உண்மை சரிபார்ப்பு: இந்தப் புகைப்படம் தேஜ் பிரதாப் யாதவின் பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்டதல்ல
இந்த வைரல் பதிவு தவறானது. தேஜ் பிரதாப் யாதவ் IGIM இல் நடந்த பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்குகிறார். 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில சுகாதார அமைச்சராக அவர் கலந்து கொண்டுள்ளார்.
- By: Abhishek Parashar
- Published: Oct 22, 2020 at 10:30 PM
- Updated: Feb 8, 2023 at 09:29 PM
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). இராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகன், தேஜ் பிரதாப் யாதவ் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த தேஜ், தக்ஷ்சிலா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதாக அந்த இடுகை குற்றம் சாட்டுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தி விசாரணையில், இந்த கூற்று தவறானது என்பதும், இந்த புகைப்படம் 2017 முதல் வைரலாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின்(IGIM) பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை, மாநில சுகாதார அமைச்சரான தேஜ் பிரதாப் யாதவ் வழங்கும் புகைப்படமே தவறான கூற்றுடன் வைரலாகியுள்ளது.
கூற்று
பேஸ்புக் பயனர் பிஸ்வாஜித் தத் இந்த வைரல் புகைப்படத்தை (இணைப்பு) பகிர்ந்து, “இதற்கு நான் வெட்கப்படுகிறேன் … லாலு யாதவின் மகன் திரு தேஜ் பிரதாப் யாதவ் (பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்) பீகாரின் தக்ஷ்சிலா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். டாக்டர் தேஜ் பிரதாப் யாதவுக்கு வாழ்த்துக்கள். இது இந்தியாவில் மட்டுமே நிகழும். ஜெய் ஹோ…” என்று எழுதியுள்ளார்.
விசாரணை
தேஜ் பிரதாப் யாதவின் இந்த புகைப்படம் 2017 முதல் இதே போன்ற கூற்றுகளுடன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
படத்தின் உண்மையான மூலத்தைக் கண்டுபிடிக்க, கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி தேடியதில், தேஜ் பிரதாப் யாதவின் ட்விட்டர் கணக்கில் 11 பிப்ரவரி 2017 அன்று வெளியிடப்பட்ட ட்வீட்டில் இந்தப் புகைப்படத்தைக் கண்டோம். IGIMயின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார் என்பதையும், பட்டதாரிகளுக்கு சான்றிதழ்களையும், தங்க பதக்கங்களையும் அவர் வழங்கினார் என்பதையும் அந்த ட்வீட் நமக்கு உறுதிப்படுத்தியது.
இது குறித்த செய்தி அறிக்கைகளைத் தேடியதில், டைம்ஸ் ஆப் இந்தியா 12 பிப்ரவரி 2017 அன்று வெளியிட்ட கட்டுரையை நாங்கள் கண்டோம். அதில், “இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ், 78 எம்பிபிஎஸ் மாணவர்கள், 20 முதுகலை மாணவர்கள், மூன்று சூப்பர்-ஸ்பெஷாலிட்டி பாடநெறி மாணவர்கள் மற்றும் 20 துணை மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்,” என்று குறிப்படப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம் இந்த வைரல் புகைப்படம் தேஜ் பிரதாப் யாதவின் பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்டது அல்ல என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது. இது பாட்னா வளாகத்தில் உள்ள IGIM யில் அவர் கலந்து கொண்ட ஒரு பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படமே தவிர, தக்ஷ்சிலா பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்டது அல்ல.
மேலும் 2017 ஆம் ஆண்டில் IGIM யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் காணொளியையும் நாங்கள் கண்டறிந்தோம். அதில் தேஜ் பட்டதாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்குவதை நம்மால் காண முடிகிறது.
இந்த கூற்றினை சரிபார்க்க Jagran.com ன் பீகார் பொறுப்பாளர் அமித் ஆலோக்கை தொடர்பு கொண்டோம். இந்த புகைப்படங்கள் சுகாதார அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் கலந்து கொண்ட IGIM பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்டவை என்பதை அவர் நமக்கு உறுதிப்படுத்தினார்.
வைரல் புகைப்படத்தைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. தேஜ் பிரதாப் யாதவ் IGIM இல் நடந்த பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்குகிறார். 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில சுகாதார அமைச்சராக அவர் கலந்து கொண்டுள்ளார்.
- Claim Review : இதற்கு நான் வெட்கப்படுகிறேன் … லாலு யாதவின் மகன் திரு தேஜ் பிரதாப் யாதவ் (பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்) பீகாரின் தக்ஷ்சிலா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். டாக்டர் தேஜ் பிரதாப் யாதவுக்கு வாழ்த்துக்கள். இது இந்தியாவில் மட்டுமே நிகழும். ஜெய் ஹோ
- Claimed By : பேஸ்புக் பயனர் பிஸ்வாஜித் தத்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.