X
X

Fact Check: ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோ வைரலாகிறது

புது தில்லி விஷ்வாஸ் நியூஸ் – ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் இடம்பெறும் வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது, அதில் அவர் பாரதிய ஜனதா கட்சி (BJP) குறித்து, வாக்குகளைப் பெறுவதற்கான வெற்று முழக்கங்களை நம்பியிருக்கும் கட்சி என்று முத்திரை குத்தி பேசுவதைக் கேட்க முடிகிறது. பஜன் லால் பாஜகவை இவ்வாறு கூறியிருப்பதாக சமூக ஊடகப் பயனர்கள் இந்தக் கிளிப்பை பரவலாகப் பரப்பி வருகின்றனர்.

விஷ்வாஸ் நியூஸ் வைரலான வீடியோவை ஆராய்ந்து, பஜன் லாலின் பேச்சு எடிட்டிங் செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது, இதன் விளைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சி அதன் அசல் அர்த்தத்தை மாற்றியிருக்கிறது. எடிட் செய்யப்படாத காட்சிகளை ஆய்வு செய்ததில், பஜன் லால், பாஜக வெற்று முழக்கங்கள் மூலம் வாக்குகளைப் பெறுவதாக எதிரணியினர்  கூறிய குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளது தெரியவந்தது. எங்கள் விசாரணை வைரலான போஸ்ட் தவறானது என்று உறுதியாகக் கூறுகிறது.

வைரலாவது என்ன?

ஃபேஸ்புக் பக்கத்தில் RJ.55.Pokaran.city ஒரு வீடியோவை, பதிவேற்றம் செய்து “பாரதிய ஜனதா கட்சி அதன் வெற்று முழக்கங்களின் அடிப்படையில் வாக்குகளைக் கேட்கிறது: முதல்வர் பஜன்லால் சர்மா” என்று குறிப்பு எழுதியுள்ளது. இந்த பதிவு உண்மை என கருதி மற்ற பயனர்களும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

விசாரணை :

வைரலான வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, விஷ்வாஸ் நியூஸ் பல நடவடிக்கைகளைத் தொடங்கியது. வீடியோவிலிருந்து கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்து, கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி, ரிவர்ஸ் இமேஜ் தேடல்களை நடத்தினோம், மேலும் பிப்ரவரி 22 அன்று யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோவைக் கண்டறிந்தோம், அதில் முதல்வர் பஜன் லாலின் உரை இடம்பெற்றுள்ளது. வீடியோவில், பஜன் லால், “எதிரிகள், பிரிவு 370ஐ நீக்க முடியாது. இரத்த ஆறுகள் ஓடும். இது பாரதிய ஜனதா கட்சியின் வெற்று முழக்கம். வெற்று கோஷங்களின் அடிப்படையில் வாக்கு கேட்கிறார்கள் என்று சொன்னார்கள். நாங்கள் எதைச் சொன்னாலும் அது வெற்று முழக்கமாக இருக்காது என்று நாங்கள் சொல்கிறோம்.” என்று பேசியுள்ளார்.

https://youtu.be/fcnbAvjgZyk

மேலும் விசாரணையில், விஷ்வாஸ் நியூஸ் வீடியோவின் அசல் மற்றும் நீளமான பதிப்பை RKG TV, என்ற யூடியூப் சேனலில் கண்டறிந்தது இது பிப்ரவரி 21 அன்று நேரலையில் ஒளிபரப்பாகியுள்ளது. பஜன் லாலின் பேச்சு 24:40 நேரப்பகுதியில் தொடங்குகிறது, வைரல் கிளிப்பைப் போன்ற பகுதி தோன்றும் பகுதி வீடியோவில் 35:17 நிமிடங்கள் நேரப்பகுதியில் இடம்பெறுகிறது.

வீடியோவின் தலைப்பு இது பிப்ரவரி 21 அன்று நடந்த நாகலங் மந்திர் பிரான் பிரதிஷ்டா மஹோத்சவ் நிகழ்ச்சியில் முதல்வர் பஜன் லால் சர்மா கலந்துகொண்டார் என்பதை வெளிப்படுத்தியது. பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி நடைபெறும் புதிதாக கட்டப்பட்ட, பார்மர் மாவட்டம், குடமலானி, அல்புரா தோராவில் உள்ள நாகலங் ஆலம்ஜி மகாராஜ் கோவிலின் மூன்று நாள் பிரதிஷ்டை திருவிழாவின் துவக்கத்தை குறிக்கிற நிகழ்வு. முதலமைச்சர் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

விஷ்வாஸ் நியூஸ், தனது விசாரணை நடவடிக்கையில், தெளிவு பெறுவதற்காக ராஜஸ்தானில் உள்ள டைனிக் ஜாக்ரனின் பணியகத் தலைவர் நரேந்திர ஷர்மாவை தொடர்பு கொண்டது. இந்த வைரல் வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதைக் குறிப்பிட்டு பாஜக குறித்து முதல்வர் பஜன் லால் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என்பதை சர்மா உறுதிப்படுத்தினார்.

இறுதியாக RJ.55.Pokaran.city என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ஸ்கேன் செய்தோம். இந்தப் பக்கம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து 3,000க்கும் அதிகமான பின்தொடர்பாளர்களுடன் இயங்கி வருவது கண்டறியப்பட்டது.

முடிவு: விஷ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில் வைரலான போஸ்ட் தவறானது என கண்டறியப்பட்டது. ராஜஸ்தான் முதல்வர் பஜன் லாலின் உரையின் ஒரு பகுதி எடிட் செய்யப்பட்டு, தவறான கூற்றுகளுடன் வைரலானது தெரியவந்தது.

  • Claim Review : பஜன் லால் பாஜகவை இவ்வாறு கூறியிருப்பதாக சமூக ஊடகப் பயனர்கள் இந்தக் கிளிப்பை பரவலாகப் பரப்பி வருகின்றனர்.
  • Claimed By : ஃபேஸ்புக் பக்கம் RJ.55.Pokaran.city
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later