உண்மை சரிபார்ப்பு: ஜியோ ₹401க்கு இலவச ரீசார்ஜ் வழங்கவில்லை, வைரல் கூற்று தவறானது
ஜியோ ₹ 401 க்கு இலவச ரீசார்ஜ் மற்றும் சிறப்பு சலுகையாக இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா வழங்குவதாகக் கூறும் வைரல் செய்தி தவறானது.
- By: ameesh rai
- Published: Oct 31, 2020 at 09:11 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜியோவின் இலவச ரீசார்ஜ் ₹ 401 மற்றும் டிஸ்னி-ஹாட்ஸ்டார் சந்தா சிறப்பு சலுகையினை பெறுவதற்கான இணைப்பு என்ற கூற்றுடன் ஒரு வைரல் பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தப் பதிவு வாட்ஸ்அப் சாட்பாட் (+91 95992 99372) மூலம் உண்மை சரிபார்ப்பிற்காக நம்மிடையே வந்தடைந்தது. இது குறித்த விசாரணையில் இந்த கூற்று தவறானது என்று தெரியவந்தது. மேலும் இதுபோன்ற ஏதேனும் சீரற்ற இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் தனிப்பட்ட தரவு திருட்டு மற்றும் நிதி இழப்பு ஏற்படக்கூடும் என்றும் சைபர் நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூற்று
சிறப்பு தீபாவளி சலுகையாக இலவச டிஸ்னி-ஹாட்ஸ்டார் சந்தாவுடன் ஜியோ டிஜிட்டல் லைஃப் ₹ 401 க்கு இலவச ரீசார்ஜ் வழங்குகிறது என்ற கூற்றுடன் அம்பானியின் புகைப்டத்துடன் கூடிய ஒரு வைரல் இடுகை சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தச் சலுகை 31 அக்டோபர் 2020 வரை மட்டுமே கிடைக்கும் என்றும் இந்தப் பதிவு தெரிவிக்கிறது. இந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
விசாரணை
இந்த கூற்று குறித்து விசாரிக்க வைரல் பதிவில் இருந்த இணைப்பைக் கிளிக் செய்தோம். அவ்வாறு கிளிக் செய்ததில், அது ஜியோவின் பெயரில் இயங்கும் ஒரு வலைத்தளத்திற்கு சென்றடைந்தது. இலவச ரீசார்ஜ் மற்றும் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குவதற்கும், ஒரு நாளுக்கு 3 ஜிபி டேட்டாவினை வழங்கிடவும், பயனரின் பெயர் மற்றும் அவரின் ஜியோ எண் குறித்த தகவல்களை இந்த வலைதளம் சேகரிக்கிறது. மேலும் இந்த சிறப்பு சலுகையைப் பெறுவதற்கு, வாட்ஸ்அப்பில் குறைந்தது 10 பேருடன் இந்த பதிவினை பகிருமாறும் பயனரிடம் இந்த வலைதளம் கோரிக்கை வைக்கிறது. இதன் மூலம் இந்த இணைப்பு தவறானது என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.
இந்த இணைப்பு பயனரின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை நாங்கள் கவனித்தோம், இது மோசமான சந்தர்ப்பங்களில் நிதி இழப்புக்கு கூட வழிவகுக்கலாம் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம்.
இந்த கூற்றினை சரிபார்க்க ஜியோவின் செய்தித் தொடர்பாளரை நாங்கள் தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “ஜியோ கேர் இதுபோன்ற மோசடியாளர்களின் செய்திகளையும் அழைப்புகளையும் தவிர்க்குமாறு பயனர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஜியோ.காம் வழியாக புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள முடியும், ” என்று கூறினார்.
निष्कर्ष: ஜியோ ₹ 401 க்கு இலவச ரீசார்ஜ் மற்றும் சிறப்பு சலுகையாக இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா வழங்குவதாகக் கூறும் வைரல் செய்தி தவறானது.
- Claim Review : சிறப்பு தீபாவளி சலுகையாக இலவச டிஸ்னி-ஹாட்ஸ்டார் சந்தாவுடன் ஜியோ டிஜிட்டல் லைஃப் ₹ 401 க்கு இலவச ரீசார்ஜ் வழங்குகிறது
- Claimed By : வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட செய்தி
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.