உண்மை சரிபார்ப்பு: உ.பி அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தேவாலய பிரார்த்தனை காணிக்கைகளுக்கு 6% ஜிஎஸ்டி விதிக்கவில்லை
இந்த வைரல் பதிவு தவறானது. இந்த இடுகையுடன் பகிரப்படும் செய்தித்தாளின் புகைப்படம் திருத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களில் நடைபெறும் பிரார்த்தனைகளுக்கு காணிக்கையாக வழங்கப்படும் பணத்திற்கு 6% ஜிஎஸ்டியை உ.பி அரசாங்கம் விதிக்கவில்லை.
- By: Umam Noor
- Published: Jan 25, 2021 at 05:50 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). உ.பி.யில் ஆளும் பாஜக அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களில் நடைபெறும் பிரார்த்தனைகளுக்கு காணிக்கையாக வழங்கப்படும் பணத்திற்கு 6% ஜிஎஸ்டி பிடிப்பதாகக் கூறும் தலையங்கத்தைக் கொண்ட ஒரு ஆங்கில செய்தித்தாளின் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. உ.பி. அரசு இதுபோன்ற எந்தச் சட்டத்தையும் அமல்படுத்தவில்லை. 2010இல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளிவந்த ஒரு செய்தித்தாள் திருத்தப்பட்டு, தவறான கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது என்பதே உண்மை.
கூற்று
பேஸ்புக் பயனர் பாபு குட்டி ஜோசப் ஒரு செய்தித்தாளின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “உ.பி யில் உள்ள பாஜக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களில் நடைபெறும் பிரார்த்தனைகளில் காணிக்கையாக வழங்கப்படும் பணத்திற்கு 6% ஜிஎஸ்டி விதித்துள்ளது,” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
உ.பி.யில் அமல்படுத்தப்பட்ட புதிய சட்டங்கள் குறித்த செய்திகளை நாங்கள் இணையத்தில் தேடினோம், ஆனால் இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த உண்மையான அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. கூகுள் பின்னோக்கிய படத் தேடல் மூலம் இந்த வைரல் செய்தியின் புகைப்படத்தை இணையத்தில் தேடியதில், இதே பக்கத்தை டைம்ஸ் ஆப் இந்தியாவின் 11 ஜனவரி 2010 பதிப்பில் ‘கியோஸ்கோ.நெட்‘ இல் கண்டறிந்தோம்.
அசல் செய்தியின் கடைசி இரண்டு பத்திகளில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பற்றி கூறப்பட்டிருந்தது. இந்த வைரல் செய்தித்தாள் புகைப்படத்தை அசல் பதிப்போடு ஒப்பிட்டு பார்த்தபோது, இது திருத்தப்பட்டிருப்பதை நாம் அடையாளம் காண முடிந்தது. இந்த செய்தியை அதே தேதியன்று இந்துஸ்தான் டைம்ஸூம் அச்சிட்டு இருப்பதையும் நாங்கள் கண்டோம்.
டைம்ஸ் ஆப் இந்தியாவின் இணையதளத்தில் இருந்த அசல் பதிப்பிலும், இந்த வைரல் புகைப்படத்தில் கூறப்பட்டுள்ளபடி புதிய சட்டம் குறித்த எந்தக் கட்டுரையையும் எங்களால் காண முடியவில்லை.
Gst.gov.in இன் வலைத்தளத்தின்படி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 1 ஜூலை 2017 முதல் நடைமுறைக்கு வந்தது. ஜனவரி 2010இல் இக்கட்டுரை வெளியிடப்பட்ட நேரத்தில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடிந்தது.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்கு நாங்கள் உ.பி. பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதியை தொடர்பு கொண்டு பேசினோம். ஞாயிறுக்கிழமைகளில் தேவாலயங்களில் நடைபெறும் பிரார்த்தனைகளுக்கு காணிக்கையாக வழங்கப்படும் பணத்திற்கு 6% ஜிஎஸ்டியை உ.பி அரசாங்கம் விதிக்கவில்லை என்று கூறி, இந்த வைரல் கூற்றை அவர் மறுத்தார்.
இந்த தவறான இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் ஃபரிதாபாத்தைச் சேர்ந்தவர் என்பதும், 2014 மே மாதம் முதல் இக்கணக்கு செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்த இடுகையுடன் பகிரப்படும் செய்தித்தாளின் புகைப்படம் திருத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களில் நடைபெறும் பிரார்த்தனைகளுக்கு காணிக்கையாக வழங்கப்படும் பணத்திற்கு 6% ஜிஎஸ்டியை உ.பி அரசாங்கம் விதிக்கவில்லை.
- Claim Review : உ.பி யில் உள்ள பாஜக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களில் நடைபெறும் பிரார்த்தனைகளில் காணிக்கையாக வழங்கப்படும் பணத்திற்கு 6% ஜிஎஸ்டி விதித்துள்ளது
- Claimed By : பேஸ்புக் பயனர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.