுகையின் ரீ-ட்வீட் ஆகும். ANI இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட இதன் அசல் காணொலியை நம்மால் காண முடிந்தது.

இந்தக காணொலியில் ஒரு நிமிடம் மூன்று வினாடியின்போது நாங்கள் கவனித்ததில், ஒரு நபர் ஒரு மஞ்சள் கொடியை செங்கோட்டையின் கம்பத்தில் ஏற்றுவதைக் கண்டோம். அதே நேரத்தில், மற்றொரு கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியையும் நம்மால் காண முடிந்தது. இதன்மூலம் இந்த வைரல் இடுகைகளில் கூறப்பட்டபடி, தேசியக் கொடி கீழிறக்கப்பட்டு, காலிஸ்தான் கொடி ஏற்றப்படவில்லை என்பதை நாம் தெளிவாக அடையாளம் காண முடிந்தது.

நாங்கள் இந்த மஞ்சள் கொடியை ஆராய்ந்ததில், இது காலிஸ்தான் கொடி அல்ல என்பதை அடையாளம் கண்டோம். இது அனைத்து குருத்வாராக்களிலும் பயன்படுத்தப்படும் சீக்கியர்களின் மதக் கொடி.

அமிர்தசரஸில் உள்ள தங்கப்பொற்கோயில் வளாகத்தில் காவி நிறத்தில் இந்தக் கொடியின் பல படங்களை நம்மால் காண முடிகிறது.

இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் டைனிக் ஜாக்ரானின் அமிர்தசரஸ் பொறுப்பாளரும், மூத்த நிருபருமான அமிர்த்பால் சிங்கைத் தொடர்பு கொண்டு பேசினோம். இது பற்றி நம்மிடத்தில் பேசிய அவர், “செங்கோட்டையில் காணப்பட்ட கொடி நிஷான் சாஹிப், இது காலிஸ்தான் கொடி அல்ல. காலிஸ்தானியர்கள் இந்த அடையாளத்தை தங்கள் கொடியில் ‘காலிஸ்தான்’ என்ற வார்த்தையோடு பயன்படுத்துகின்றனர். நிஷான் சாஹிப் பொதுவாக காவி நிறத்தில் இருக்கும், ஆனால் அது வெவ்வேறு வண்ணங்களிலும் தயாரிக்கப்படுகிறது. நிஹாங் சீக்கியர்கள் வழக்கமாக இதை நீல நிறத்தில் செய்கிறார்கள், அதே நேரத்தில் மஞ்சள் மற்றும் கறுப்பு துணி கூட பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது, ”என்று கூறினார்.

ஜனவரி 27 அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்தி கட்டுரையில், நிஷான் சாஹிப் ஒவ்வொரு குருத்வாராவின் மீதும் ஏற்றப்பட்டு இருப்பதாகக் கூறுகிறது, இது சீக்கியக் கொடி என்றும் அழைக்கப்படுகிறது.

வாஷிங்டன் DCயில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தும் புகைப்படங்களை 27 ஜனவரி அன்று ANI வெளியிட்ட ட்வீட்டில் கண்டோம். இந்தப் புகைப்படங்களில் உள்ளது காலிஸ்தான் கொடிதான் என்பதை, மத அடையாளத்தின் கீழ் கறுப்பு நிறத்தில் எழுதப்பட்ட ‘காலிஸ்தான்’ என்பதன் மூலம் அடையாளம் கண்டு கொண்டோம்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் ஒரு திரைப்பட வர்த்தக ஆய்வாளர் என்பதும், அவரது கணக்கிற்கு சுமார் ஒரு லட்சம் பின்தொடர்பவர்களைக் இருப்பது நமக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. கம்பத்திலிருந்து இந்திய தேசியக் கொடி கீழிறக்கப்பட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்படவில்லை. செங்கோட்டையின் கோபுரங்களில் உள்ள மஞ்சள் கொடி சீக்கியர்களின் மத அடையாளமான நிஷன் சாஹிப்.

  • Claim Review : டெல்லி #செங்கோட்டையில் #இந்திய #கொடியை இறக்கி விட்டு #காலிஸ்தான் கொடியை ஏற்றிய #சீக்கியர்கள். இந்த நொடியில் இருந்து #அரபு அடிமைகள் முதல் எதிரி என்றால் இவர்கள் இரண்டாவது எதிரிகள். இதுதான் #விவசாயிகள் போராட்டமாம். இனியும் அரசு பொறுத்து கொண்டிருப்பது நல்லதற்கல்ல
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later