X
X

உண்மை சரிபார்ப்பு: பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக தலைவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறும் இந்தக் காணொளி தவறானது

பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக தலைவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதாகக் கூறும் காணொளி தவறானது. பீகார் முதல்வரின் கார் 2018 இல் பக்சர் சென்றபோது கற்களால் தாக்கப்பட்டது என்பதே உண்மையாகும்.

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி நடந்த பிரச்சாரத்தின்போது பாஜக தலைவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறி, வேகமாக வந்த கார்கள் மீது கற்கள் வீசப்படும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.

இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த வைரல் பதிவு தவறானது என்று தெரியவந்துள்ளது. மேலும் இக்காணொளி 2018 இல் பக்சரிலுள்ள நந்தரில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கார் தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளியே என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

கூற்று

பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக தலைவர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற கூற்றுடன், வேகமாக வரும் கார்கள் மீது கற்கள் வீசப்படும் காணொளி ஒன்று அக்டோபர் 22, 2020 அன்று பகிரப்பட்டுள்ளது. இந்த இடுகையை இங்கே காணலாம்.

தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித் ஷாவின் கார் தாக்கப்பட்டது என்ற கூற்றுடனும் இதே காணொளி பகிரப்பட்டு வருகிறது.

https://twitter.com/DMK4TN/status/1274984861250359297

ட்விட்டர் பயனர் ஒருவரும் அக்டோபர் 19, 2020 அன்று இதே காணொளியை பகிர்ந்து, “நிதீஷ் குமார் ஜி, நீங்கள் ஏன் நல்ல காரியங்களை செய்துவிட்டு, பொதுமக்களிடமிருந்து ஓடி ஒளிகிறீர்கள்..?” என்று இந்தியில் எழுதியுள்ளார்.

https://twitter.com/_AAhmed004/status/1318193852457496576

விசாரணை

வைரல் காணொளியைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் கோவை செல்வியின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்பதும், ஜூன் 2012 முதல் அவர் பேஸ்புக்கில் செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரிக்க இந்த வைரல் காணொளியை முதலில் இன்விட் கருவியில் பதிவேற்றினோம். இதன் மூலம் பல ஸ்கிரீன்ஷாட்கள் பிரித்தெடுத்து, கூகுள் தலைகீழ் படக் கருவி மூலம் அவற்றைத் தேடத் தொடங்கினோம். அவ்வாறு தேடியதில், பேஸ்புக்கில் நியூஸ் 18 இல் உண்மையான காணொளியைக் கண்டோம். முதல்வர் நிதீஷ்குமாரின் ஆய்வு பயணத்தின் போது, ​​அவரது காவல்துறையினர் தாக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது. அந்த காணொளி 13 ஜனவரி 2018 அன்று பதிவேற்றப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பான செய்தி அறிக்கைகளை கூகுளில் தேடினோம். அவ்வாறு தேடியதில் என்டிடிவியின் இணையதளத்தில் ஒரு செய்தியைக் கண்டோம். இந்த செய்தி 12 ஜனவரி 2018 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியின் படி, முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ‘முன்னேற்ற ஆய்வு யாத்திரை’ நிகழ்ச்சியின் போது, ​​அவரது பாதுகாப்பு படையினர் மீது பக்சரிலுள்ள நந்தரில் கல்லெறியப்பட்டது. இதில் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர். முழு செய்தியையும் இங்கே படிக்கலாம்.

இது குறித்து பீகார் ஜனதா தளம் (U) தலைமை செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங்குடன் பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், இந்த காணொளியில் ஆற்றல் இல்லை என்று கூறினார். மேலும் “இவை அனைத்தும் முட்டாள்தனமான விஷயங்கள். இது ஒரு பழைய காணொளி . முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு எதிராக குழப்பத்தை பரப்புவதற்காகவே இது பகிரப்படுகிறது என்றபோதிலும் இது எதிரிகளுக்கு எந்த நன்மையும் அளிக்காது,” என்று அவர் கூறினார்.

வைரல் காணொளியைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் கோவை செல்வியின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்பதும், ஜூன் 2012 முதல் அவர் பேஸ்புக்கில் செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

निष्कर्ष: பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக தலைவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதாகக் கூறும் காணொளி தவறானது. பீகார் முதல்வரின் கார் 2018 இல் பக்சர் சென்றபோது கற்களால் தாக்கப்பட்டது என்பதே உண்மையாகும்.

  • Claim Review : பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக தலைவர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற கூற்றுடன், வேகமாக வரும் கார்கள் மீது கற்கள் வீசப்படும் காணொளி ஒன்று அக்டோபர் 22, 2020 அன்று பகிரப்பட்டுள்ளது.
  • Claimed By : பேஸ்புக் பயனர் கோவை செல்வி
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later