உண்மை சரிபார்ப்பு: ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவின் புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது
இந்த புகைப்படம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவமனையின் துவக்கவிழாவின்போது எடுக்கப்பட்டது என்பதே உண்மை. அது தற்போது நடைபெற்று விவசாயிகளின் போராட்டத்தோடு தவறாக தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது.
- By: Ashish Maharishi
- Published: Dec 16, 2020 at 10:35 PM
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில், மருத்துவமனை ஒன்றில் முகேஷ் அம்பானியுடன் பிரதமர் நரேந்திர மோடி இருப்பதை நம்மால் காண முடிகிறது. இந்த புகைப்படம், தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்துடன் தொடர்புடைய ஒரு தவறான கூற்றோடு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் விவசாயிகளை சந்திக்க வரவில்லை, ஆனால் முகேஷ் அம்பானியின் பேரனை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றார் என்று அந்த கூற்று குறிப்பிடுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த வைரல் இடுகையில் உள்ள புகைப்படம், 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அச்சமயத்தில், பிரதமர் மோடி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஒரு மருத்துவமனையைத் திறந்துவைக்க சென்றபோது, அங்கே முகேஷ் அம்பானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமே இதுவாகும்.
கூற்று
பேஸ்புக் பயனரான வெங்கட் ராமானுஜம், “கொட்டும் கொடூர பனியில் 17வது நாளாக போராடும் 32 லட்ச விவசாயிகளை பார்த்து ஆறுதாலாக டீல் பேசுவேன்னு நினைச்சியாடா.. நான் #evmfraud மோடிடா .. அடிச்சி பிடிச்சி மாஸ்க் கூட போடாம social distance கூட பார்க்காம யெஸ் #அம்பானி பேரனை தான்டா ..அப்படி தான் விழுந்தடிச்சி போய் பார்ப்பேன் டா ..காரணம் இது எங்க குஜ்ஜு வாரிசு டா,” என்று எழுதியுள்ளார்.
மற்றொரு பேஸ்புக் பயனரான RKS நியூஸ் என்பவர், டிசம்பர் 12 அன்று ஒரு புகைப்படத்தை பதிவேற்றி, “குளிரில் அமர்ந்திருக்கும் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை. ஆனால், பேரன் பிறந்ததற்கு அம்பானிக்கு வாழ்த்து தெரிவிக்க அவர் மருத்துவமனைக்கு செல்கிறார்,” என்று எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, முகேஷ் அம்பானி, நிதா அம்பானி ஆகியோரை இந்த புகைப்படத்தில் நம்மால் காண முடிகிறது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
நாங்கள் இந்த வைரல் புகைப்படத்தை கூகுள் தலைகீழ் படக் கருவியில் பதிவேற்றி தேடியதில், ஒரிஜினல் பிக்சர் இந்தியா இன்ஃபோ லைன் என்ற இணையதளத்தில் இந்த புகைப்படத்தை நம்மால் காண முடிந்தது. அதில் அக்டோபர் 27, 2014 அன்று பதிவேற்றப்பட்ட செய்திகளில் இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இந்த செய்தி அறிக்கையில், ஸ்ரீ HN ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மும்பைக்கு வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரிக்க, ரிலையன்ஸ் குழுமத்தில் பணியாற்றும் செய்தித் தொடர்பாளரை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், இந்த புகைப்படம் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மருத்துவமனை ஒன்று திறந்து வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்டதாக கூறினார்.
இந்த தவறான இடுகையைப் பதிவேற்றிய பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், RKS நியூஸ் என்ற இந்த பேஸ்புக் பக்கத்தை 33,000 க்கும் மேற்பட்டோர் பின்பற்றுவதை நாங்கள் கண்டறிந்தோம்.
निष्कर्ष: இந்த புகைப்படம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவமனையின் துவக்கவிழாவின்போது எடுக்கப்பட்டது என்பதே உண்மை. அது தற்போது நடைபெற்று விவசாயிகளின் போராட்டத்தோடு தவறாக தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது.
- Claim Review : கொட்டும் கொடூர பனியில் 17வது நாளாக போராடும் 32 லட்ச விவசாயிகளை பார்த்து ஆறுதாலாக டீல் பேசுவேன்னு நினைச்சியாடா.. நான் #evmfraud மோடிடா .. அடிச்சி பிடிச்சி மாஸ்க் கூட போடாம social distance கூட பார்க்காம யெஸ் #அம்பானி பேரனை தான்டா ..அப்படி தான் விழுந்தடிச்சி போய் பார்ப்பேன் டா ..காரணம் இது எங்க குஜ்ஜு வாரிசு டா
- Claimed By : பேஸ்புக் பயனர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.