X
X

உண்மை சரிபார்ப்பு: பெங்களூரில் காங்கிரஸ் தலைவர்கள் உணவருந்தும் புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது

இந்த வைரல் கூற்று தவறானது. கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக உணவருந்திய புகைப்படமே தற்போது தவறான கூற்றுடன் வைரலாகியுள்ளது.

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). இந்தியா கேட் அருகே விவசாய மசோதாவை எதிர்த்து ஏழை விவசாயிகள் டிராக்டரை எரித்த பின்னர் வெள்ளி தட்டில் சாப்பிடுகிறார்கள் என்ற கூற்றுடன் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் விவசாயிகள் அல்ல என்பதும், அவர்கள் முன்னாள் முதல்வர் சித்தராமையா, செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கூற்று

பேஸ்புக் பயனர் விஜய் ஜீங்கர் செப்டம்பர் 30 அன்று ஒரு புகைப்படத்தை பதிவேற்றி, “விவசாய மசோதாவை எதிர்த்து டெல்லியில் இந்தியா கேட் அருகே ஒரு டிராக்டரை எரித்த பின்னர் ஏழை விவசாயிகள் வெள்ளி தட்டில் சாப்பிடுகிறார்கள்,” என்று எழுதியுள்ளார்.
இந்த வைரல் இடுகையை இங்கே காணலாம்.

விசாரணை

இந்தப் புகைப்படத்தின் மூலத்தை கண்டறிய கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் (Google Reverse Image Search Tool ) பயன்படுத்தி இணையத்தில் தேடியதில், இந்த புகைப்படத்தை பல வலைத்தளங்களிலும், சமூக ஊடக கணக்குகளிலும் எங்களால் காண முடிந்தது.

செப்டம்பர் 28 அன்று விஜய்கர்நாடக செய்தி வலைத்தளத்தால் வைரல் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர் ரஞ்சீப் சிங் சுர்ஜேவாலாவுக்கு வெள்ளி தட்டில் மதிய உணவை வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்த ரன்தீப் சுர்ஜேவாலா, சித்தராமையா மதிய உணவு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி செய்தி அறிக்கைகளைத் தேடினோம்.

செப்டம்பர் 28 அன்று BZ ஜமீர் அகமது கானால் வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில் இந்த புகைப்படத்தை எங்களால் காண முடிந்தது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவுடன் பெங்களூரில் உள்ள முன்னாள் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வீட்டில் கான் மதிய உணவு சாப்பிடுவதாக அந்த ட்வீட்டின் தலைப்பு எங்களுக்குத் தெளிவுபடுத்தியது.

https://twitter.com/BZZameerAhmed/status/1310524679917113345

இந்தக் கூற்றை சரிபார்க்க காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங்கை தொடர்பு கொண்டோம். “இந்தப் பதிவில் எந்த உண்மையும் இல்லை. இந்த வைரல் கூற்று தவறானது. இது அரசியல் எதிரிகளின் சதி,” என்றார் பிரதாப்.

இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்துள்ள பேஸ்புக் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக உணவருந்திய புகைப்படமே தற்போது தவறான கூற்றுடன் வைரலாகியுள்ளது.

  • Claim Review : இந்தியா கேட் அருகே விவசாய மசோதாவை எதிர்த்து ஏழை விவசாயிகள் டிராக்டரை எரித்த பின்னர் வெள்ளி தட்டில் சாப்பிடுகிறார்கள் என்ற கூற்றுடன் ஒரு படம்
  • Claimed By : பேஸ்புக் பயனர் விஜய் ஜீங்கர்
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later