உண்மை சரிபார்ப்பு: கர்ப்பிணி யானை பட்டாசு சாப்பிட்டதால் இறந்த சம்பவம் நடந்தது கேரளாவின் பாலக்காட்டில், மலப்புரத்தில் அல்ல
முடிவுரை: கர்ப்பிணி யானை பட்டாசு சாப்பிட்டு இறந்தது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில், மலப்புரம் அல்ல.
- By: Abbinaya Kuzhanthaivel
- Published: Jun 5, 2020 at 03:50 PM
புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). கேரளாவில் கர்ப்பிணி யானை பட்டாசுகளை உட்கொண்டு இறந்ததைப் பற்றி சமூக ஊடகங்களில் பல பதிவுகள் ஏற்றப்பட்டுள்ளன. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் பட்டாசு வெடித்து கர்ப்பிணி யானை இறந்ததாக இந்த பதிவுகள் கூறுகின்றன. விஸ்வாஸ் செய்தி விசாரணையில், மலப்புரத்தில் இருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள பாலக்காட்டில் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.
உரிமைகோரல்:
பாத் மீ என்ற பேஸ்புக் பக்கம் ஜூன் 3 அன்று ஒரு இடுகையைப் பகிர்ந்து கொண்டது. இந்த இடுகையில் யானை நீரில் நிற்கும் புகைப்படம் இருந்தது. புகைப்படத்தில் உரை எழுதப்பட்டிருந்தது. “காட்டு யானை கேரளாவின் மல்லபுரத்தில் உள்ள ஏபிஎல் அருகிலுள்ள கிராமத்திற்குள் காடுகளை விட்டு உணவு தேடி வெளியேறியது. அது தெருக்களில் நடந்து செல்லும்போது, உள்ளூர் மக்களால் பட்டாசு தினித்த அன்னாசிப்பழம் வழங்கப்பட்டது. காயமடைந்த விலங்கு வெல்லியார் நதி வரை நடந்து சென்று நின்றது. அவள் நின்று இறந்தாள் !! இன்சானியத் மார் சுக்கி ஹை ஹாம் இன்சனான் மே.”
இடுகையின் காப்பக பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை:
விஸ்வாஸ் நியூஸ், இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மலப்புரம் உதவி வனத்துறை பாதுகாவலர் திரு இம்தியாஸை தொடர்ப்பு கொண்டோம். அவர் எங்களை பாலக்காடு வனத்துறை அதிகாரியிடம் அனுப்பினார், இந்த சம்பவம் பாலக்காட்டில் நடந்தது என்றும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் நடந்ததாக பாலக்காடு மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.
“யானை பாலக்காடு மாவட்டத்தில் மன்னர்க்காட்டில் வனப்பகுதிகளை ஒட்டிய ஒரு சிறிய நீரோடையில் காணப்பட்டது, மலப்புரத்தில் அல்ல” என்று பாலக்காடு மாவட்ட வன அலுவலர் கூறினார்.
யானை இறந்த சம்பவம் முற்றிலும் விபத்து என்றும் அவர் கூறினார். யானை வெடிபொருட்களால் உணவளிக்கப்பட்டது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.
“அன்னாசி பழத்தினால் இறந்ததா என்று உண்மையில் யாருக்கும் தெரியாது. ஃபேஸ்புக்கில் பல பதிவுகள் அதை அன்னாசிப்பழமாக பரப்பியதால், மக்கள் சீற்றம் அடைந்தனர். பொதுவாக இது காட்டுப்பன்றிகளுக்கு இடும் பொறி. அதில் யானை துரதிர்ஷ்டவசமாக மாட்டிக்கொண்டது,” என்றும் அவர் கூறினார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் பாலக்காட்டில் இந்த சோக சம்பவம் நடந்ததாக ட்வீட் செய்திருந்தார்.
பல சமூக ஊடக பயனர்கள் இந்த சம்பவம் மலப்புரத்தில் நடந்ததாகக் கூறி தவறான பதிவோடு பகிர்கின்றனர். அவற்றில் ஒன்று பாத் மீ என்ற பேஸ்புக் பக்கம். இப்பக்கத்தை 147 பேர் பின்தொடர்கின்றனர்.
निष्कर्ष: முடிவுரை: கர்ப்பிணி யானை பட்டாசு சாப்பிட்டு இறந்தது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில், மலப்புரம் அல்ல.
- Claim Review : காட்டு யானை கேரளாவின் மல்லபுரத்தில் உள்ள ஏபிஎல் அருகிலுள்ள கிராமத்திற்குள் காடுகளை விட்டு உணவு தேடி வெளியேறியது. அது தெருக்களில் நடந்து செல்லும்போது, உள்ளூர் மக்களால் பட்டாசு தினித்த அன்னாசிப்பழம் வழங்கப்பட்டது. காயமடைந்த விலங்கு வெல்லியார் நதி வரை நடந்து சென்று நின்றது. அவள் நின்று இறந்தாள்
- Claimed By : Baat मी
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.