Fact Check: முழங்கால் வலி பற்றி முதல்வர் யோகி பேசிய வைரல் க்ளிப் போலியானது
விஷ்வாஸ் நியூஸ் வைரலான பதிவை ஆய்வு செய்து அது போலியானது என கண்டறிந்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்பிலான இந்த வைரல் வீடியோ ஒரு டீப்ஃபேக் ஆகும். அசல் வீடியோவில், அவர் உத்தரப் பிரதேசத்தில் சுற்றுலா குறித்து பேசியிருக்கிறார்.
- By: Ashish Maharishi
- Published: Oct 9, 2024 at 11:48 AM
புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முழங்கால் வலியைப் பற்றி விவாதித்து மேலும் தகவலுக்கு வலைப்பதிவைப் பார்வையிடுமாறு பார்வையாளர்களை ஊக்குவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விஷ்வாஸ் நியூஸ் வைரலான பதிவை ஆய்வு செய்து அது போலியானது என கண்டறிந்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்பிலான இந்த வைரல் வீடியோ ஒரு டீப்ஃபேக் ஆகும். அசல் வீடியோவில், அவர் உத்தரப் பிரதேசத்தில் சுற்றுலா குறித்து பேசியிருக்கிறார்.
வைரலாவது என்ன?
ஸ்போர்ட் 45 என்ற ஃபேஸ்புக் பக்கம் செப்டம்பர் 30 அன்று இந்த வீடியோவை வெளியிட்டது. இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் முழங்கால் வலியிலிருந்து விடுபடுவது பற்றி பேசுவதைக் காண முடிகிறது.
மற்ற பயனர்களும் வைரலான வீடியோவை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகின்றனர். இடுகையின் ஆர்க்கைவ்டு பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
முதல்வர் யோகியின் வைரலான வீடியோவை விசாரிக்க விஷ்வாஸ் நியூஸ் முதலில் கூகுள் லென்ஸை பயன்படுத்தியது. வைரல் வீடியோவின் பல முக்கிய பிரேம்களை நாங்கள் பிரித்தெடுத்து அவற்றைத் தேடினோம். எக்ஸ் மற்றும் யூடியூபில் அசல் வீடியோவைக் கண்டோம்.
சத்ய சங்கம் என்கிற பெயரில் ஒரு எக்ஸ் ஹேண்டில், 27 செப்டம்பர் 2024 அன்று அசல் வீடியோவை வெளியிட்டுள்ளது. உலக சுற்றுலா தினத்தையொட்டி படமாக்கப்பட்டது என்று அதில் எழுதப்பட்டுள்ளது. அதில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது, “இன்று உத்தரபிரதேசம் முழு நாட்டை மட்டுமல்ல முழு உலகையும் சுற்றுலாவை நோக்கி ஈர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், கடந்த ஆண்டு 46 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு மத, ஆன்மீக மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா அல்லது பாரம்பரிய சுற்றுலாத் தளங்களுக்கு வருகை தந்துள்ளனர். இந்த சுற்றுலாப் பயணிகள் உத்திரபிரதேசத்திற்கு சுற்றுலாவிற்கு வருவதோடு மட்டுமல்லாமல், உத்தரபிரதேசத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர். இது பாரம்பரியம் மற்றும் முன்னேற்றம் இரண்டுக்குமான சிறந்த ஒருங்கிணைப்பை அதிகரிக்க உதவுகிறது. இன்று காசி பாபா விஸ்வநாதரின் புனித உறைவிடம் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.”
மேலும், ஜனசத்தாவின் யூடியூப் சேனலிலும் முதல்வர் யோகியின் அசல் வீடியோவை கண்டோம். இது செப்டம்பர் 27 அன்று பதிவேற்றப்பட்டது, இதிலும் முதல்வர் யோகி உத்தரபிரதேசத்தின் சுற்றுலா தலங்களைப் பற்றி பேசுவதைக் கேட்க முடிகிறது.
வைரல் வீடியோ தொடர்பாக எங்கள் கூட்டாளர் DAU-ஐ (MCA இன் முயற்சி) தொடர்பு கொண்டோம். அவர்கள் நடத்திய விசாரணையில், அதில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் குரல் போலியானது என்பது தெரியவந்தது. புலனாய்வுக்காக, TrueMedia, Hiya மற்றும் Hive கருவிகளை DAU பயன்படுத்தியது.
விஷ்வாஸ் நியூஸ், மேலும் உறுதிப்படுத்துவதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமாரை தொடர்பு கொண்டது. வைரலாகும் அந்த வீடியோ போலியானது என்றார் அவர்.
விஷ்வாஸ் நியூஸிடம் பேசிய பாஜகவின் ஐடி மற்றும் சமூக ஊடக உறுப்பினர் சசி குமார், முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்பிலான வைரல் வீடியோ போலியானது என்று கூறினார்.
விசாரணையின் முடிவில், போலி வீடியோவை வெளியிட்ட பயனரின் சுயவிவரத்தை ஸ்கேன் செய்தோம். அவரைப் பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
முடிவு: விஷ்வாஸ் நியூஸ் புலனாய்வு செய்ததில், முழங்கால் வலியை குணப்படுத்துவதை ஊக்குவிக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வைரலான வீடியோ போலியானது என்று கண்டறியப்பட்டது.
- Claim Review : முழங்கால் வலி குறித்த முதல்வர் யோகியின் வீடியோ
- Claimed By : பேஸ்புக் பயனர்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.