Fact Check: சமீபத்தில் டொனால்ட் டிரம்பின் வெற்றி உரையில் மக்கள் கூட்டம் பிரதமர் மோடியின் பெயரை முழக்கமிடவில்லை, பொய்யான கூற்று வைரலானது
விஸ்வாஸ் நியூஸ் விசாரித்து, இந்தக் கூற்று தவறானது என்று கண்டறிந்தது. ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரின் பெயரை குறிப்பிடப்பட்டபோது அவருக்கு ஆதரவாக மக்கள் கூட்டம் ‘பாபி-பாபி’ என்று கோஷமிட்டனர், மாறாக ‘மோடி மோடி’ என்றல்ல.
- By: Pallavi Mishra
- Published: Nov 18, 2024 at 01:01 PM
புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்ப உள்ளார். தனது வெற்றி உரையில், தனது ஆதரவாளர்கள் மற்றும் அணியினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில், டிரம்பின் வெற்றி உரையின் போது மக்கள் கூட்டம் ‘மோடி மோடி’ என்று கோஷமிட்டனர் என்ற கூற்றுடன் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஸ்வாஸ் நியூஸ் விசாரித்து, இந்தக் கூற்று தவறானது என்று கண்டறிந்தது. ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரின் பெயரை குறிப்பிடப்பட்டபோது அவருக்கு ஆதரவாக மக்கள் கூட்டம் ‘பாபி-பாபி’ என்று கோஷமிட்டனர், மாறாக ‘மோடி மோடி’ என்றல்ல.
வைரலான பதிவில் என்ன இருக்கிறது?
“டொனால்ட் ஜான் டிரம்பின் வெற்றி உரையின் போது ‘மோடி மோடி’ என்று மக்கள் முழக்கமிடுகிறார்கள்” என்ற தலைப்புடன் நவம்பர் 6, 2024 அன்று, முகநூல் பயனர் ‘தி லெஜண்ட் லாமா’ வைரலான இந்த காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
விசாரணை
வைரலான இந்த கூற்றை விசாரிக்க, நாங்கள் டொனால்ட் டிரம்பின் முழு உரையையும் கேட்க முடிவு செய்தோம். நவம்பர் 6, 2024 அன்று நடந்த முழுமையான உரையை ABC செய்திகளின் யூடியூப் சேனலில் (வலையொளி தளத்தில்) நாங்கள் கண்டோம். இந்த உரையில் 19:36 நிமிடங்களில், “இவர்கள் அற்புதமான மனிதர்கள். ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் போன்ற சில பெயர்களை நாம் இங்கே சேர்க்கலாம். அவர் இங்கு வந்து அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக்க உதவப் போகிறார். இப்போது அவர் ஒரு சிறந்த நபர் மற்றும் அவர் உண்மையில் அதையே பொருட்ப்படுத்துகிறார்; அவர் சில விஷயங்களைச் செய்ய விரும்புகிறார், அதற்கு நாங்கள் அவரை அனுமதிக்கப் போகிறோம். ஆனால், பாபி, எண்ணெயை என்னிடம் தந்து விடுங்கள். எங்களிடம் அதிக திரவ தங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளது, உலகில் உள்ள எந்த நாட்டையும் விட எங்களிடம் அதிக திரவ தங்கம் உள்ளது.-சவுதி அரேபியாவை விட அதிகம். ரஷ்யாவை விட எங்களிடம் அதிகமாக உள்ளது. பாபி, திரவ தங்கத்திலிருந்து விலகி இருங்கள். அதைத் தவிர, ஒரு நல்ல நேரத்தைப் பாருங்கள், பாபி. இந்த நேரத்தில் மக்கள் கூட்டம் ‘பாபி பாபி’ என்று கோஷமிடத் தொடங்குகின்றனர் என்று டிரம்ப் குறிப்பிடுகிறார்.
ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் என்று குறிப்பிடப்பட்டபோது, மக்கள் கூட்டம் ‘பாபி பாபி’ என்று கோஷமிடத் தொடங்கினர் என்பதை உறுதிப்படுத்தும் நியூஸ்வீக்கில் முழுப் பேச்சுப் பிரதியையும் நாங்கள் மதிப்பாய்வு செய்தோம்.
டெய்னிக் ஜாக்ரானில் சர்வதேச விவகாரங்களை உள்ளடக்கிய மூத்த பத்திரிக்கையாளர் ஜே.பி. ரஞ்சனையும் நாங்கள் தொடர்பு கொண்டோம், அவர் ‘பாபி’ என்று அழைக்கப்படும் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியருக்காக இந்த கோஷங்கள் எழுப்பப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் யார்?
ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் ஒரு அமெரிக்க அரசியல்வாதி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர், நன்கு அறியப்பட்ட கென்னடி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் 1968-ல் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த ராபர்ட் எஃப் கென்னடியின் மகனும், அமெரிக்காவின் 35-வது ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியின் மருமகனும் (உடன்பிறந்தார் மகன்) ஆவார். ஆரம்பத்தில், கென்னடி ஜூனியர் 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தனது விருப்பத்தை அறிவித்தார், ஆனால் பின்னர் டொனால்ட் டிரம்பை ஆதரித்தார்.
தவறான கூற்றுடன் இந்த வைரலான காணொளியைப் பகிர்ந்த ‘தி லெஜண்ட் லாமா’ என்ற பயனருக்கு 13000க்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
முடிவுரை: விஸ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில் இந்தக் கூற்று பொய்யானது என்று தெரியவந்தது. ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரின் பெயர் குறிப்பிடப்பட்டபோது மக்கள் கூட்டம் ‘மோடி-மோடி’ என்று முழக்கமிடாமல் ‘பாபி-பாபி’ என்று முழக்கமிட்டனர்.
- Claim Review : டொனால்ட் டிரம்பின் வெற்றி உரையில் பிரதமர் மோடியின் பெயரைக் கோஷமிட்ட கூட்டம்
- Claimed By : முகநூல் பயனர் 'தி லெஜண்ட் லாமா'
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.