உண்மை சரிபார்ப்பு: தமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் என கூறும் வீடியோ தவறானது
முடிவுரை சாத்தான்குளம் சம்பவம் எனக் கூறும் வீடியோ தவறானது. இடுகையில் குறிப்பிடப்பட்ட வீடியோ 2019 ல் நிகழ்ந்த ஒரு பழைய சம்பவத்தினுடையதாகும்.
- By: Abbinaya Kuzhanthaivel
- Published: Jun 30, 2020 at 01:08 PM
- Updated: Jul 1, 2020 at 04:24 PM
சமூக ஊடகங்களில் ஒரு வைரல் வீடியோ P ஜெயராஜ் மற்றும் அவரது மகன் J பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீது காவல்துறை நண்பர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறுகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதி மீறல்களுக்காக கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் 22 ஜூன் 2020 அன்று இறந்தனர்.
விஸ்வாஸ் செய்தி முதலில் இதை ட்விட்டரில் பக்கத்தில் கண்டோம். 3,400 பார்வைகளைக் கொண்டிருந்தது. விசாரணையில, சாத்தான்குளம் சம்பவம் எனக் கூறும் வீடியோ தவறானது என்றும், இது 2019 ல் நிகழ்ந்த ஒரு பழைய சம்பவத்தின் வீடியோ என்றும் தெரியவந்துள்ளது.
கூற்று
சமூக ஊடகங்களில் ஒரு வைரல் வீடியோ, ஒரு நபர் உள்ளாடைகளில், அறை உச்சவரம்பில் கட்டப்பட்ட கயிற்றால் தொங்கவிடப்பட்டு, குச்சிகளால் தாக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. தாக்குபவர், மனிதனின் தனிப்பட்ட பகுதிகளில் தடியைச் செருகுவதையும் வீடியோ காட்டுகிறது. சாத்தான்குளம் சம்பவம் என வீடியோ கூறுகிறது. காப்பகப்படுத்தப்பட்ட வீடியோவை இங்கே அணுகலாம்.
விசாரணை
முக்கிய சொற்களைப் பயன்படுத்தி இணையத்தில் நாங்கள் தேடியபோது, அந்த வீடியோ சமீபத்திய சம்பவம் அல்ல என்றும், 2019 ஜூலை மாதம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த ஒரு சம்பவம் என்பதையும் கண்டரிந்தோம்.
Dainik Bhaskar செய்தி கட்டுரையின் படி, நாக்பூரிலுள்ள வாடி காவல் நிலையத்தின் வாதமனா பகுதியில், போக்குவரத்து தொழிலாளிகள் தங்கள் அலுவலகத்தில் ஒரு டிரக் டிரைவரை கொடூரமாக அடித்து கொலை முயற்சி செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் டிரைவரை உச்சவரம்புடன் கட்டி தலைகீழாக தொங்கவிட்டார். அவருடைய தனிப்பட்ட பகுதிகளிலும் அவர்கள் தடியைச் செருகினர் என்று கூறுகிறது.
Times of India செய்தி படி, வீடியோ வைரலாகி, நாக்பூரில் ஓட்டுநரை சித்திரவதை செய்ததற்தாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
வீடியோவின் நம்பகத்தன்மையைக் கண்டறிய நாங்கள் மேலும் தேடியபோது, Nagpur today செய்தி வலைத்தளத்திலும் இதைக் கண்டோம், அந்தக் கட்டுரை குறித்த சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
ஜூலை 2019 இல் வெளியிடப்பட்ட யூ டியூப்பில் வீடியோவை நாங்கள் கண்டோம்.
அனைத்து இடுகைகளும் ஒரே காலக்கெடுவுடன் (ஜூலை 2019), அந்த வீடியோ சாத்தான்குளத்தில் சமீபத்தில் நடந்த சம்பவம் அல்ல என்று முடிவு செய்யலாம்.
விஸ்வாஸ் நியூஸுடன் பேசிய வாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திர லிலதர் பதக், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளதை உறுதிசெய்து கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்றார். வீடியோவில் கூறப்படும் சம்பவம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்ததை அவர் உறுதிப்படுத்தினார்.
निष्कर्ष: முடிவுரை சாத்தான்குளம் சம்பவம் எனக் கூறும் வீடியோ தவறானது. இடுகையில் குறிப்பிடப்பட்ட வீடியோ 2019 ல் நிகழ்ந்த ஒரு பழைய சம்பவத்தினுடையதாகும்.
- Claim Review : சாத்தான்குளம் சம்பவம் பரபரப்பு வீடியோ
- Claimed By : Nanda Kumar Jothi
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.