Fact Check: வைரல் வீடியோவில் காணப்படும் நடனப் பெண் சம்பல்பூர் கலெக்டர் அனன்யா தாஸ் அல்ல
- By: Pallavi Mishra
- Published: Feb 6, 2024 at 05:07 PM
புது தில்லி விஷ்வாஸ் நியூஸ் – மேரி சௌகத் பே சல் கர் ஆஜ் ஸ்ரீ ராம் ஆயே ஹைன்” பாடலுக்கு ஒரு பெண் நடனமாடும் 2 நிமிடம் மற்றும் 19 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பல சமூக ஊடக பயனர்கள் நடனமாடும் பெண் சம்பல்பூர் கலெக்டர் அனன்யா தாஸ் என்று கூறி வருகின்றனர்.
ஆனால், விஷ்வாஸ் நியூஸ், தனது விசாரணையில், வீடியோ தவறான கூற்றுகளுடன் பரவுகிறது என்று உறுதி செய்துள்ளது. ஐஏஎஸ் அனன்யா தாஸ், நடன வீடியோவுடன் தன்னை தொடர்புபடுத்திக் கூறுவது பொய்யான கூற்று என்று உறுதிபடுத்தியுள்ளார்.
எது வைரலாகிறது?
ஜனவரி 29 அன்று வீடியோவைப் பகிர்ந்த, ஃபேஸ்புக் பயனர் பீம்சென் கௌதம், “சம்பல்பூர் கலெக்டர் திருமதி அனன்யா தாஸ் (ஐஏஎஸ்) அவர்களின் நடன நிகழ்ச்சி, ஜெய் ஸ்ரீ ராம், அவர் தற்போது சம்பல்பூர் (ராஜஸ்தான்) கலெக்டராக உள்ளார்” என்று எழுதியுள்ளார்.
விசாரணை:
வீடியோவிலிருந்து கீஃப்ரேம்களின் கூகுள் ரிவர்ஸ் படத் தேடலுடன் எங்கள் விசாரணையைத் தொடங்கினோம். ஜனவரி 8, 2024 அன்று வீடியோ கன்டென்ட் க்ரியேட்டர் மிருதுளா மகாஜனின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதே சேனலில் அவர் இடம்பெறும் பல வீடியோக்களுடன் சேனலில் வழங்கப்பட்ட தகவல், அந்த நடனக் கலைஞர் மிருதுளா மகாஜன் என்பதை அடையாளம் காட்டியது.
ஐஏஎஸ் அனன்யா தாஸ் குறித்த மேலதிக விசாரணையில், அவர் கைத்தறி ஜவுளி மற்றும் கைவினைத் துறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதும், அதே நேரத்தில் மயூர்பஞ்ச் கலெக்டர் அக்ஷய் சுனில் அகர்வால் சம்பல்பூர் கலெக்டராக பொறுப்பேற்றார் என்பதும் தெரிகிறது.
ஐஏஎஸ் அனன்யா தாஸ், ஜனவரி 27, 2024 தேதியிட்ட தனது ட்வீட்டில், வீடியோவில் உள்ள நடனக் கலைஞர் தான் அல்ல என்று கூறி, வைரலான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ட்வீட்டில், “நிஜமாகவே ஒரு நல்ல கலைத்திறம் – துரதிர்ஷ்டவசமாக அது என்னுடையது அல்ல” என்று உள்ளது. இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரி அனன்யா தாஸிடம் இருந்து நேரடி உறுதிப்படுத்தல் பெறப்பட்டது, அவர் வீடியோவில் இடம்பெற்ற பெண் அல்ல என்று உறுதி செய்தார்.
தவறான கூற்றுக்களுடன் வீடியோவைப் பரப்புவதற்குப் பொறுப்பான பயனரான பீம்சென் கெளதமின் பேஸ்புக் சுயவிவரத்தை ஆய்வு செய்ததில், அவர் ராஜஸ்தானின் கோட்டாவில் வசிப்பதாகவும், அவருக்கு சுமார் 800 பின்தொடர்பாளர்கள் இருப்பதாகவும் தெரியவந்தது.
முடிவு: வைரலான வீடியோவில் காணப்பட்ட பெண் சம்பல்பூர் கலெக்டர் அனன்யா தாஸ் அல்ல. இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை ஐஏஎஸ் அதிகாரியே மறுத்துள்ளார். வீடியோவில் உள்ள உண்மையான நடனக் கலைஞர் மிருதுளா மகாஜன் என்பது அவரது யூடியூப் சேனலில் அடையாளம் காணப்பட்டது.
- Claim Review : சம்பல்பூர் கலெக்டர் திருமதி அனன்யா தாஸின் (IAS) நடன நிகழ்ச்சி
- Claimed By : ஃபேஸ்புக் பயனர் பீம்சென் கௌதம்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.