X
X

உண்மை சரிபார்ப்பு: வீட்டிலேயே கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்தலாம் எனும் கூற்றை நிபுணர்கள் மறுத்துள்ளனர்

  • By: ameesh rai
  • Published: Oct 23, 2020 at 08:09 PM

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). கொரோனா வைரஸ் ஒரு பெரிய நோய் அல்ல, அது ஒரு வைரஸ் தொற்று மட்டுமே என்றும், வீட்டு வைத்தியம் மூலமாகவே இதனைக் குணப்படுத்திவிட முடியும் என்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு பதிவு கூறுகிறது.

விஸ்வாஸ் வாட்ஸ்அப் சாட்பாட் (+91 95992 99372) மூலமாக இந்த கூற்று உண்மை சரிபார்ப்புக்காக நம்மை வந்தடைந்தது. இந்த வைரல் கூற்றில், கொரோனா வைரஸ் நோய்தொற்றினை குறைப்பதற்காக சில பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கசாயத்தினை உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, இந்தக் கூற்று முற்றிலும் தவறானது. உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை தொற்றுநோயாக அறிவித்துள்ளது மட்டுமன்றி, மருத்துவரின் ஆலோசனையின்றி குணப்படுத்த முயற்சிப்பதோ, வீட்டிலேயே குணப்படுத்த முயற்சிப்பதோ ஆபத்தை தரக்கூடும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கூற்று

எங்களது வாட்ஸ்அப் சாட்பாட் மூலமாக ஒரு ட்வீட்டின் இணைப்பு எங்களை வந்தடைந்தது. அந்த ட்வீட்டினை மொழிபெயர்த்ததில், “பயப்பட வேண்டாம்! கொரோனா ஒரு பெரிய நோய் அல்ல. இது வீட்டு வைத்தியத்தின் மூலமாகவே குணப்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் தொற்று மட்டுமே. மஞ்சள், இஞ்சி, கிராம்பு, கறுப்பு மிளகு, இலவங்கப்பட்டை போன்றவற்றால் செய்யப்பட்ட கசாயத்தை குடிப்பதால் தொண்டை சூடாக இருக்கும். இதனால் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்..ஜெய் பீம்!” என்று அதில் கூறப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த ட்வீட்டினை இங்கே காணலாம்.

விசாரணை

இந்த ட்வீட்டின் கூற்றுக்களை உலக சுகாதார அமைப்பின் (WHO) இணையதளத்தில் தேடுவதன் மூலம் எங்கள் விசாரணையை துவங்கினோம். சில மேற்கத்திய முறைகள், சில வழக்கத்திலுள்ள முறைகள் மற்றும் வீட்டு வைத்திய முறைகளின் மூலம் Covid-19 இன் லேசான அறிகுறிகளை குணப்படுத்த முடியும் என்றாலும், நோயைக் குணப்படுத்த இதுவரை எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை WHOவின் அதிகாரப்பூர்வ தளம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

வைரல் ட்வீட்டில், சில மசாலா பொருட்களால் செய்யப்பட்ட கசாயத்தை உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆயுஷ் அமைச்சின் இணையதளத்தில் தேடியதில், கொரோனா வைரஸ் தொடர்பாக ஆயுர்வேத பயிற்சியாளர்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது. மேலும் அதில் கொரோனாவைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் எந்தவொரு மருந்தும், சிகிச்சையும், நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டவில்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க நோயெதிர்ப்பு திறனை வலுப்படுத்துவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் தொற்றுச் சங்கிலியை உடைப்பது, நோய்த்தொற்றை முன்கூட்டியே அடையாளம் கண்டு, சரியான நேரத்தில் சுகாதார வசதிகளை வழங்குவது ஆகியவை அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக லக்னோவின் ராம் சாகர் மிஸ்ரா மருத்துவமனையின் மருத்துவர் சுமித்தை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். அவர், கொரோனா வைரஸ் என்பது உலகம் முழுவதையும் பாதித்த ஒரு தொற்றுநோய் என்று கூறினார். மேலும் “கொரோனா வைரஸை எளிதாக எடுத்துக்கொள்வது தவறு. கொரோனா வைரஸிற்கான சிகிச்சையோ, மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் கண்டறியப்பட்ட பிறகு சரியான மருத்துவ பராமரிப்பு தேவை. இதனை குணப்படுத்த வீட்டு வைத்தியத்தை முயற்சிப்பது ஆபத்தானது. இந்த வைரல் கூற்று போன்ற சமூக ஊடக இடுகைகள் புறக்கணிக்கப்பட்டு, இவை குறித்து புகாரளிக்கப்பட வேண்டும்,” என்று கூறினார்.

இந்த கூற்றினை ட்வீட் செய்த பயனரின் சுயவிவரத்தை ஆராய்ந்ததில், அவரின் கணக்கு ஆகஸ்ட் 2020 இல் உருவாக்கப்பட்டது என்பதையும், அக்கணக்கினை 793 நபர்கள் பின்தொடர்வதையும் நாங்கள் கண்டறிந்தோம்.

முடிவு

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டு வைத்தியம் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை குணப்படுத்த முயற்சிப்பது ஆபத்தானது. கொரோனா வைரஸிற்கான சிகிச்சையோ, மருந்தோ, தடுப்பூசியோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பொறுப்புத்துறப்பு

CoronavirusFacts எனும் தரவுத்தளம் COVID-19 பரவலின் தொடக்கத்திலிருந்து வெளிவரும் தகவல்களின் உண்மை-சரிபார்ப்புகளை பதிவு செய்து வருகிறது. கொரோனா தொற்றுநோயும் அதன் விளைவுகளும் தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே வருவதோடு மட்டுமல்லாது, சில வாரங்கள் அல்லது சில நாட்களுக்கு முன்பு துல்லியமாக இருந்த தரவுகளே கூட மாறிபோகக்கூடிய சூழ்நிலையும் தற்போது உள்ளது. அதனால் ஓர் செய்தியை நீங்கள் பகிர்வதற்கு முன்பு, அச்செய்தி எந்த நாளில் உண்மை சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்கு பின்னரே பகிரவும்.

  • Claim Review : பயப்பட வேண்டாம்! கொரோனா ஒரு பெரிய நோய் அல்ல. இது வீட்டு வைத்தியத்தின் மூலமாகவே குணப்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் தொற்று மட்டுமே. மஞ்சள், இஞ்சி, கிராம்பு, கறுப்பு மிளகு, இலவங்கப்பட்டை போன்றவற்றால் செய்யப்பட்ட கசாயத்தை குடிப்பதால் தொண்டை சூடாக இருக்கும். இதனால் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்..ஜெய் பீம்
  • Claimed By : ட்விட்டர் பயனர் டேனியல் A.கவாய்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later