X
X

உண்மை சரிபார்ப்பு: தோலில் கலை வடிவங்களைக் கொண்டுள்ள இந்த ஒட்டகத்தின் புகைப்படம் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதல்ல, வைரல் கூற்று தவறானது

இந்த வைரல் கூற்று தவறானது. இந்தப் புகைப்படம் இந்தியாவின் ராஜஸ்தானின் பிகானெர் மாவட்டத்தில் நடைபெறும் ஒட்டக திருவிழாவில் எடுக்கப்பட்டது என்பதே உண்மை.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). தன் தோலினில் கலை வடிவங்களை கொண்டிருக்கும் ஒரு ஒட்டகத்தின் புகைப்படம், இது ஒட்டக முடிதிருத்தும் கலை என்றும், இப்புகைப்படம் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தி விசாரணையில் தெரியவந்துள்ளது. சுற்றுலாத்துறையின் துணை இயக்குநர், இந்த புகைப்படங்கள் ராஜஸ்தானின் பிகானெரில் எடுக்கப்பட்டவை என்று கூறி, இந்த வைரல் கூற்றுக்களை மறுத்துள்ளார்.

கூற்று

தனது தோலினில் கலைவடிவங்களை கொண்டிருக்கும் ஒரு ஒட்டகத்தின் புகைப்படம், “ஒட்டக முடிதிருத்தும் கலை, பாகிஸ்தான்,” என்று கூறப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பல பயனர்களும் இந்த புகைப்படத்தை இதே போன்ற கூற்றுடன் பகிர்ந்துள்ளனர். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை

நாங்கள் அந்த வைரல் படத்தைக் கவனித்ததில், ஒட்டகத்தின் ரோமங்களில் ‘ஊன்ட் உட்சவ் பிகானெர்’ (ஒட்டக திருவிழா பிகானெர்) என்று இந்தியில் எழுதப்பட்டிருப்பதை அடையாளம் காண முடிந்தது.

“பிகானெர் ஒட்டக திருவிழா அல்லது கண்காட்சி ஒரு வர்த்தக விழாவாகும். முந்தைய காலங்களில், அரசின் வாழ்வாதாரம் முற்றிலும் ஒட்டகங்களை சார்ந்தே இருந்தது. பண்டைய காலங்களில், ஒட்டக இனப்பெருக்கம்ப செய்யும் பகுதியாக பிகனெர் மட்டுமே இருந்து வந்தது. எனவே, உள்ளூர்வாசிகள், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கால்நடைகளை இந்த இனப்பெருக்கம் செய்யும் பகுதிக்கு கொண்டு வருகிறார்கள். இந்த விழாவின் பெயரில் கூறப்பட்டுள்ளதுபோல இந்த நிகழ்வு கடுமையான பாலைவன சூழ்நிலைகளில் உயிர்வாழும் கடினமான விலங்குகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ராஜஸ்தான் அரசாங்கத்தின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை முயற்சியினால் இந்த விழாவைக் கொண்டாடப்பட்டு வருகிறது,” என்று ஜனவரியில் வெளியிடப்பட்ட ஜாக்ரான் ஜோஷின் ஒரு கட்டுரை கூறுகிறது.

யூடியூப் சேனல் ஒன்றில் ‘ஒட்டக முடி வெட்டுதல் கலை, ஒட்டக விழா, பிகானெர், இந்தியா, ஜனவரி 2014’ என்ற தலைப்பில் காணொலி ஒன்றையும் எங்களால் காண முடிந்தது. அந்த காணொலியின் விளக்கம் ஒட்டக பந்தயங்கள், ஒட்டக நடனங்கள், ஒட்டக முடி வெட்டும் கலை மற்றும் ஒட்டக சவாரிகள் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து நமக்குத் தெரிவிக்கின்றது.

இதன் உண்மை சரிபார்ப்புக்காக ராஜஸ்தான் சுற்றுலாத்துறையின் துணை இயக்குநரும், கோர் நோடல் அதிகாரியுமான தலீப் சிங்கை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். “இந்த வைரல் கூற்று தவறானது. இந்த புகைப்படம் பிகானெரின் ஒட்டக விழாவில் எடுக்கப்பட்டது,” என்று கூறினார்.

2021 ஆம் ஆண்டிற்கான பிகானெர் ஒட்டக விழா ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா அமைச்சகத்தின் கூட்டாளரான ராஜஸ்தான் டூர்ஸ் ஆபரேட்டர் இந்தியாவின் வலைத்தளத்தில், “ஒட்டக விழா ஜுனாகர் கோட்டையில் இருந்து ஒட்டகங்களின் வண்ணமயமான ஊர்வலத்துடன் தொடங்கி, பின்பு மணல் பரப்பு கொண்ட திறந்த வெளி மைதானத்திற்கு செல்கிறது. அதைத் தொடர்ந்து சிறந்த இனத்திற்கான போட்டி, கயிறிழுத்தல் போட்டி, ஒட்டக நடனம் மற்றும் அக்ரோபாட்டிக்ஸ் போன்றவை நடைபெறும்,” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்துகொண்ட பேஸ்புக் பயனரான குய்லூம் கிரிஸின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் பிரான்சை சேர்ந்தவர் என்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 1,415 பின்தொடர்பவர்கள் இருப்பதும் நமக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. இந்தப் புகைப்படம் இந்தியாவின் ராஜஸ்தானின் பிகானெர் மாவட்டத்தில் நடைபெறும் ஒட்டக திருவிழாவில் எடுக்கப்பட்டது என்பதே உண்மை.

  • Claim Review : தனது தோலினில் கலைவடிவங்களை கொண்டிருக்கும் ஒரு ஒட்டகத்தின் புகைப்படம், “ஒட்டக முடிதிருத்தும் கலை, பாகிஸ்தான்,” என்று கூறப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
  • Claimed By : பேஸ்புக் பயனர்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later