உண்மை சரிபார்ப்பு: ஷேக் ஹசீனா 2019 டெல்லி பயணத்தின் போது சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார் என்ற தவறான கூற்றுடன் புகைப்படம் பகிரப்பட்டது
- By: Ashish Maharishi
- Published: Apr 24, 2023 at 02:56 PM
புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் புகைப்படம் பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில், ஷேக் ஹசீனாவுக்கு அருகில் சோனியா காந்தி அமர்ந்திருப்பதைக் காணலாம். இந்தப் புகைப்படம், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, வங்கதேசத்துக்கு வெளிநாட்டுப் பயணமாக சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
விஸ்வாஸ் நியூஸ் இந்த வைரலான இடுகையின் உண்மைத்தன்மையை சரிபார்த்தபோது இந்த கூற்று தவறானது என்பது வெளிப்பட்டது. உண்மையில், இது 2019 ஆம் ஆண்டு, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லிக்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் பிரதமராக பதவியில் இல்லை. காங்கிரஸ் தலைவர் பதவியில் சோனியா காந்தி இருந்தார்.
உரிமைகோரல்:
“இந்தப் படம் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, வங்கதேசத்துக்கு வெளிநாட்டுப் பயணத்தில் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட படம்” என்ற கூற்றுடன் மார்ச் 28 அன்று, ‘ஹிமாச்சல் நியூஸ் நெட்வொர்க்‘ என்ற முகநூல் பக்கத்தில், ஒரு படத்தை பதிவேட்டியிருந்தது.
இந்த இடுகையை உண்மை என்று நம்பி, மற்ற பயனர்களும் அவரவர்களுடைய கணக்குகளில் இருந்து அதை வைரலாக பரப்பி வருகின்றனர். இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே நீங்கள் அணுகலாம்.
விசாரணை:
வைரலான இந்த பதிவின் உண்மைத் தன்மையை சரிபார்க்க விஸ்வாஸ் நியூஸ் முதலில் கூகுள் லென்ஸைப் பயன்படுத்தியது. இதன் மூலம், நேஷனல் ஹெரால்டு இணையதளத்தில் வெளியான செய்தியில் இதே போன்ற ஒரு படத்தை நாங்கள் கண்டோம். அக்டோபர் 6, 2019 அன்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கையானது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தனர் என்று கூறுகிறது. முழு செய்தியையும் இங்கே படிக்கலாம்.
தேடுதலின் போது, இந்த சந்திப்பின் காணொளி ஒன்று ஏபிபி நியூஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் காணக் கிடைத்தது. அது அக்டோபர் 6, 2019 அன்று பதிவேற்றப்பட்டிருந்தது. நான்கு நாள் பயணமாக ஹசீனா இந்தியா வந்திருப்பதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டது. அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பான காணொளி ஒன்று காங்கிரஸின் யூடியூப் சேனலிலும் காணப்பட்டது. இது அக்டோபர் 6, 2019 அன்று பதிவேட்டப்பட்டுள்ளது.
விசாரணையை முன்னெடுத்துச் செல்ல, விஸ்வாஸ் நியூஸ் காங்கிரஸின் சமூக ஊடக தேசிய ஒருங்கிணைப்பாளர் நிதின் அகர்வாலை தொடர்புகொண்டது. வைரலான படம் பழையது என விவரித்த அவர், சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங்கின் புகழைக் கெடுக்கவே “ட்ரோல் ஆர்மி” இதைச் செய்கிறது என்று கூறினார். இந்தப் படம் மன்மோகன் சிங் பிரதமராக இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
விசாரணையின் முடிவில் ‘ஹிமாச்சல் நியூஸ் நெட்வொர்க்’ என்ற முகநூல் பக்கம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த பக்கம் இமாச்சல பிரதேசத்தில் இருந்து புதுப்பிக்கப்படுள்ளது (பதிவேட்டப்பட்டுள்ளது) என்று அறிய வருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தப் பக்கத்தை பின்தொடர்கின்றனர். இந்தப் பக்கம் செப்டம்பர் 18, 2013 அன்று உருவாக்கபட்டுள்ளது.
முடிவுரை: விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் வைரலான இந்த பதிவின் கூற்று ஆதாரமற்றது என்று கண்டறியப்பட்டது. முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் உள்ள ஷேக் ஹசீனாவின் புகைப்படம் 2019 இல் வங்காளதேச பிரதமரின் டெல்லி பயணத்திலிருந்து எடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தின்போது இந்தப் புகைப்படம் கிளிக் செய்யப்படவில்லை. வைரலான கூற்று தவறானது.
- Claim Review : ஷேக் ஹசீனா, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை அவர் பிரதமராக இருந்தபோது, வங்கதேசத்துக்கு வெளிநாட்டுப் பயணமாக சென்றிருந்தபோது சந்தித்தார்.
- Claimed By : முகநூல் பக்கம்: ஹிமாச்சல் செய்தி நெட்வொர்க்
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.