உண்மை சரிபார்ப்பு: இது ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படம் அல்ல, வைரல் கூற்று தவறானது
வைரல் புகைப்படத்தில் உள்ள பெண் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அல்ல.
- By: Abhishek Parashar
- Published: Oct 1, 2020 at 09:43 PM
புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் என்று ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பதும், மற்றொரு பெண்ணின் புகைப்படம் ஹத்ராஸ் சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு தவறான கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது.
கூற்று
சமூக ஊடக பயனர் ‘ਰਜਿੰਦਰ ਸਿੰਘ ਰਾਜਨ’ (ராஜீந்தர் சிங் ராஜன்) என்பவர் இந்த வைரல் புகைப்படத்தைப் பகிர்ந்து (இணைப்பு), “இந்த மகள்(பெண்) ஹத்ராஸில் நாக்கு துண்டிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்…” என்று எழுதியுள்ளார்.
இதேபோன்ற கூற்றுக்களுடன் பலரும் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ட்விட்டர் பயனர் ‘கீத்’ இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து (இணைப்பு), “ இந்த அழகான, அப்பாவி பெண் எதிர்கொண்ட கொடுமைகளை (பாலியல் வன்கொடுமை, நாக்கு துண்டிப்பு, கழுத்து மற்றும் முதுகெலும்பு உடைப்பு) பற்றி எண்ணிப் பார்க்கும்போது என் இதயம் சுக்குநூறாய் உடைகிறது. இத்தகைய சித்திரவதையினை யாரும் அனுபவிக்க கூடாது. போதும் போதும்! பல விஷயங்கள் மாற வேண்டும்..இப்போதே!” என்று எழுதியுள்ளார்.
விசாரணை
பாலியல் குற்றங்களைப் புகாரளிப்பதற்கான வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளத்தை விஸ்வாஸ் நியூஸ் வெளியிடவில்லை. மேலும், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும்போதும் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை மதித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை தொடர்புகொள்வதற்கு பதிலாக, அவரது மற்ற குடும்ப உறுப்பினர்கள் பலரைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்தினோம்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையும், வைரலாகி வரும் பெண்ணின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்ததில் இரு புகைப்படங்களுக்கும் இடையில் பல வித்தியாசங்களை நம்மால் காண முடிந்தது. இதன் மூலம் இரண்டு புகைப்படங்களும் இரண்டு வெவ்வேறு பெண்களின் புகைப்படம் என்பதையும், அந்த வைரல் புகைப்படம் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் அல்ல என்பதையும் நம்மால் உறுதிப்படுத்த முடிந்தது.
ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் என்று பகிரப்படும் வைரல் புகைப்படத்தின் தனிப்பட்ட அடையாளத்தை விஸ்வாஸ் நியூஸ் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இது ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படம் அல்ல என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.
இந்தச் சம்பவம் குறித்து பதிவு செய்த டெய்னிக் ஜாக்ரானின் நிருபரும், ஹத்ராஸின் பொறுப்பாளருமான ஹிமான்ஷு குப்தாவிடம் இது குறித்து பேசுகையில், “அந்த வைரல் புகைப்படம் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படம் அல்ல,” என்று கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பல குடும்ப உறுப்பினர்களிடமும் இந்த வைரல் புகைப்படம் குறித்து உறுதிப்படுத்திக் கொண்டதாகவும், இந்தப் புகைப்படம் வேறொரு பெண்ணின் புகைப்படம் என்றும் அவர் எங்களிடம் கூறினார்.
ஹத்ராஸ் சம்பவத்தை தொடர்புப்படுத்தி ஒரு காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது செப்டம்பர் 14 ஆம் தேதி ஹத்ராஸ் மாவட்ட மருத்துவமனையில் இந்த காணொளி பதிவு செய்யப்பட்டது என்றும், அதில் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் செய்தவர்களின் பெயர்களை சொல்வதை நம்மால் கேட்க முடியும் என்றும் குப்தா கூறினார். மேலும் “சிறுமி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எஸ்சி-எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் நாக்கு துண்டிக்கப்பட்டது என்று ஒரு வைரல் இடுகை கூறுகிறது. இருப்பினும், இந்தக் கூற்றினை ஹத்ராஸ் காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
செப்டம்பர் 30, 2020 அன்று டைனிக் ஜாக்ரானில் வெளியிடப்பட்ட செய்தியில், ஹத்ராஸின் காவல் நிலையப் பகுதியான சந்த்பா கிராமத்தை சேர்ந்த பூல்காரியின் வழக்கை விசாரிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் மூன்று பேர் கொண்ட எஸ்ஐடி குழுவை அமைத்து, ஏழு நாட்களுக்குள் இந்த சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறான கூற்றுடன் வைரல் புகைப்படத்தைப் பகிர்ந்த பயனர், தனது சுயவிவரத்தில் தன்னை ஒரு விளம்பரதாரர் என்று குறிப்பட்டுள்ளார். மேலும் அவரின் சுயவிவரத்தினை ஆராய்ந்ததில், அந்த கணக்கு ஆகஸ்ட் 2014 முதல் செயலில் உள்ளது என்பது தெரியவந்தது.
निष्कर्ष: வைரல் புகைப்படத்தில் உள்ள பெண் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அல்ல.
- Claim Review : உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் என்று ஒரு பெண்ணின் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது
- Claimed By : பேஸ்புக் பயனர் ராஜீந்தர் சிங் ராஜன்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.